பெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்

பெங்களுரில் உள்ள இந்திய தேசிய கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதகால பயிற்சிக்குப் பிறகு புதுத்தெம்புடன் நாடு திரும்பியுள்ளார் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் ஜீவன் சந்தானம், 14. இந்த விளையாட்டில் இப்போது தமது திறன் பெருமளவு மேம்பட்டுள்ளதாக இவர் கூறுகிறார்.

கிரிக்கெட் திறனைப் பட்டை தீட்ட, பயிற்சிக்காக கடந்த மாதம் பெங்களுருக்கு அனுப்ப இடது கை பந்தடிப்பாளரான இவரை சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் தேர்ந்தெடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதிப்பதற்கான ஆற்றலுடைய இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையமாக இந்திய தேசிய கிரிக்கெட் பயிற்சிக் கழகம் விளங்குகிறது.

“இத்தகைய சூழலில் நாங்கள் பயிற்சி பெறும்போது, பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் எங்களோடு சேர்ந்து பயிற்சி பெறுபவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற முடியும்,” என்றார் வலுவான உடற்கட்டுடன் 1.76 மீட்டர் உயரமுடைய ஜீவன்.

“எனது பந்தடிப்பு பாணிக்கேற்ப மட்டையைப் பிடிக்கும் விதத்தைப் பயிற்றுவிப்பாளர்கள் மாற்றியமைத்தனர். அதோடு, என்னிடம் இருக்கக்கூடிய சக்தியைக் கொண்டு பந்துவீச்சை மேம்படுத்தவும் அவர்கள் கற்றுக்கொடுத்தனர்.

“நான் கற்றுக்கொண்டவற்றை இப்போது இங்கு மற்றவர்களுக்கும் சொல்லித் தர விழைகிறேன். கிரிக்கெட் விளையாட்டில் சிங்கப்பூர் முன்னேற வேண்டும் என்பது எனது அவா,” என்றார் ஜீவன்.

மலேசியா, நமீபியா, நைஜீரியா, மொஸாம்பிக் உட்பட 19 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்த ஒரு மாதகால பயிற்சியில் ஈடுபட்டனர்.

“இந்த அரிய வாய்ப்பு வழங்கப்பட்டவுடன் எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. இது கனவா நனவா என்று தொடக்கத்தில் என்னால் நம்ப முடியவில்லை.

“எனக்கு புதிய நண்பர்களாக பல்வேறு நாட்டு வீரர்கள் கிடைத்தனர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும் என உணர்ந்தேன். எனவே, இந்தச் சூழலை அனுபவிக்க நான் விரும்பினேன்,” என்றார் ஜீவன்.

இங்குள்ள சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சிக் கழகத்தில் இவர் பயிற்சி எடுத்து வருகிறார். தாம் பயிலும் ராஃபிள்ஸ் கல்விக் கழகத்திற்காக இவர் விளையாடுகிறார்.

சிங்கப்பூரில் உயர்தர பயிற்றுவிப்பாளர்கள் இருந்தாலும், இந்தியாவில் உள்ள தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது இளம் சிங்கப்பூர் வீரர்களுக்கு நல்லது என சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைமை நிர்வாக அதிகாரி சாட் கான் ஜாஞ்சுவா கூறினார்.

“டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடாக விளங்கும் இந்தியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள் உள்ளனர். எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறனாளர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறுவது முக்கியம்,” என்றார் அவர்.

மலேசியாவுக்கு எதிராக Carl Schubert கிண்ணப் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சிங்கப்பூரை ஜீவன் பிரதிநிதித்து இருக்கிறார்.

அதுபோக, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தாய்லாந்தில் நடந்த ஆசிய கிரிக்கெட் மன்ற கிழக்கு வட்டாரப் போட்டியிலும் இவர் விளையாடியுள்ளார். அப்போட்டியில் சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் வந்தது.

குறிப்பிடும்படியாக, பூட்டானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை இவர் வென்றார்.

ஜீவனுக்கு எட்டு வயதாக இருந்ததிலிருந்து இவருக்கு பயிற்சி வழங்கி வந்த முகம்மது ஷோயிப், “தொடக்கத்தில் எல்லா பிள்ளைகளைப்போலத்தான் ஜீவனும் இருந்தார். ஆனால், சிறு வயது முதலே இவரிடம் முதிர்ச்சியும் விளையாட்டில் ஆர்வமும் இருந்தன,” என்றார்.

ஜீவனின் தந்தையான சு.சந்தானம், 44, உள்ளூர் பிரிமியர் லீக்கில் விளையாடும் ‘மில்லெனியம் யுனைடெட்’ கிரிக்கெட் மன்றத் தலைவராக உள்ளார்.

“நானும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், ஜீவனுக்கு எப்படி ஆதரவு வழங்குவது என்பது பற்றி எனக்குத் தெரியும். ஜீவனின் திறனை மேம்படுத்து

வதற்கான உத்தியை நான் பகிர்ந்து வருகிறேன்,” என்றார் அவர்.

இந்திய, ஆஸ்திரேலிய, பாகிஸ்தானிய அணிகளுக்கு ஈடான உயரத்தை ஒரு நாள் சிங்கப்பூர் அணியும் எட்ட, மூத்த விளையாட்டாளராக நான் எனது பங்கையாற்ற விரும்புகிறேன்.

பயிற்சிக்காக பெங்களுர் சென்ற மற்றொரு வீராங்கனை, சிங்கப்பூர் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணித் தலைவர் ஷஃபினா மகேஷ், 20.

தமக்கு 13 வயதாக இருந்தபோதே இவர் கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டார். ஜீவனைப் போல சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சி பெற்று வரும் ஷஃபினா, இந்தியாவின் தேசிய கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தில் தமக்கு கிடைத்த அனுபவம் பெரிதும் உதவியதாகக் கூறினார்.

“டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் விளையாடிய விதம் எனது கவனத்தை ஈர்த்தது. எளிமையாக விளையாடினாலும், அவர்களுக்கு அச்சம் எதுவுமில்லை. இந்த அணுகுமுறையை சிங்கப்பூர் அணியும் பின்பற்றலாம்.

“இதுபோன்ற வாய்ப்புகள் நமது உள்ளூர் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்,” என்று இவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!