இளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

இந்திய இளையர்களைத் தொழில திபர்களாக்கும் இலட்சியத் திட்டம் ‘வணிகவேட்டை’. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தமிழர் பேரவை இளையர் பிரிவு இணைந்து இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தன. இதில் 17 வயது முதல் 27 வயதுடைய இந்திய இளையர்கள் கலந்து கொண்டனர். நான்கு முதல் ஆறு இளைய உறுப்பினர்கள் உள்ள குழுவாக ஒரு குறிப்பிட்ட வியா பாரத்தைத் தொடங்குவது பற்றிய திட்டத்தை உருவாக்குவர்.

பின்னர் அதைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து, ஆய்வு மேற்கொண்டு, ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்கி, அதைத் தொழில் நிபுணர்களிடம் படைக்கவேண்டும். இதற்காக வியாபாரம் தொடர்பிலான பட்ட றைகள் முதலில் தொழில் நிபுணர் களால் நடத்தப்பட்டன. அடுத்து தொழிலதிபர் களுடனும் தொழில் நிபுணர்களுடனும் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது. வணிக வேட்டை பங்கேற்பாளர்களுக்கு இரு நாள் முகாம் மற்றும் கருத் தரங்கு என மொத்தம் நான்கு அங்கங்களைக் கொண்டிருந்தது இத்திட்டம்.

சென்ற மாதம் 22ஆம் தேதி யன்று, ஏழு குழுக்கள் தங்களது வியாபாரத் திட்டங்களைப் படைத் தன. ஒவ்வொரு குழுவிற்கும் அவர்களுடைய திட்டத்தைப் படைக்க 10 நிமிடங்கள் வழங்கப் பட்டன. பிறகு, நடுவர்கள் குழுக் களிடம் திட்டம் குறித்துக் கேள்வி கள் கேட்டனர்.

பிறகு, மூன்று குழுக்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டன. வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதில் பார்வையாளர்களுக்கும் ஒரு சிறு பங்கு இருந்தது. தங்களுக்கு விருப்பமான குழுவைத் தேர்வு செய்து அவர்கள் வாக்களித்தனர்.

பெற்றோர் அவர்களின் பிள்ளைகளுடைய கல்வியின் மீது கவனம் செலுத்த உதவும் செயலியை உருவாக்குவதற்கான திட்டத்தை உருவாக்கிப் படைத்த “எட்யூவி‌‌ஷன்” குழு, வணிகவேட்டை படைப்பு அங்கத் தில் முதல் பரிசான $1,000 ரொக்கத்தைத் தட்டிச் சென்றது. பெற்றோர் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது சிரமமாக உள்ளது.

இந்தச் சிரமத்தை நேரில் கண்கூடாகப் பார்த்தவர் குழுவின் தலைவர் 26 வயது ராஜீ ஹேமந்த் குமார். அவர் துணைப்பாடம் கற்றுக்கொடுத்தபோது பெற்றோர் இப்பிரச்சினை குறித்துத் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அதி லிருந்தே செயலி உருவாக்குவதன் திட்டம் மனதில் ஊற்றெடுக்கத் தொடங்கியதாகவும் கூறினார்.

"பிள்ளைகள் தங்கள் முழு ஆற்றலுடன் படிப்பில் சாதிக்க முடிவதில்லை. எந்தப் பாடத்தில், என்ன சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் என்று அவர்களால் குறிப்பிட்டுக் கண்டறிய இயல்வதில்லை.

இச்சூழ்நிலையில் முடியாது என்று அடிக்கடி பிள்ளைகள் மீது பழிச்சொல் வருகிறது. சில சமயங்களில் பள்ளி ஆசிரியர்கள் மீதும் அப்பழி விழுகிறது. ஆனால் பெற்றோரும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்களால் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கக்கூடிய சிரமங்களைச் சரியாகக் கண்டறிந்து தக்க உதவியை அளிக்க முடிந்தால், பிள்ளைகளால் அவர்களுடைய படிப்பில் முன்னேற்றம் அடைய முடியும்," என்று 26 வயது ஹேமந்த் கூறினார். ஹேமந்த் தற்போது 'ஜேபி மோர்கன்' நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளராகப் பணி யாற்றுகிறார். ஹேமந்த் தன் குழுவினருடன் உருவாக்க விரும்பும் செயலி, பிள்ளைகள் ஒவ்வொரு பாடத்துக்குரிய வகுப்புத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களைப் பெற்றோர் பார்வையிட உதவும். இதனால் பிள்ளைகள் குறிப்பாக எந்தப் பாடத்தில் சிரமப்படுகிறார்கள் என்று சுலபமாகக் கண்டறியலாம்.

பின்னர் பெற்றோர்கள் தங்களால் முடிந்த உதவியை வீட்டிலேயே அளிக்க முடியும். அத்துடன் தகுந்த துணைப்பாட வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி அவர்களுக்கு ஏற்ற உதவியை வழங்கவும் முடியும்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற குழு "இனொவே‌‌ஷன் கராஜ்" என்ற குறியீட்டைக் கொண்டு மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற் றும் கணிதம் போன்ற பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் தங் களுடைய நிறுவனத்தின் திட்டத்தைப் படைத்தது.

மூன்றாம் நிலையைப் பிடித்த குழு, 'மசாலா பே' என்ற உண வகத்தை உருவாக்கும் திட்டத்தைப் படைத்தது. இந்திய கலாசாரத்தை மையமாகக்கொண்டு ஓர் உண வகத்தில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றன. "நம்முடைய இந்திய கலாசாரத்தை சிறப்பிப்பதே எங்களுடைய நோக்கமாகும். நம்முடைய அனுபவங்களைப் பயன்படுத்தி இந்தியர்களுக்கும் மற்ற இனத்தவர்களுக்கும் இந்திய கலாசாரத்தின்மீது ஓர் ஆழ்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்று கூறினார் இக்குழுவின் உறுப்பினரான சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் பட்டக் கல்வியின் மூன்றாம் ஆண்டில் பயிலும் 23 வயது சித்தி நூர்ஐனி அப்துல் ஹலீம்.

'வணிகவேட்டை' தொடர்பில் பேசிய ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கல்யாணி ரவிந்திரன், "புதிய வியாபாரம் தொடங்க ஆர்வமுள்ள இந்திய இளையர் களுக்கு வணிகவேட்டை திட்டம் ஊக்குவிக்கிறது.

"இத்திட்டத்தை அடுத்து உடனே வியாபாரம் தொடங்கவேண்டுமென்று இல்லை. இதற்குப் பிறகு அவர்கள் புத்தாக்கச் சிந்தனையுடன் செயல்பட்டு சிறந்த தீர்வுகளைக் கண்டறிய உற்சாகம் அடைவதே திட்டத்தின் இலக்காகும்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!