கனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதில் முழு கவனத்துடனும் உறுதியுடனும் செயல்பட்டால் அவ்வேலை சிறப்பாக அமையும் என்கிறார் இளையர் ஸ்ரீராம் சாமி.

இவருக்கு இளம் பருவம் முதலே கணினி அறிவியல் மீது ஆர்வம்.

“கணினி அறிவியலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் ஒரு கருவியாக மட்டுமே பலர் கருதுகிறார்கள். ஆனால், அதைப் பயன்படுத்தி ஒருவர், பல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது எனக்குப் பிடித்திருக்கிறது. மேலும், என் திறமையை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு சுவாரசியமான தளமாக அமைகிறது. நான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கும் அதில் ஒரு பங்குள்ளது,” என்று ஸ்ரீராம் கூறினார்.

திட்டமிடுதல் அவசியம்

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணி புரியும் தம் அக்காவை ஒரு முன் மாதிரியாகப் பார்த்த ஸ்ரீராம் பொறியியலில் தம் மேற்படிப்பைப் படிக்க முடிவெடுத்தார். ஸ்ரீராம், கடந்த மாதம் 12ஆம் தேதியன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் தம் இறுதி ஆண்டில் தமது துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டக் கல்வியின் முதல் இரண்டரை ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ‘தெம்புசு’ கல்லூரியில் பயின்று அவ்வளாகத்தில் ஸ்ரீராம் தங்கியிருந்தார். அந்த அனுபவம் அவருக்குப் பயனுள்ளதாக இருந்ததாகவும் அதன் மூலம் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்ததாகவும் பகிர்ந்துகொண்டார். ஒரு நண்பருடன் இணைந்து கிராமப்புற சமூகங்களுக்கு மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்லும் நிறுவனமான “யோனா” மூலம் ஸ்ரீராம் உதவினார்.

ஆராய்ச்சி, கல்வி கற்பித்தல் ஆகிய இரண்டிலுமே தனக்கு அதிக ஆர்வமிருப்பதால் முனைவர் பட்டத்துக்குப் படிக்க முடிவெடுத் துள்ளதாக ஸ்ரீராம் கூறினார்.

சமூக நிறுவனங்களைத் தொடங்கவும் எவ்வாறு செயல்படவேண்டும் என்று வழிகாட்டவும் இளையர்களுக்கென இயங்கிவரும் தென்கிழக்காசிய இளையர் நிலைத்தன்மை தாக்கம் (YSI SEA) அமைப்பில் தற்போது தொழில்நுட்ப இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது என்று கூறிய ஸ்ரீராம், எதிர்காலத்தில் சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் ஈடுபடும் ஒரு பேராசிரியராகும் ஆசை உள்ளதாக தம் லட்சியம் பற்றி தெரிவித்தார்.

புதியதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் தேவை

பொறியியல் துறையில் படிக்க வேண்டும் என்று இளம் வயதிலேயே தீர்மானித்துவிட்டார் 23 வயது லக்‌ஷ்மி லக்‌ஷ்மணன். இயற் பியல், கணிதம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றில் தமக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்றும் கூறினார்.


இவ்வாண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமது ரசாயனப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார் லக்‌ஷ்மி. பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) வழங்கி வரும் உபகாரச் சம்பளத்துக்குத் தகுதிபெற்ற இவருக்குப் பல பிரிவுகளில் பயிற்சி மாணவராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.சிறப்புத் தேர்ச்சி பெற்ற சிங்கப்பூர் இந்திய இளங்கலை மாணவியான இவர், லாபநோக்கமற்ற அமைப்பான ‘த கமலா கிளப்’ (The Kamala Club) வழங்கிவரும் பதக்கத்தைப் பெற்றி ருக்கிறார்.
தற்போது துவாஸ் குடிநீர் ஆலையில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இதற்குமுன் ‘பியுபி’ மூலம் பயிற்சி மாணவராக இருந்த லக்‌ஷ்மி, அந்த அனுபவம் மிகப் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினார்.
“இந்த அனுபவத்தின்போது, நான் நிறையவே கற்றுக்கொண்டேன். குறிப்பாக, புதுப்பது தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வம் இருப்பது மிக அவசியம். பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது பாடப்புத்தகத்தில் இருப்பது எல்லாம் வகுப்பறை அல்லது விரிவுரை அரங்கத்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் வேலையிடத்தில் ஏதேனும் தெரியாவிட்டால் சுயமாக முயற்சி எடுத்து, மேலதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் லக்‌ஷ்மி.
மேலும், பட்டப்படிப்பின்போது கற்றுக்கொள்வது வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருந்தாது என்றும் லக்‌ஷ்மி கருதுகிறார்.
“பல்கலைக்கழகத்தில் நமக்குத் தேவைப்படும் திறன்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், நாம் வேலை செய்யும் நிறுவனத்தைப் பற்றிய பின்புலன், அங்குள்ள வேலைகளைச் செய்ய தேவையான தகவல்கள் ஆகியவற்றை வேலையிடத்தில்தான் கற்றுக்கொள்ள முடியும்,” என்று லக்‌ஷ்மி கூறினார்.
ரசாயனப் பொறியியல் துறையின் பயன்களே அதில் பட்டக்கல்வி பயிலத் தூண்டுதலாக இருந்தது என்று சுட்டினார்.
“நம் தினசரி வாழ்க்கையில் ரசாயனப் பொறியியலைப் பயன்படுத்துவதைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வமாக இருந்தது.
“தினமும் பயன்படுத்தும் பொருட்களும் மக்களுக்குத் தேவையான பொருட்களும் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன்,” என்றார்.

வாழ்நாள் கற்றலில் ஈடுபாடு

சிறு வயதிலிருந்தே சாதனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று தெரிந்துகொள்ள பேராவல் கொண்டிருந்தார் 25 வயது அருணாச்சலம் ராமசாமி. இயந்திர பொறியாளரான தம் தந்தையையும் பார்த்து அவர் பாதையையே பின்பற்றவேண்டும் என்று எண்ணினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் படித்த இவர், இயந்திர பொறியியலில் தம் பட்டத்தை ஜூலை 16ஆம் தேதியன்று பெற்றார். மேலும் 2017ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையின் புத்தகப் பரிசையும் இவர் வென்றார்.

பயிற்சி மாணவராக இருந்தபோது சிங்கப்பூரின் பல ஆலைகளுக்குச் சென்று பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டதை நடைமுறையில் பயன்படுத்த முடிந்தது. இத்தொழிலில் உள்ள பொறியாளர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

“கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை நன்கு புரிந்துகொண்டேன். இந்தத் துறையில் நான் கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறையவே இருக்கிறது என்று உணர்ந்தேன்,” என்று அருணாச்சலம் கூறினார்.

வாழ்நாள் கற்றல், துறையில் உள்ளவர்களுடன் பழகுதல், வேலை-வாழ்க்கை சமநிலை போன்றவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கற்றுக்கொண்டார்.

தம்முடைய இறுதி ஆண்டு ஒப்படைப்புக்காக அருணாச்சலம் சூரிய சக்தியால் இயங்கும் குளிர் சாதனம் தொடர்பில் ஆராய்ச்சி செய்தார். குறிப்பாக, அதை எவ்வாறு சிங்கப்பூர் முழுவதும் செயல்படுத்தலாம் என்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கினார்.

சென்ற ஆண்டு அருணாச்சலம் சுவீடனிலுள்ள லிங்கொபிங் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஆறு மாதக்காலம் படித்தார். அந்த நாட்டின் எரிசக்தி துறையைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டார்.

“வெளியூரில் என் பெற்றோர் இல்லாமல் தங்குவது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. செலவுகள், நேரம் என நானே திட்டமிட்டு சமாளித்துக்கொள்ள கற்றுக்கொண்டேன். அத்துடன் சுவீடனின் வேறுபட்ட கற்பித்தல் முறையின்கீழ் பயில எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது,” என்று அருணாச்சலம் கூறினார்.

“படிப்பில் ஏற்பட்ட ஐயங்களைப் பற்றி பேராசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொண்டேன். குழு ஒப்படைப்புகளுக்காக வெவ்வேறு குழு உறுப்பினர்களைச் சந்திக்கும்போது புதிய நட்புகள் உருவாகின.

“மேலும், குறுகிய நேரத்தில் பல பொறுப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை அளித்து நேரத்தை எவ்வாறு செலவிடலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டேன்,” என்றார் அருணாச்சலம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!