தரவு மூலம் மாற்றமே இலக்கு

மின்­னி­லக்க உலகை இயக்­கும் ‘எரி­பொ­ரு­ளாக’ திக­ழும் தரவு (data) வருங்­கா­லத்­தில் அனை­வ­ருக்­கும் மலி­வா­கக் கிடைக்­கப்­பெற்று பய­ன­ளிக்­க­வேண்­டும் என்­பது  பைபி­ராஸ்ட் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரும் தலைமை தொழில்­நுட்ப அதி­கா­ரி­யு­மான 27 வயது அர­விந்த் கந்­தை­யா­வின் நோக்­கம். மெய்­நி­கர் தர­வு­களை உரு­வாக்­கும் இவ­ரது நிறு­வ­னம், கடந்­தாண்­டு­தான் தொடங்­கிய போதும் எஸ்­எம்­ஆர்டி உள்­ளிட்ட வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­தி­ருக்­கிறது.

தரவு, உல­கின் மிக விலை உயர்ந்த பொருட்­களில் ஒன்­றாக உள்­ளது. தானி­யக்க வாக­னங்­கள், இயந்­திர மனி­தர்­கள் என உல­கில் தற்­போது உரு­வெ­டுத்து வரும் அதி­ந­வீன மாற்­றங்­கள் தர­வு­க­ளைச் சார்ந்­தி­ருக்­கின்­றன. இருந்­த­போ­தும் தர­வுக்­கான தட்­டுப்­பாடு, செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பத்­தின் வளர்­ச­சிக்கு முட்­டுக்­கட்­டை­யாக இருப்­ப­தாக அர­விந்த் கூறி­னார்.  

“செயற்கை நுண்­ண­றிவை உரு­வாக்­கு­வ­தற்கு படி­மு­றை­யும் (algorithm)  தர­வும் தேவைப்­ப­டு­கின்­றன. படி­மு­றை­கள் (algorithms) கணி­னி­யியல் நிபு­ணர்­க­ளால் உரு­வாக்­கப்­ப­டு­பவை என்­ப­தால் அவை எளி­தில் கிடைக்­கக்­கூ­டி­யவை. தர­வு­க­ளைத் திரட்­டு­வ­து­தான் சவால். நிஜ உல­கி­லி­ருந்து தர­வு­க­ளைப் பெரு­ம­ள­வில் திரட்­டு­வ­தற்கு அதிக கால­மும்  பணச்­செ­ல­வும்  ஆகிறது. 

“அத­னால்­தான் பெரும் அள­வி­லான தர­வு­கள்  ஒரு சில தொழில்­நுட்­பப் பெரு­நி­று­வ­னங்­க­ளின் கைவ­சம் உள்­ளன. இந்­நிலை மாறி, அனை­வ­ருமே இத­னைப்  பயன்­ப­டுத்தி புத்­தாக்­க சிந்தனையுடன் செயல்பட வேண்­டும். தர­வுப் பயன்­பாட்டை ஜன­நா­ய­க­ம­யப்­ப­டுத்­தலே எங்­கள் இலக்கு,” என்று அர­விந்த் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (எஸ்­யு­டிடி) தக­வல் கட்­ட­மைப்பு, வடி­வ­மைப்பு பயின்ற அர­விந்த், தமது இறு­தி­யாண்டு வகுப்­புத் திட்­டப்­ப­ணி­யின் சக உறுப்­பி­னர் ஒரு­வ­ரு­டன் இணைந்து பைபி­ரா­ஸட் நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார். அந்­தத் திட்­டப்­ப­ணி­யில் அர­விந்­தும் அவ­ரது குழு­வி­ன­ரும் பணி­ம­னை­யில் பொட்­ட­ல­மி­டும் இயந்­திர மனி­தனை உரு­வாக்­கி­னர். 

“கீழே கிடக்­கும் ஒரு பொரு­ளைப் பொறுக்கி எடுக்க ஓர் இயந்­திர மனி­த­ருக்கு எப்­படி உரிய திறனை அளிப்­பது? தர­வு­க­ளைக் கொண்­டு­தான் அத­னைச் செய்­ய­வேண்­டும். ஆனால் நிஜ உல­கி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான தர­வுப் ­ப­டங்­க­ளைச் சேக­ரிக்க குறைந்­தது ஓராண்டு ஆகும். இதற்­குப் பலரை வேலைக்கு எடுக்­க­வும் வேண்டி உள்­ளது. எனவே இவற்றை விடுத்து மெய்­நி­கர் ­தொ­ழில்­நுட்­பம் வழி­யா­கத் தர­வு­களை உரு­வாக்கி எங்­க­ளது பணி­யைத் துரி­தப்­ப­டுத்­தி­னோம்,” என்று அர­விந்த் கூறி­னார்.  

நிஜ உல­கத்­தின் ‘பிர­தி­க­ளாக’  இருக்­கும் மெய்­நி­கர் உல­கங்­க­ளி­லி­ருந்து திரட்­டப்­படும் தர­வு­கள், நிஜ உல­கத் தர­வு­க­ளுக்கு ஈடா­னவை எனத் தெரி­வித்த அர­விந்த், மெய்­நி­கர் தர­வின் பயன்­பாடு மிக­வும் புதி­யது எனக் கூறி­னார். “அமெ­ரிக்­கா­வில் ஒரு சில ஆய்­வுக் கழ­கங்­க­ளில்­தான் இது­கு­றித்து பேசப்­பட்டு வந்­தது,” என அவர் கூறி­னார்.

 இந்­தத் திட்­டத்­திற்கு இவர்­கள் பயன்­ப­டுத்­திய செயற்கை நுண்­ண­றிவு மென்­பொ­ருள், வேறு பல புத்­தாக்­கங்­க­ளுக்­குப் பயன்­படும் என்­பதை அறிந்­தார் அர­விந்த்.   திட்­டப்­பணி நிறை­வ­டை­யும் தறு­வா­யில்  நிறு­வ­னம் ஒன்றை ஆரம்­பிக்க தாமும் தமது நண்­பர் 26 வயது சார்ல்ஸ் வோங்­கும் முடிவு செய்­த­னர். தங்­க­ளது மென்­பொ­ரு­ளுக்கு ‘பைபி­ராஸ்ட்’ என பெய­ரிட்டு இவர்­கள் அதே பெயரை தங்­க­ளது நிறு­வ­னத்­திற்­கும் வைத்­த­னர்.

2017ல் ஜெர்­ம­னி­யில் நடை­பெற்ற  ஐக்­கிய நாடு­கள் மாநாட்­டில் தமது புத்­தாக்­க வடிவங்­க­ளைப் படைத்த அர­விந்த,  கடந்த சுமார் நான்கு ஆண்­டு­க­ளாக குறைந்­தது பதி­னைந்து விரு­து­களை அள்­ளிக்­கு­வித்­துள்­ளார். 

அத்­து­டன், சொந்த நிறு­வ­னம் ஆரம்­பிக்க ஆசைப்­பட்­ட­தா­கக் கூறும் அர­விந்த், தொழில்­நுட்­பத்­தி­றனை ஆழப்­ப­டுத்­தி­ய­து­டன் வர்த்­த­கம் தொடங்குவது பற்றி பல ஆண்­டு­க­ளா­கப் படித்து வந்­தார். எஸ்­யு­டி­டி­யின் தொழில்­தொ­டங்கு  வோருக்கான வர்த்­தக நிலை­யம் (Entre preneurship centre) வழங்­கிய வாய்ப்­பு­க­ளை­யும் வளங்­க­ளை­யும் அர­விந்த் கெட்­டிக்­கா­ரத்­த­ன­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார். 

தற்­போது எஸ்­எம்­ஆர்டி ரயில் கட்­ட­மைப்­புக்­கான பரா­ம­ரிப்பு, விமா­னங்­க­ளின் பழு­து­பார்ப்பு உள்­ளிட்­ட­வற்­று­டன் தொடர்­பு­டைய சில திட்­டங்­களில் இவ­ரது நிறு­வ­னம் ஈடு­பட்டு வரு­கிறது.