வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்

தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வது மட்டும் ஆசிரியர்களின் பணியல்ல; மாணவர்களை ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தயார்செய்யும் வகையில் திறன் களைப் பெறச் செய்யவும் வேண்டும். இதனைச் சென்ற வாரம் தேசிய கல்விக் கழகத்தில் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தமது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இலக்கணமாகச் செயல்பட்டு கல்வித் துறைக்கான தலைசிறந்த இளையர் விருதைப் பெற்றவர்தான் 31 வயது குமாரி அர்ஜுனன் அபிராமி.

மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்றுக்கொடுப்பதுடன் ஆசிரியர் பணி யில் பெரும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டிய தலைசிறந்த இளம் ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மொத்தம் 298 பள்ளிகளைச் சேர்ந்த 1,380 ஆசிரியர்கள் இவ்விருதுக்காக முன்மொழியப்பட்டனர். இவர்களில் ஆறு ஆசிரியர்கள் இவ்விருதினைப் பெற்றனர். சிஹெச்ஐஜே (கெல்லொக்) தொடக் கப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் கணிதமும் ஆங்கிலமும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

தொடக்கப் பள்ளிப் பருவத்தில், குமாரி அபிராமிக்கு கணிதப் பாடம் கடினமாக இருந்தது. எவ்வளவோ முயன்றும் பாடத்தைப் புரிந்துகொள்ளவே சிரமப்பட்டார். அவரின் அண்டைவீட்டார் அவருக்கு அப்போது உதவிக்கரம் நீட்டி அபிராமிக்கு கணிதம் கற்றுக்கொடுப்பாராம். இந்த உதவியின் மூலம் கணிதப் பாடத்தில் குமாரி அபிராமி தேறி உயர்நிலைப் பள்ளிக்கு முன்னேறினார். அண்டைவீட்டார் உதவி செய்து முன்னேற்றப் பாதையில் அடியெடுக்க உதவியதுபோலவே தானும் மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தில் ஆசிரியராகும் முடிவுக்கு வந்தார்.

முதல்முறை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தபோது இவர் எண்ணம் கைகூடவில்லை. அதற்குப் பதிலாகக் கற்றல் கற்பித்தலுக்கான உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.பின்னர் ஈராண்டு கழித்து ஆசிரியர் பணிக்கு விண்ணப் பித்தபோதுதான், முயற்சி திருவினையானது.

முதலாமாண்டு கற்பித்தபோது மாணவர்களிடையே சிறுசிறு சச்சரவுகள் நிகழ்வதைக் கவனித்த அபிராமி, பிரச்சினைகளைத் தீர்த்தவாறே மாணவர்களின் பண்பு நலன்களையும் வளர்க்கவேண்டும் என்ற வேட்கையில் ஒரு நூதன முயற்சியில் இறங்கினார்.
தோழமை, மரியாதை, பரிவு போன்ற நற்பண்புகளை விளக்கும் கையேடுகளை இவர் தயாரித்தார். கையேடுகளில் இடம்பெறும் சிறு கதைகள், சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவு எடுப்பது பற்றி விளக்கும்.

பாட நடவடிக்கைகளில் ஈடுபடும்­ போது வெவ்வேறு பண்புநலன்களின் முக்கியத்துவத் தைப் பற்றி மாணவர்கள் ஆழமாகத் தெரிந்துகொண்டனர்.

ஓர் ஆசிரியர் கற்பித்தலோடு நின்றுவிடாமல் மாணவர்களின் முழுமையான மேம்பாட்டில், குறிப் பாக பண்புநலன்களை வளர்ப்பதில் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும். மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உத்திகளை மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,’’ எனத் தெரிவித்தார் இந்த இளையர்.

"கற்றல் என்று வரும்போது மாணவர்கள் தாங்கள் இதுவரை சாதித்து வந்ததை எண்ணிப் பெருமிதம் கொள்ளவேண்டும். பாடத்தில் ஏதேனும் சிரமம் ஏற்படும்போது, 'உனக்குத் தெரியாது என்றில்லை. நீ இன்னும் அதைப் பற்றி தெரிந்துகொள்ளவில்லை' என்பேன்," என்றார் குமாரி அபிராமி.

இவரைப் போலவே மாணவர் நலனின் அக்கறை கொண்டு ஈடுபட்டு வருபவர் ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் திரு கெவின் ஜோசஃப் ஃபிரான்சிஸ். விருதுக்கு நியமனம் செய்யப்பட்ட பத்து பேரில் இவரும் ஒருவர்.
மாணவர்களுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்து அவர்களை ஊக்குவிப்பதில் இவர் பெரும் ஈடுபாடு கொண்டவர்.
‘‘பள்ளிக்குத் தினமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லா பிள்ளைகளிடமும் இருக்கும் என நம்புகிறேன். ஆனால் சில வேளைகளில் தங்களின் தனிப்பட்ட கஷ்டங் களாலோ ஊக்குவிப்பு பெறாத தாலோ இவர்கள் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்படு கிறது. மாணவருடனும் பெற்றோ ருடனும் இணைந்து இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் மாணவருக்கு ஊக்கம் அளிப்பதை நான் என் முக்கிய கடமையாகக் கருதுகிறேன்,’’ என்றார் திரு கெவின், 34.

ஒரு மாணவரைத் தண்டித்து தான் அவரைத் திருத்த முடியும் என்பதில் திரு கெவினுக்கு உடன் பாடு இல்லை. அதற்குப் பதிலாகப் புதிய உத்திகளை கண்டறிந்து மாணவர்களின் நடத்தையை மேம் படுத்த முற்படுவார். காலையில் பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்காமல் அவர் களை நேரத்துடன் பள்ளிக்கு வரவழைக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததில், மாணவர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை ஒலிபரப்பச் செய்து அவர் மாறினார். மாணவர்களிடையே அது பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்ததுடன் பெரும்பாலானோர் பள்ளிக்கு நேரத்தோடு வரவும் தொடங்கினர்.

மாணவர் விருப்பத்தை அறிந்து அவர்கள் வழியிலேயே சென்று அவர்களின் போக்கிலும் நடத்தையிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதில் இளையர் கெவின் அதிக நாட்டம் கொண்டுள்ளார். இவரின் புதுமையான முயற்சிகளில் அடுத்ததாக இந்த வாரம் முழுவதும் வகுப்புகளுக்கு ஒரு மாணவராகச் சென்று அமரப் போவதாக கெவின் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாறு மாணவர் நிலையில் பள்ளிப் பருவத்தை அனுபவிக்கும்போது, கற்றல் அனுபவத்தை மேம்படுத்த என்னென்ன உத்திமுறைகளைக் கையாளலாம் என்பதை அனுபவபூர்வமாக அறியலாம் என்பது கெவினின் நம்பிக்கை.

‘‘அனைத்து மாணவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலும் சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் ஊக்கமே கல்விப் பயணத்தில் நடைபோட உதவும். கல்வியறிவு பெற்று அவர்கள் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியும்," என்று தெரிவித்தார் ஆசிரியர் கெவின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!