இளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'

‘ஷேக்ஸ்பியர்’ நாடகத்தைத் தமிழில் மேடையேற்ற வேண்டும், தாங்கள் எழுதிய தமிழ் புனைகதையை நூலாக வெளியிட வேண்டும் என்பது போன்ற மாணவர்களின் ஆர்வங்களுக்குத் தளம் அமைக்கிறது ‘நானும் ஒரு படைப்பாளி’ திட்டம்.

கல்வி அமைச்சின் தாய்மொழித் துறையின் தமிழ்மொழிப் பிரிவு இதனை ஓர் எழுத்துத்திறன் போட்டியாக பல ஆண்டுகளுக்கு நடத்தி வந்தது.

இப்போது இத்திட்டம் பல மாற்றங்களோடு விரிவாக்கம் கண்டு தொடர் கற்றல் பயணமாக உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. சிறுகதை, கவிதை, நாடக வசனம் எழுதுதல் என தங்களுக்கு பிடித்த பிரிவுகளில் மாணவர்கள் பங்கெடுக்கலாம்.

மொத்தம் 250க்கும் மேற்பட்ட உயர்நிலை, தொடக்கக்கல்லூரி, மாணவர்கள் இவ்வாண்டின் திட்டத்தில் கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக, மாணவர்கள் எழுத்து, நாடகம் சார்ந்த துறைகளில் உள்ள சிறந்த திறனாளர்களிடமிருந்து எழுதுவதற்கான அடிப்படைக் கூறுகளைப் பயிலரங்கு வழியாகக் கற்றுக்கொண்டனர். அதன் பிறகு, மாணவர்களாகவே தங்களது படைப்புகளை எழுத முனைந்தனர்.

இதில் அதிக ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு எழுதுவது பற்றி சொல்லித் தரும் வகையில் உள்ளூர் படைப்பாளர்கள் மற்றொரு பயிலரங்கை நடத்தினர்.

இவ்வாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தப் பயிலரங்குகள் நடைபெற்றன. தங்களது ஆர்வத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதற்கு இத்திட்டம் உதவியது என்று தமிழ் முரசிடம் பேசிய மாணவர்கள் தெரிவித்தனர்.

சிறுகதையை சுருக்கமாக எழுதுவது, கதையின் உச்சக்கட்டத்தை சுவையாக எடுத்தியம்புவது, ஒரு சூழ்நிலையை வர்ணித்து சொந்த நடையில் எழுதுவது போன்ற உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார் சிறுகதைப் பிரிவில் பங்கேற்ற சகினாபானு முஹம்மது ஷாபி. இவர் செங்காங் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றாம் நிலை மாணவர்.

தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கல்லூரியில் பயிலும் நாகராஜ் யோகபிரியாவுக்கு, தம்மால் கவிதை எழுத முடியுமா என்ற ஐயம் தொடக்கத்தில் இருந்தது. ஆனால் தமது ஆசிரியரின் ஊக்குவிப்பில் இத்திட்டத்தில் அவர் சேர்ந்தார்.

"கவிதைகளை எழுதுவதற்குப் பலவகையான உத்திகளைக் கையாளலாம் என்று கற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் எழுத்துத் துறையில் ஈடுபடாவிட்டாலும், தமிழ் ஆசிரியராக வேண்டும் என்ற எனது குறிக்கோளை அடைய இங்கு கற்றவை உதவும்,’’ என்று யோகபிரியா குறிப்பிட்டார்.

நாடக வசனம் எழுதும் பிரிவில் பங்குபெற்ற இயோ சூ காங் உயர் நிலைப் பள்ளி மாணவர் சரவணன் மித்ரா, புதிய தமிழ்ச் சொற்களைப் பயிலரங்குகளில் கற்றுக்கொண்டதால் தமது மொழி வளம் பெருகியது என்றார்.

உயர்நிலை இரண்டாம் நிலையில் பயிலும் மித்ரா, பள்ளி நாடக இணைப்பாட நடவடிக்கையில் ஈடுபடுகிறார். தாம் கற்ற உத்திகளை தமது பள்ளி நாடகப் படைப்புகளில் பயன்படுத்த ஆவலாக இருப்பதாகச் சொன்னார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!