தந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்

அன்னையர் தினம் எப்போதுமே பெரும் பரபரப்புக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. அதைக் கொண்டாடி முடித்த கையுடன் ஜூன் மாதம் மற்றொரு முக்கிய தினம் வரும். குடும்பத்தில் இருக்கும் முக்கியமான நபரைச் சிறப்பிக்கும் நாள் அது. தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று வருவது வழக்கம். இவ்வாண்டு ஜூன் 16ஆம் தேதியன்று தந்தையர் தினம் வருகிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஹீரோவாக இருக்கும் அப்பாவுக்காக நீங்கள் என்ன செய்யலாம் என்பதற்கு இதோ சில யோசனைகள்.

1)

 

பல மணிநேரம் வேலையிலேயே மூழ்கியிருந்து அசதியாக வீடு திரும்பும் தந்தையர்களுக்கு ஓய்வைவிட வேறு சிறந்த மருந்து இல்லை. அவர்களின் களைப்பைப் போக்கி அவர்களை ஆழமான தூக்கத்திற்குக் கொண்டு செல்ல நறுமணத்துடன் கூடிய வெப்பமான கண்திரை அல்லது உடற்பிடிப்பு சாதனம் (scented steam eye masks or a massager) உதவும். படம்: ஓசிம் (OSIM)

2) கடந்த காலத்தை நினைவூட்ட

‘மெர்டேக்கா’ தலைமுறையைச் சேர்ந்த பல தந்தையர்களுக்குப் பழைய கதைகளை நினைவுகூர மிகவும் பிடிக்கும். அதிலும் முன்பு கம்பத்தில் வசித்தவர்களாக உங்கள் தந்தை இருந்திருந்தால் அவரின் நினைவலைகளைத் தூண்டும் வகையில் ‘பூலாவ் உபின்’ பல அனுப

உபின் தீவு
உபின் தீவு

வங்களை அளிக்கும். மீன் பிடித்தல், சைக்கிள் ஓட்டுவது, ‘சேக் ஜாவா வெட்லேண்ட்’டுக்குச் செல்லுதல் போன்ற பற்பல விறுவிறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கம்பத்துச் சூழலுக்கு மீண்டும் அவர்களை அழைத்துச் செல்ல இதைவிடச் சிறந்த இடம் வேறில்லை. 

3)

சொகுசுக் கப்பலில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க 
சொகுசுக் கப்பலில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க 

‘ஏகன் பேரடைஸ்’ போன்ற சொகுசு கப்பலில் அறையில்லா இடத்தை (with no cabin) பிடிப்பதற்கான பயணச்சீட்டு விலை வார இறுதி நாட்களன்று ஓர் ஆளுக்கு $48க்கு விற்கப்படும். அங்குள்ள சொகுசு அறையில் ஓர் இரவு தங்குவதற்கான விலை $40. அந்த அறையில் இரண்டு பேர் தங்கலாம். கப்பலில் உடல் பிடிப்பு மையங்கள், உணவகங்கள், கசினோ போன்ற வசதிகளும் உள்ளன.
படம்: PIXABAY

4) உடற்கட்டைப் பேணும் தந்தைக்கு

உடற்கட்டைப் பேணும் தந்தைக்கு
உடற்கட்டைப் பேணும் தந்தைக்கு

கட்டான உடலை வைக்க விரும்பும் தந்தையருக்கு தம்முடைய உடல் நலத்தைக்  காக்க உதவுகின்ற இந்த கடிகாரம் ஒருவர் எவ்வளவு நேரம் தூங்கியுள்ளார், எத்தனை படிகள் நடந்துள்ளார் போன்றவற்றைத் தொடர்ந்து காட்டும். இதன் மூலம் தம்முடைய உடற்பயிற்சி இலக்கை அடைவதுடன் உடலைக் குறைக்கவும் இது ஊக்கமூட்டும். 
படம்: கார்மின்

5) உணவுப்பிரியராக இருந்தால்

மாவ் ‌‌‌ஷான் வாங்
மாவ் ‌‌‌ஷான் வாங்

தந்தையருக்குப் பிடித்தமான உணவை வாங்கிக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய மனம் நிறைவதுடன் வயிறும் நிறையும்.  பிரம்மாண்டமான உணவகங்கள் ஒரு பக்கம் இருக்க வெறும் மூன்று வெள்ளியில் ருசியான பிரியாணியைப் பரிமாறி அசத்துகின்றது  ‘நவாப்ஸ் கிச்சன்’.
அத்துடன் அப்பா ஒரு டுரியான் பிரியர் என்றால் மேலும் தித்திப்புதான். ஹவ்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஹாவ் சி லியூ லியன்’ (Hao Chi Liu Lian) டுரியான் கடையில் ‘மாவ் ‌‌‌ஷான் வாங்’ டுரியான் தற்போது மிகக் குறைந்த விலையில் $5க்கு விற்கப்படுகிறது. 

6) கம்பியில்லா இசைக் கருவிகள்

கம்பில்லா இசைக்கருவி
கம்பில்லா இசைக்கருவி

தந்தை ஓர் இசைவிரும்பியாக இருந்தால் சில சமயம் இசை கேட்டபடி உடற்பயிற்சியிலோ வேலை யிலோ மும்முரமாக ஈடுபட்டிருக்கலாம். தம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கவனிக்காமல் இருக்கலாம். இக்கம்பியில்லா இசைக்காதணி அந்நிலைமையைத் தடுக்க உதவும். இக்கருவி சுற்றி நடப்பதைக் கேட்பதற்கும் உதவும். இதன் மூலம் மெதுவோட்டம் ஓடிக்கொண்டே சாலைகளைக் கவனித்துக்கொள்ளலாம். அதேசமயம் இந்தக் கம்பியில்லா ஒலிக்கருவியை அணிவதால் அதிகமான கைகால் அசைவுகளைக் கொண்ட உடற்பயிற்சியை வசதியாகச் செய்யவும் முடியும். படம்: டேயோட்ரோனிக்ஸ் (Taotronics)

7) வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது

வாசனைத் திரவியம்
வாசனைத் திரவியம்

உங்கள் தந்தை அதிகம் கார் ஓட்டுபவராகவோ தம் வேலைக்காக டாக்சி, லாரி ஓட்டுபவராகவோ இருந்தால் அவரின் பயணத்தை இனிதாக்க நீங்கள் நறுமணப் பொருட்களைத் தரலாம். மனம் அமைதி அடைவதுடன் அன் றைய மனவுளைச்சலைப் போக்கிடவும் இது போன்ற வாசனைத் திரவியம் கொண்ட பொருட்கள் அமைந் திருக்கும். 
படம்: xycing 

8) அரும்பொருளகத்திற்கு ஒரு வரலாற்றுப் பயணம்

அரும்பொருளகத்திற்கு ஒரு வரலாற்றுப் பயணம்
அரும்பொருளகத்திற்கு ஒரு வரலாற்றுப் பயணம்

வரலாற்றைப் பற்றி தொடர்ந்து பல மணிநேரம் பேசும் ஒருவராக உங்கள் தந்தை இருந்தால் அவரை சிங்கப்பூரின் கடந்த காலத்திற்குக் கொண்டு செல்ல நம் தேசிய அரும்பொருளகம் ஒரு சிறந்த இடம்.
சிங்கப்பூரின் வரலாற் றைக் கரைத்துக் குடிக்க நமது தேசிய அரும்பொருளகம் ஓர் உகந்த இடம். நுழைவுச்சீட்டு எட்டு வெள்ளியில் விற்கப்படு கின்ற நிலையில் தந்தை யுடனும் குடும்பத்தினர் அனைவருடனும் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாமே! 
படம்: சாவ்பாவ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்

09 Dec 2019

குண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்

நிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்

09 Dec 2019

பார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி