சவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்-

தங்களது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களால் ஒவ்வொரு தலைமுறை யினரும் செதுக்கப்படுகின்றனர். அவரவர் காலங்களின் வாழ்வியல், பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு சவால்

களை எதிர்நோக்குகின்றனர்.ஒவ்வொரு தலைமுறையினரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகள், மனப்போக்கு, ஊக்கம் ஆகியவற்றின் குறிப்பீடாக பார்க்கப்பட்டு, அந்த அடிப்படையில் அவர்கள் வகைப் படுத்தப்படுகின்றனர்.அந்த வகையில் தற்போதைய சமூக சூழல், மௌனத் தலைமுறை, பேபி பூமர்ஸ், தலைமுறை ‘X’, தலைமுறை ‘Y’,தலைமுறை ‘Z’ என ஐந்து வகை தலைமுறையினரைக் கொண்டுள்ளது.

தலைமுறை ‘X’ வளர்ந்து வரும் சிங்கப்பூரைப் பார்த்து வளர்ந்தவர்கள். இவர்கள்தான் தொழில்நுட்பத்தை முதலில் அறிந்தவர்கள்.இவர்கள் காலத்தில் அறிமுகமானதொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு,

தங்கள் வாழ்க்கைமுறையை அதற்கு ஏற்பமாற்றிக்கொண்டார்கள்.

தலைமுறை ‘Y’ அல்லது மில்லேனியல்ஸ். சிறுவயது முதலே தொழில்நுட்பத்தைப் பற்றி நன்கு அறிந்து, தொழில்நுட்பத்துடன் சுமூகமாக இணைந்துவிட்டார்கள்.தலைமுறை ‘Z’ தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டத்தில் பிறந்தவர்கள். தங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளுடன் தொழில்நுட்பத்தை இணைத்து மற்ற தலைமுறை களைவிட திறமையாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இவர்களுக்கும் சவால்கள்உள்ளன. தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியினால் இவர்கள் தற்போது புழக்கத்தில் இல்லாத வேலைகளுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும்

சூழ்நிலை நிலைந்திருக்கிறது.

இந்த மூன்று தலைமுறையினரது மனப்போக்கு, எதிர்பார்ப்புகள், வாழ்க்கை இலக்குகள் குறித்து 'தி நியூ ஏஜ் பேரன்ட்ஸ்' இணைய சஞ்சிகை பொது வான கருத்துகளைத் தெரிவிக்கிறது. அதன்படி, கல்வி, வேலை, திருமணம் குறித்து ஒவ்வொரு தலைமுறையினரும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டு உள்ளனர். அதேநேரத்தில், பொதுவான விஷயங்களில் அனைத்துத் தலைமுறை யினரது கருத்துகளும் கொள்கைகளும் ஒரே மாதிரியாக உள்ளன.

ஒரே மாதிரியான கொள்கை

உதாரணத்திற்கு அனைவரும் வேலை, தொழிலின் மீது உள்ள ஆர்வத்தை மிக முக்கியமாக கருதுகிறார்கள்.

வாழ்க்கையில் நல்லநிலைக்கு வந்து, குடும்பத்தினர், நண்பர்களுடன்

நல்லுறவைப் பேணி, சிறந்த கொள்கை

களுடன் வாழ்வதற்கும் அனைத்துத் தலைமுறையினரும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

அனைத்துத் தலைமுறையினரும் திருமணத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள். பெரும்பாலானோர் 27 அல்லது 28 வயதில் திருமணம் செய்துகொள்வது நல்லது என்று நினைக்கிறார்கள். அனைவருமே காதல் திருமணத்தை விரும்புகிறார்கள்.

சமூக வலைத்தளங்களைப் பொறுத்த வரை, பெரும்பாலானோர் ‘வாட்ஸ்ஆப்’, ‘இன்ஸ்டகிராம்’ ஆகிய தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், பெரும்பாலானோர் வாழ்க்கை யில் தங்களுடைய இலக்குகளை அடை தல், வேலையில் சிறந்த நிலையை அடைதல், சுற்றியுள்ளவர்களுடன் நல்ல உறவுகள் வைத்துக்கொள்ளுதல், மகிழ்ச்சியாக வாழ்தல் ஆகிய கொள்கைகளை முக்கிய மாகக் கருதுகின்றனர்.

அனைவரும் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதற்கும் முக்கியத்துவம் தருகிறார்கள்.

இளைய தலைமுறையினர் "கடும்

உழைப்பாளி, மாற்றங்களை ஏற்றுக்

கொள்ளும் தன்மையுடையவர்" போன்ற குணங்களை உடையவர்களாகக் கருதப் படுகின்றனர். ‘Z’ தலைமுறையினர் சுயநலவாதிகள் என்று அனைத்துத் தலைமுறையினரும் கருதுகிறார்கள்.

இளம் தலைமுறையினர் கருத்து

"நான் விரும்புவதைச் செய்வதில் எனக்குத் திருப்தி கிடைக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறினார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்

கழகம் - பஃப்ளோ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயது ர.பிரார்த்தனா சாய்.

"உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவேண்டும் என்று நான் விரும்பு கிறேன். பேசப்படாத க‌ஷ்டங்களை எதிர்த்து அவர்கள் தினமும் போராடி வருவதால் அவர்களுக்கு நாம் ஆதரவு அளிப்பது முக்கியம்," என்று கூறுகிறார் 20 வயது சு.காமினி.

இவர் நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ஆரம்பகால கல்வியுடன் கூடிய தமிழ்ப் பட்டயப் படிப்பின் மூன்றாம் ஆண்டு மாணவி.

மகிழ்ச்சி, பணத்தினால் கிடைக்காது என நம்பும் 19 வயது அல் மரியம் நி‌‌‌ஷா, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பகால கல்வியுடன் கூடிய மூன்றாம் ஆண்டு தமிழ்ப் பட்டயக் கல்வி படிக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு சேமிப்பு அவசியம் என்பது 20 வயது மாணவி கா.வை‌ஷ்ணவியின் கருத்து.

திருமணச் செலவுக்கும் வீடு வாங்கு வதற்கும் வங்கியில் $8,000 வரை சேமிப்பு இருக்கவேண்டும் என கருதும் இவர்,

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பகால கல்வியுடன் கூடிய மூன்றாம் ஆண்டு தமிழ்ப் பட்டயப் படிப்பு பயில்கிறார்.

"எல்லாருமே சமூக வலைத்தளங்களைப் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவதில்லை. செய்திகளையும் தகவல்களையும் அறியவே இன்று பலரும் சமூக வலைத்தளங்களைநாடுகின்றனர்," என்று கூறினார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தானியக்கம் மற்றும் இயந்திர மின்னணுவியல் பொறியியல் துறையில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவரான 25 வயது

மு.கோபி.

"Y", "Z" தலைமுறைகளைச் சேர்ந்த வர்கள் பொறுப்பில்லாமலும் சவால்களை எதிர்கொள்ள இயலாமலும் உள்ளார்கள் எனும் பொதுவான கருத்து நிலவுகிறது.

"ஆனால் அது அப்படியல்ல. இன்றைய இளையர்கள் சவால்களை துணிச்சலுடன் எதிர்நோக்குபவர்கள் என்றார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வணிகம், நிர்வாகத்துறையில் பட்டயப் படிப்பு பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி 18 வயது அ.பஸிலா.

"இன்றைய இளைய தலைமுறை யினர் எதிர்கொள்ளும் சவால்கள், மூத்த தலைமுறையினர் எதிர்நோக்கிய சவால்களிலிருந்து வேறுபடுகின்றன.

"அவற்றைச் சமாளிக்க நாம் கையாளும் மாறுபட்ட உத்திகளால், நம்மால் சவால் களைச் சமாளிக்க முடியவில்லை என்று மூத்த தலைமுறையினர் குறை கூறுகிறார்கள்," என்றார் அவர்.

கா.வை‌ஷ்ணவி

கா.வை‌ஷ்ணவி: பொருத்தமான வாழ்க்கைத் துணையைச் சந்தித்த பிறகு, ஆறு ஆண்டுகள் போதுமான அளவு சேமிக்கவேண்டும். அதன்பின் திருமணம் செய்வதே சரியாக இருக்கும். திருமணச் செலவுக்கும் வீடு வாங்க வும் சேமிப்பு உதவும்.

ர.பிரார்த்தனா சாய்

ர.பிரார்த்தனா சாய்: நான் விரும்புவதைச் செய்வதில் எனக்குத் திருப்தி கிடைக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

அ.பஸிலா

அ.பஸிலா: நாங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் வேறுபட்டவை. இளைய தலைமுறை யினராகிய எங்களால், எங்கள் பாதையில் வரும் சவால்களை நிச்சயம் சமாளிக்கமுடியும் என்பதே உண்மை.

சு.காமினி

சு.காமினி: ஒவ்வொரு மாதமும் ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. கலையில் என் ஆர்வத்தையும் திறன்களையும் வளர்க்க விரும்புகிறேன். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவேண்டும்.

மு.கோபி:

மு.கோபி: சமூக வலைத் தளங்களில் செய்திகளைத் தெரிந்துகொள்கிறேன். சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்திகளைச் சுருக்கமாகவும் விரைவாகவும் அறிந்துகொள்வது சுவாரசியமாக
இருக்கிறது.

அல் மரியம் நி‌‌‌ஷா:

அல் மரியம் நி‌‌‌ஷா: பணத்திற்கும் தொழிலுக்கும் உண்மையாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சக்தியில்லை.அதன் காரணமாக, மற்றவர்களைச் சிரிக்க வைப்பதும் அவர்களை மகிழ்விப்பதும்தான் முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!