சவால்களை எதிர்நோக்கும் இளையர்கள்

உல­க­ளா­விய அள­வில் தலை­வி­ரித்­தா­டும் கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித் தொற்று சமூ­கத்­தின் அனைத்து பிரி­வி­ன­ரை­யும் பாதித்­துள்­ளது. 

பொரு­ளா­தார நிலை­யில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இக்கிரு­மித்­தொற்று, சமு­தாய ரீதி­யா­க­வும் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­உள்­ளது. 

உள்­ளூர் இளை­யர்­கள் பல வழி­களில் வாழ்­வா­தார மாற்­றங்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

அர­சாங்­கம் பல வழி­களில் வெவ்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மூலம் கிரு­மித்தொற்றைச் சமா­ளிக்­கத் திட்­ட­மிட்டு செயல்­படுத்­தி­வ­ரு­கிறது.

இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மூலம் பாதிப்­புக்­குள்­ளான இளை­யர்­கள் சவா­ல்மிக்க இந்­தக் கால­கட்­டத்­தை எவ்­வாறு சமா­ளிக்­கின்­ற­னர் என்­பதைச் சற்றுப் பார்ப்­போம்.

வீட்­டில் இருந்­த­ப­டியே புதிய பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­களில் ஈடுபட்டு கற்­பது, தங்­கள் உடல்­நலத்­தை­யும் சமூக நலத்­தை­யும் பாது­காக்­கும் வகை­யில் வெளியே செல்­லா­மல் இருப்­ப­வர்­கள்  ஒரு­பு­றம் இருக்க, இளம் வய­தி­லேயே சுய­தொ­ழில் செய்து வாழ்­வில் வளர்ச்சி கண்டு வரும்­போது பொரு­ளா­தார ரீதி­யில் சரிவை எதிர்­நோக்­கும் இளை­யர்­களும் கல்­வி­யில் தடை ஏற்­பட்­டு­வி­டுமோ எனும் அச்­சத்­தில் வாழ்­வோ­ரும் உள்­ள­னர்.

இவர்­கள் தங்­கள் அனு­ப­வத்­தைத் தமிழ் முர­சு­டன் பகிர்ந்­து­கொண்­டுள்­ள­னர். 

தேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை

“இம்­மா­த நடு­வில் நானும் எனது நண்­பர்­களும் பாத்­தா­மிற்கு விடு­மு­றைக்­கா­கச் சென்­றி­ருந்­த­போது பயண எச்­ச­ரிக்கை அறி­விக்­கப்­பட்­டது. 16ஆம் தேதி இரவு முதல் குறிப்­பிட்ட நாடு

களி­லி­ருந்து திரும்­பு­வோர் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும்­என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“அந்­தப் பட்­டி­ய­லில் ஆசி­யான் நாடு­களும் இடம்­பெற்­றன. 17ஆம் தேதி திரும்ப இருந்த நாங்­கள் 16ஆம் தேதியே திரும்­பி­னோம். அப்­படி இருந்­தும் கல்வி அமைச்சு எங்­க­ளுக்கு 14 நாள் கட்­டாய விடுப்பு அளித்து வீட்­டில் இருக்­கு­மாறு கூறி­யது.  அதற்கு அடிப­ணிந்து நானும் என் நண்­பர்­களும் வீட்­டி­லேயே இருந்­தோம்,” என்­றார் பட்­ட­யக் கல்­வியை முடித்து தேசிய சேவை செல்ல இருக்­கும் 20 வயது அனு­ராக் பிர­பா­கர் (படத்­தில் வல­மி­ருந்­தது இரண்­டா­வது).

வெளியே செல்ல முடி­யா­மல் வீட்­டில் இருந்­த­போது புதிய பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். 

“வீட்­டில் இருந்­த­போது பட்­ட­யக் கல்­விக்­கான தேர்வு ஒன்­றுக்­குத் தயார்­செய்­தேன். நான் ஈடு­பட்ட புதிய நட­வ­டிக்­கை­களில் யோகா­ச­ன­மும் ஒன்று. வீட்­டி­லேயே இருப்­ப­தால் ஏற்­பட்ட மன உளைச்­ச­லைக் குறைக்க யோகா­ச­னப் பயிற்சி பெரி­தும் உத­வி­யது. 

“இன்­னும் சில மாதங்­களில் தேசிய சேவைக்கு செல்­ல­வி­ருக்­கி­றேன். ஆனால் வீட்­டி­லேயே இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தால் வெளியே சென்று உடற்­ப­யிற்சி செய்து என்­னைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­ய­வில்லை என்ற ஏக்­கம் எனக்­குள் இருக்­கிறது. 

“இன்­னும் சில நாட்­களில் 14 நாள் கட்­டாய விடுப்பு முடி­வ­டைந்­தா­லும் நான் சமூ­கத்­திற்கு எனது பங்கை ஆற்ற முடிந்­த­வரை வெளியே செல்­லா­மல் வீட்­டில் இருக்க முடி­வெ­டுத்து உள்­ளேன். அர­சாங்­கம் கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பாக அறி­விக்­கும் பல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை தினந்­தோ­றும் நான் தெரிந்து­ வைத்­துக்­கொள்­கி­றேன். அதன்­படி நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளேன். 

“சமூ­கத்­துக்கு ஆற்­றும் பங்­காக நாம் சுய கட்­டுப்­பா­டோ­டும் சமூக உணர்­வோ­டும் நடந்­து­கொள்­ள­வேண்­டும். வீட்­டில் இருக்­கும் நேரத்­தைப் பயன்­ப­டுத்தி நம்­மைப் பல­வ­ழி­களில்  மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்,”  என்று அனு­ராக் தெரி­வித்­தார்.
 

திடீரென முடங்கிய சுயதொழில் மனபாரத்தையும் இறக்கிவிட முடியவில்லை

சற்­றும் எதிர்­பார்க்­காத, சவால்­மிக்க கால­கட்­டத்­தில் சிக்­கி­யி­ருப்­ப­தாக நான் உணர்­கி­றேன் என்கிறார் புகைப்படக்கலைஞர் கி‌ஷோர் சந்திரமோகன். படம்: கி‌ஷோர் சந்திரமோகன்
சற்­றும் எதிர்­பார்க்­காத, சவால்­மிக்க கால­கட்­டத்­தில் சிக்­கி­யி­ருப்­ப­தாக நான் உணர்­கி­றேன் என்கிறார் புகைப்படக்கலைஞர் கி‌ஷோர் சந்திரமோகன். படம்: கி‌ஷோர் சந்திரமோகன்

கொரோனா கிரு­மித்­தொற்­றின் கார­ண­மாக தமக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பைப் பற்றி புகைப்­ப­டக் கலை­ஞ­ரான 30 வயது கிஷோர் சந்­தி­ர­மோ­கன்  மனம் தி­றந்­தார்.

“சற்­றும் எதிர்­பார்க்­காத, சவால்­மிக்க கால­கட்­டத்­தில் சிக்­கி­யி­ருப்­ப­தாக நான் உணர்­கி­றேன். 

“புகைப்­ப­டக் கலை­ஞ­ராக நான் வீடு­க­ளி­லும் சமூக நிகழ்­வு­க­ளி­லும் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­களை நம்பி தொழில் நடத்­து­கி­றேன்.

“இந்த கொவிட்-19 கிரு­மித் தொற்­றால் நான் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளேன். “அர­சாங்க அமைப்­பு­கள், தொழில் துறை­கள் உட்­பட அனைத்து அமைப்­பு­களும் அவற்­றின் நிகழ்ச்­சி­களை அடுத்த பல மாதங்­க­ளுக்கு ரத்து செய்­து­விட்­டன. 

“கிரு­மித்தொற்று கார­ண­மாக மக்­களும் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­வ­தில்லை.  வீட்­டை­விட்டு பலர் அதி­கம் வெளி­வ­ரு­வ­தும் இல்லை. இத­னால் கடப்­பி­த­ழுக்­கான புகைப்­ப­டத்­தைக்­கூட எடுத்­துக்­கொள்ள வரு­வோரின் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் தற்­போது தொடர்­பு­கொண்டு சிறு­சிறு வேலை­கள் வழங்­கு­கி­றார்­கள்.  

“எனது ஸ்டூ­டி­யோ­வுக்­கான வாடகையைச் செலுத்­து­வ­தில் எனக்­குச் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது. 

“வாட­கைக்­கான பணத்தை திரட்­டு­வ­தற்­கா­கவே பகுதி நேர வேலை செய்­தாக வேண்­டியதாயிற்று.

“ஆனால் எனக்கு பகுதி நேர வேலை ஏதும் கிடைக்­க­வில்லை. 

“கடந்த வியா­ழக்­கி­ழமை துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வெளி­யிட்ட புதிய திட்­டங்­க­ளால் சற்று மன நிம்­மதி ஏற்­பட்­டுள்­ளது. 

“கடை உரி­மை­யா­ளர்­க­ளுக்­குத் தாரா­ள­மாக சொத்து வரி சலுகை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

“அதைக் கொண்டு உரி­மை­யா­ளர்­கள் எங்­க­ளைப் போன்ற வாட­கை­தா­ரர்­க­ளுக்கு வாட­கைச் சலுகை அளித்­தால் பேரு­த­வி­யாக இருக்­கும். 

“சாதா­ரண இயல்பு வாழ்க்­கை­யும் முடங்­கி­யுள்­ளது. இரவு நேரங்­களில் நண்­பர்­க­ளைச் சந்­தித்து வாழ்க்­கை­யைப் பற்றி பேசு­வோம். தற்­போது என் நிலை­மை­யைப் பற்றி பகிர்ந்­து­கொள்­ளக்­கூட யாரை­யும் சந்­திக்க முடி­ய­வில்லை. 

“அனை­வ­ரும் அவ­ர­வர் வீட்­டி­லேயே இருக்­கின்­ற­னர்,” என்று  வேத­னை­யு­டன் குறிப்­பிட்­டார் கிஷோர்.

 

நனவான கனவு ஒரேயடியாக கலையும் அபாயம்

“வங்­கி­களும் கடனுக்கான வட்­டி­யைச் சில மாதங்­க­ளுக்­குத் தள்­ளு­படி செய்­தால்  சிறிய நிறு­வ­னங்­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கும் என்கிறார்  மோஹன் குமார் வடமலையன். படம்: மோஹன் குமார் வடமலையன்
“வங்­கி­களும் கடனுக்கான வட்­டி­யைச் சில மாதங்­க­ளுக்­குத் தள்­ளு­படி செய்­தால் சிறிய நிறு­வ­னங்­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கும் என்கிறார் மோஹன் குமார் வடமலையன். படம்: மோஹன் குமார் வடமலையன்

உல­கெங்­கும் மின்னல் வேகத்தில் பர­வி­வ­ரும் கொரோனா கிரு­மித் தொற்­றால் வாகனங்களை விற்கும் 30 வயது மோஹன் குமார் வடமலையனின் தொழில் முற்­றி­லும் முடங்கியுள்ளது. 

“கிரு­மித்தொற்­றால் மக்­கள் தங்­க­ளின் அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கே முன்­னுரிமை வழங்­கு­கின்­ற­னர். அது­தான் சரி­யான போக்கு. ஆனால் என்­னைப் போன்­ற­வர்­க­ளுக்­கு அது பெரிய  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

“பொரு­ளா­தா­ரம் நல்ல முறை­யில் இருக்­கும்­போ­து­தான் கார் வாங்­கு­வது, மேம்­ப­டுத்­து­வது, மாற்­று­வது போன்ற சிந்­த­னைகள் பொதுமக்களுக்குத் தோன்றும். இன்றைய நெருக்கடிமிக்க காலக்கட்டத்தில் கார் பற்றி எவரும் யோசிக்­கப்­போ­வ­தில்லை. 

“எங்­கள் கடையில் நாங்­கள் வைத்­துள்ள கார்­க­ளுக்கு மாதந்­தோ­றும் கட­னுக்கு வட்டி கட்­டி­யா­க­வேண்­டும். 

“கடந்த வியா­ழக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்ட மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அர­சாங்­கம் சம்­பந்­தப்­பட்ட கட்­ட­ணங்­க­ளுக்­குத் தள்­ளு­ப­டி­களும் சலு­கை­களும் அதி­கம் இடம்பெற்றுள்ளன. 

“வங்­கி­களும் கடனுக்கான வட்­டி­யைச் சில மாதங்­க­ளுக்­குத் தள்­ளு­படி செய்­தால் என்­னைப் போன்ற சிறிய நிறு­வ­னங்­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கும். “சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து வந்த நான் ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு இந்த கார் விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினேன்.

“இதன் மூலம் எனது நீண்டநாள் கனவு நனவானது. ஆறு பேருக்­குச் சம்­ப­ளம், அலு­வ­ல­கத்­திற்­கான வாடகை, கார்­

க­ளுக்கான மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன், அதை­யெல்­லாம் தாண்டி குடும்பச் செலவு என அடுத்த சில மாதங்­கள் எப்­படிக் கழி­யப்­போ­கின்­றன என்­ப­தை நினைத்தால் கவலையாக இருக்கிறது.  

“நன­வான என் நீண்டநாள் ஆசை இந்த கொரோனா கிருமித்தொற்றால் கலைந்துவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது,” என்றார் மோஹன் குமார்.

 

கல்வி பற்றிய கவலை எனக்குள் எழுந்துள்ளது

மலே­சி­யா­வில் மருத்­து­வம் பயி­லும் 25 வயது வினிஷா பிள்ளை
மலே­சி­யா­வில் மருத்­து­வம் பயி­லும் 25 வயது வினிஷா பிள்ளை

மலே­சி­யா­வில் மருத்­து­வம் பயி­லும் 25 வயது வினிஷா பிள்ளை  சிங்கப்­பூ­ரில் இருந்­த­போது  நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை மலே­சியா பிறப்­பித்­தது. இதை­ய­டுத்து வினிஷா சிங்­கப்­பூ­ரி­லேயே தங்கி­ விட்­டார்.

“மலே­சி­ய­ராக இருந்­தா­லும் நான் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி. குடும்­பத்­தி­னர் இங்கே இருப்­ப­தால் எனக்கு மன நிம்­ம­தி­யாக இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரர்­கள் சிலர் மலேசியா­வில் நான் பயி­லும் 

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயில்­கின்­ற­னர். மாண­வர் விசாவை புதுப்­பிக்க மலே­சிய குடி­நு­ழைவு ஆணை­யத்­தி­டம் தங்­க­ளது கட­வுச்­சீட்டை அவர்­கள் கொடுத்­தி­ருந்­த­னர். அத­னால் அவர்­க­ளால் சிங்­கப்­பூர் திரும்­ப­மு­டி­ய­வில்லை. இருப்­பி­னும் பல­ச­ரக்­குக் கடை­கள் திறந்­தி­ருப்­ப­தால் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை வாங்க அவர்­க­ளால் முடி­கிறது. அவர்­களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. எனினும் கல்விக்கான தேர்­வு­கள் எவ்வாறு நடைபெறும், பாடங்­கள் எப்­படி நடத்­தப்­படும் என எனக்குள் பல கேள்விகளும் கவலையும் எழுந்துள்ளன,” என்று வினிஷா கூறினார். 

திட்டம் ரத்தானதில் வருத்தம் இல்லை

“தனி­யார் துணைப்­பாட வகுப்பு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் எனக்கு வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை செய்­ய­வேண்­டிய கட்­டா­ய­மும் ஏற்­பட்­டு­விட்­டது என்கிறார் முகம்­மது ஷேக் ஃபைசல்.
“தனி­யார் துணைப்­பாட வகுப்பு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் எனக்கு வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை செய்­ய­வேண்­டிய கட்­டா­ய­மும் ஏற்­பட்­டு­விட்­டது என்கிறார் முகம்­மது ஷேக் ஃபைசல்.

மார்ச் பள்ளி விடு­மு­றை­யில் தமது மனை­வி­யு­டன் பாலி சென்­றி­ருந்த 29 வயது முகம்­மது ஷேக் ஃபைசல் கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பாக விடுக்­கப்­பட்ட  பயண எச்­ச­ரிக்­கைக்கு அடி

பணிந்து விடு­மு­றைத் திட்­டத்தை ரத்து செய்து பாதி­யிலே நாடு திரும்­பி­னார்.  “முத­லில் இரு­வ­ருக்­கும் ஏமாற்­ற­மா­கத்­தான் இருந்­தது. ஆனால், எங்­கள் நல­னுக்­கா­கத் தான் அர­சாங்­கம் பயண எச்­ச­ரிக்­கையை அறி­வித்­தது என்ற புரி­தல் எங்­க­ளுக்கு இருந்­தது. எனவே, பய­ணம் பாதி­யி­லேயே முடிந்­த­தைப் பற்றி நாங்­கள் வருத்­தப்­ப­ட­வில்லை. 

“தனி­யார் துணைப்­பாட வகுப்பு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் எனக்கு வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை செய்­ய­வேண்­டிய கட்­டா­ய­மும் ஏற்­பட்­டு­விட்­டது. நான் வேலை செய்­யும் துணைப்­பாட நிலை­யம் மூடப்பட்­ட­தால் வீட்­டில் இருந்­த­வாறு வேலை செய்­கி­றேன்.

“எங்­கள் நிலை­யம் ஏற்கெனவே இணை­யம் வழி கற்­றலை ஊக்­கு­வித்து வந்­த­தால் நாங்­கள் எளி­தில் இந்­தக் கற்­பித்­தல் முறை­யைப் பின்­பற்­றி­னோம்.

“மாண­வர்­க­ளின் கல்வி தடைபடக்­கூ­டாது என்­பதை நோக்­க­மா­கக் கொண்டு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­னோம். இணை­யம் வழி கற்­றலை மாண­வர்­க­ளின் பெற்­றோர் வர­வேற்­ற­னர்.  கிரு­மித்­தொற்று மோச மாகா­மல் இருக்க பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் கட்­டம் கட்­ட­மாக செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இச்­ச­வால்­மிக்­க­ கா­ல­கட்­டத்தை ஒன்­றி­ணைந்து  கடந்து செல்ல வேண்­டும்,” என்­றார் ‌ஷேக் ஃபைசல்.