பள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்

பள்ளி விடுமுறையின்போது குடும்பத்தார், நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் உல்லாசமாக பொழுதைக் கழித்து வித்தியாசமான அனுபவங்களைப் பெற கீழ்க்காணும் நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம்:

‘செந்தோசா லைட்ஸ்’ வண்ண விளக்கு விழா


கண்கவர் ஒளிக்கற்றை சாகசங்களுடன் ரம்மியமான இசையையும் இந்த விழாவில் நீங்கள் அனுபவிக்கலாம். ‘ஸ்பேஸ் ஆப்ஜெக்ட்’ என்ற வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் இந்த விழாவில், கண்களைச் சொக்க வைக்கும் ஒளிச் சிற்பங்களையும் மினுமினுக்கும் பல வண்ண ஒளிக்கற்றை சாகசங்களையும் நீங்கள் கண்டு மகிழலாம்.

எங்கே: செந்தோசா கோவ்
எப்போது: நவம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை
கட்டணம்: இலவசம்

‘கார்டன் ரேப்சடி’


கரையோரப் பூந்தோட்டத்தில் நாள்தோறும் நடைபெறும் இசை, ஒளி நிகழ்ச்சி, வருகையாளர்களுக்கு பிரமிப்பு கலந்த இதத்தை தர வல்லது. நீங்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் மாலைப் பொழுதைக் கழிக்க ஏற்ற நிகழ்ச்சி இது.

எங்கே: கரையோரப் பூந்தோட்டம்
எப்போது: நவம்பர் 29 முதல் டிசம்பர் 26 வரை
கட்டணம்: $8லிருந்து தொடக்கம்

‘ஹெட் ராக் வீ ஆர்’ மெய்நிகர் பூங்கா

மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் வருகையாளர்களுக்குத் திகிலூட்டும் அனுபவத்தைத் தரக் காத்திருக்கிறது, ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவிலுள்ள இந்த அதிநவீன மெய்நிகர் பூங்கா. ஆழ்கடல், பனிப்புயல், வான்குடைப் பயணம் உள்ளிட்ட 11 மாறுபட்ட விளையாட்டுகளில் வருகையாளர்கள் ஈடுபடலாம்.

எங்கே: ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா
எப்போது: நாள்தோறும்
கட்டணம்: $8லிருந்து தொடக்கம்

பறவைப் பூங்காவில் அரிய வகை கழுகு


பிலிப்பீன்சிலிருந்து அரிய வகை கழுகு ஒன்று சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதைக் காண நீங்கள் ஜூரோங் பறவைப் பூங்காவுக்குச் சென்று அங்கு நடைபெறும் விழா ஒன்றில் கலந்துகொள்ளலாம். விளையாட்டுகள், அறுசுவை உணவு விருந்து எனப் பல்வேறு அங்கங்கள் வருகையாளர்களுக்குக் காத்திருக்கின்றன.
சிங்கப்பூருக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே 50 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் உள்ளூர்வாசிகளுக்கும் பிலிப்பீன்ஸ் குடிமக்களுக்கும் நுழைவுச்சீட்டில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். இம்மாதம் 29ஆம் தேதி வரை இந்தச் சலுகை பொருந்தும்.

எங்கே: ஜூரோங் பறவைப் பூங்கா
எப்போது: நவம்பர் 16 முதல் டிசம்பர் 29 வரை
கட்டணம்: $15லிருந்து தொடக்கம்

செய்தித் தொகுப்பு: கி.ஜனார்த்தனன்
படங்கள்: செந்தோசா, கரையோரப் பூந்தோட்டம்,
ஜூரோங் பறவைப் பூங்கா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!