தற்காப்புக் கலையில் அசர வைக்கிறார் ‘இந்திய பெண் புலி’

எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன் 

அமீர் கான் நடித்த ‘டங்­கல்’ இந்­தித் திரைப்­ப­டத்தை நாம் மறந்­தி­ருக்­க­மாட்­டோம். திரு மகா­வீர் சிங் ஃப்போகாட் என்­ப­வ­ரு­டைய மகள்­க­ளின் உண்­மைக் கதையை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்ட திரைப்­ப­டம் அது. மூன்று மகள்­களில் திரு மகா­வீ­ரின் மூன்­றா­வது மக­ளான ரித்து ஃப்போகாட், ‘இந்­திய பெண் புலி’ (The Indian Tigress) என்று செல்­ல­மாக அழைக்­கப்­ப­டு­கி­றார். 2016ஆண்­டின் காமன்­வெல்த் விளை­யாட்­டு­களில் மல்­யுத்­தத்­தில் தங்­கப் பதக்­கத்தை வென்ற குமாரி ரித்து, 2020ஆம் ஆண்டு ‘ஒலிம்­பிக்’ போட்­டி­களில் பங்­கேற்­பார் என்று அனை­வ­ரும் பெரி­தும் எதிர்­பார்த்­தி­ருந்த சம­யத்­தில் மல்­யுத்த விளை­யாட்­டையே விட்டு விலகி அனை­வ­ரை­யும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­னார். அதைத் தொடர்ந்து பலதரப்பட்ட தற்­காப்­புக் கலை­களில் (Mixed Martial Arts) ஈடு­ப­டத் தொடங்­கி­னார். 

“மற்­ற தற்­காப்­புக் கலை வகை­களில் எனக்கு எப்­போ­தும் ஆர்­வம் இருந்­த­துண்டு. இந்தத் தற்­காப்­புக் கலை­ பிர­ப­லம் பெற்­ற­தாக இருந்­தா­லும் இதில் ஏன் இந்­தி­யர்­கள் உலக அள­வில் இன்­னும் சாதனை படைக்­க­வில்லை என்ற கேள்வி எனக்­குள் எழுந்­தது. பலதரப்பட்ட தற்­காப்­புக் கலை­களில் ஈடு­பட எனக்கு வாய்ப்பு கிடைத்­த­போது நன்கு யோசித்து, பெற்­றோ­ரி­டம் ஆலோ­சித்து, பின்­னர் அதை மேற்­கொள்ள முடி­வெ­டுத்­தேன். இந்த விளை­யாட்­டு­களில் இந்­தி­யா­வைப் பிர­தி­நி­திக்க விரும்­பு­கி­றேன்,” என்­றார் குமாரி ரித்து, 25. 

பலதரப்பட்ட தற்­காப்­புக் கலை­களில் உலக வெற்­றி­யா­ளர் (World Champion) ஆக வேண்­டும் என்ற இலக்கு கொண்­டுள்­ளார் குமாரி ரித்து. பிப்­ர­வரி 28ஆம் தேதி சிங்­கப்­பூர் உள்­ள­ரங்­கத்­தில் நடை­பெற்ற ‘ஒன் சாம்­பி­யன்­‌ஷிப்’ போட்­டி­களில் வெற்­றி­வாகை சூடி­னார். 156 செண்­டி­மீட்­டர் உய­ர­மும் 52.2 கிலோ எடை­யும் கொண்ட குமாரி ரித்து, சீனா­வைச் சேர்ந்த ‘வூ சியாவ் சன்’னுடன் மோதி­னார். மூன்று சுற்­று­க­ளில் நடுவர்களின் ஒருமானதான தீர்ப்பின்படி வூ சியாவ் சன்னை தோற்­க­டித்து, போட்­டியை வென்­றார் குமாரி ரித்து. 

கிட்­டத்­தட்ட ஓராண்­டாக சிங்­கப்­பூ­ரி­லுள்ள ‘இவோல்வ் எம்­எம்ஏ’ (Evolve MMA) எனும் பலதரப்பட்ட தற்­காப்­புக் கலை­கள் கற்­பிக்­கும் நிலை­யத்­தில் பயிற்சி பெற்று வரும் ரித்து, தன் முன்­னேற்­றத்­திற்கு தர­மான பயிற்­று­விப்­பா­ளர்­களும் ஒரு கார­ணம் என்று குறிப்­பிட்­டார். 

“சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு முன்பு என் குடும்­பத்தைவிட்டு தனி­யாக இருந்­த­தில்லை. தொடக்­கத்­தில் தனி­மை­யாக இருந்­தா­லும் காலம் செல்ல ‘இவோல்வ்’ உறுப்­பி­னர்­க­ளு­டன் நெருங்­கிய உற­வு­களை உரு­வாக்கி, ஒரே குடும்­பம் போல பழகி வரு­கி­றேன். நம் கவ­னத்தை எதி­லும் சித­ற­வி­டா­மல் பயிற்­சி­களில் முழு­மூச்­சுடன் ஈடு­பட்­டால் இலக்­கு­களை எட்ட முடி­யும்,” என்­கிறார் ரித்து. இவ­ரது மூத்த சகோ­தரி கீதா ஃப்போகாட் 2010ஆம் ஆண்­டின் காமன்­வெல்த் விளை­யாட்­டு­களில் பெண்­கள் மல்­யுத்­தப் பிரி­வில் இந்­தி­யா­வின் முதல் தங்­கப் பதக்­கத்தை வென்­றார். திரு மகா­வீ­ரின் இரண்­டா­வது மக­ளான பாபித்தா குமா­ரி­யும் 2014ஆம் ஆண்­டின் காமன்­வெல்த் விளை­யாட்­டு­களில் அதே மல்­யுத்­தப் பிரி­வில் தங்­கப் பதக்­கத்தை வென்­றார். 

ஏழு வய­தி­லி­ருந்து தமது தந்­தை­யோ­டும் சகோ­த­ரி­க­ளோ­டும் மற்­போர் பயிற்­சி­க­ளைச் செய்­யத் தொடங்­கிய ரித்து, தமது சகோ­த­ரி­களை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார். கூடிய விரை­வில் பலதரப்பட்ட தற்­காப்­புக் கலை­களில் உலக வெற்­றி­யா­ள­ரா­கச் சாதிப்­பார் என்ற நம்­பிக்­கை­யு­டன் தயா­ரா­கி­றார் இளை­ஞர் ரித்து. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!