தனித்து வாழும் முதியோருக்கு பக்கபலமாக உள்ள இளம் தம்பதி

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் நேர்­முகச் சந்­திப்­பு­கள் வெகுவாகக் குறைந்திருந்தாலும் உதவி தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு மற்ற வழி­களில் தங்களின் அக்கறையைக் காட்ட கிஷோர்குமார்-ஜமுனா தம்பதியர் முற்படுகின்றனர். இவர்கள் இருவருமே சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் இளை­யர் பிரிவில் பணியாற்றும் தொண்­டூ­ழி­யர்கள்.

கிட்­டத்­தட்ட 5000 உறுப்­பி­னர்­கள் கொண்ட இந்த இளை­யர் பிரி­வில் உள்ள 28 வயது கிஷோர்­கு­மார் சிவ­குமார் மற்றும் அவரின் மனைவி 29 வயது ஜமுனா கும­ரேசன், ‘எல்­டர்­எய்ட்’ (Elderaid) திட்­டத்தில் இணைந்து தனித்து வாழும் முதி­யோ­ருக்குத் தங்களால் முடிந்த உத­வி­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தின் திருப்­பூர் மாவட்­டத்­தி­லி­ருந்து சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­பெ­யர்ந்த இவர்­கள், தொண்­டூ­ழிய அமைப்பு ஒன்­றில் சேர்­வது இதுவே முதல் முறை.

“செஞ்­சி­லு­வைச் சங்­கம் அனைத்­து­லக அள­வில் நற்­பெ­ய­ரைக் கொண்ட ஓர் அமைப்பு. அத்­து­டன், எங்­க­ளுக்­குத் தெரிந்த நண்­பர் ஒரு­வர் இந்த அமைப்­பில் இருப்­ப­தால் இதில் சேர்­வ­தற்கு எளிதாக இருந்­தது,” என்­றார் தள­வாட துறையில் நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் கிஷோர்.

செஞ்­சி­லுவைச் சங்­கத்­தில் சேர்ந்த பிறகு அடிப்­படை முத­லு­தவி அளிப்பது, பிற­ரு­டன் நட்­பு­றவை ஏற்படுத்திக்கொள்வது, மன­நல உதவி வழங்குவது ஆகி­ய­வற்­றுக்­கான முறை­யான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்பட்டது.

‘எல்­டர்­எய்ட்’ திட்­டத்­தில் இருப்­ப­வர்­கள் இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை, குறிப்­பிட்ட ஒரு முதி­ய­வ­ரைக் கண்டு அவ­ரது தேவை­க­ளைக் கவ­னித்து வரு­வர். கடந்த ஆண்டு மே மாதத்­தில் இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்த தம்­ப­தி­யர், 77 வயது மூதாட்டி ஒரு­வ­ருக்­குப் பரா­ம­ரிப்பு அளித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­த­னர்.

ஒவ்­வொரு முறை­யும் அந்த மூதாட்­டி­யைக் சந்திக்கும்போது கிட்­டத்­தட்ட மூன்று, நான்கு மணி நேரத்­திற்கு அவ­ரு­டன் உற­வா­டு­வ­தாக அந்­தத் தம்­ப­தி­யர் தெரி­வித்­த­னர்.

“தனித்து வாழும் அந்த மூதாட்­டி­யின் வீடு சுத்­த­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் உள்­ளதா என்­ப­தைப் பார்க்­க­வேண்­டும். அவ­ரது உடல்­நி­லை­யை­யும் மன­நி­லை­யை­யும் நாங்­கள் கண்­கா­ணிக்­க­வேண்­டும். தரப்பட்ட மருந்துகளைச் சரி­யாக உட்­கொள்­கிறாரா என்­ப­தைக் காண­வேண்­டும். தேவைப்­பட்­டால் அவர்­களை மருந்­த­கங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­ல­வேண்­டும்,” என்­றார் கிஷோர்­கு­மார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று குறித்த ஆக அண்­மைய தக­வல்­க­ளு­டன் மேலும் பல பய­னுள்ள தக­வல்­களை இந்த முதி­ய­வர்­க­ளி­டம் தெரி­விக்­கும் பொறுப்பு இவர்­க­ளைப் போன்ற பரா­ம­ரிப்­பா­ள­ருக்கு உள்­ளது. இவ்­வாண்டு ஜன­வரி மாதம் தொடங்­கிய கொரோனா கிரு­மிப்­ ப­ர­வல் தீவி­ர­ம­டைந்­ததை அடுத்து தொண்­டூ­ழி­யர்­கள், முதி­ய­வர்­களை நேரில் சந்­திப்­ப­தற்­குப் பதி­லாக அவர்­க­ளு­டன் தொலை­பேசி வழி­யா­கத் தொடர்­பு­கொள்­ளத் தொடங்­கி­னர்.

“தொண்­டூ­ழி­யர்­க­ளான எங்­க­ளது நலனை செஞ்­சி­லு­வைச் சங்­கம் சிரத்­தை­யு­டன் கவனிக்­கிறது. சமூக இடை­வெ­ளி­யைக் கட்­டிக்­காத்­தல் உள்­ளிட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்த சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்­கி­ய­து­டன் வெளி நட­வ­டிக்­கை­க­ளைப் படிப்­ப­டி­யா­கக் குறைக்க சங்கம் உதவியது,” என கிஷோர்­கு­மார் கூறி­னார்.

இருந்­த­போ­தும் நேர­டிச் சந்­திப்பு இல்­லா­மல் தர­மான பரா­ம­ரிப்பை வழங்­கு­வது சற்று சவா­லாக இருப்பதாக அந்தத் தம்­ப­தி­யர் குறிப்­பிட்­ட­னர்.

தனி­மை­யி­லும் பேச்­சுத்­துணை இல்­லாத நிலை­யி­லும் இருக்­கும் முதி­யோ­ருக்கு கிரு­மிப் ­ப­ர­வல் நேரத்­தில் ஆத­ர­வ­ளிப்­பது மிக­வும் முக்­கி­யம் என இந்­தத் தம்­ப­தி­யர் தெரி­வித்­த­னர்.

“மற்­ற­வர்­க­ளைக் காட்­டி­லும் முதி­யோர் இந்­நோ­யால் அபா­யத்தை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். ஆயி­னும் இளை­யர்­க­ளான எங்­கள் மீதான அக்­கறை அவர்­க­ளுக்கு அதி­கம் உள்­ளது,” என்று தரவு ஆய்­வா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­மதி ஜமுனா கூறி­னார்.

வெளி­நாட்­டுப் பய­ணக் கட்­டுப்­பாடு நில­வும் இந்­நே­ரத்­தில் தமி­ழ­கத்­தில் இருக்­கும் தங்­க­ளது பெற்­றோர்­க­ளு­டன் தொலை­பே­சி­யில் அடிக்­கடி தொடர்­பு­கொண்டு பேசுவதாக அவர்­கள் கூறி­னர். வய­தான காலத்­தில் பிற­ரது பரா­ம­ரிப்­பும் தைரி­ய­மூட்­டும் வார்த்­தை­யும் முதி­யோ­ருக்கு அதி­கம் தேவைப்­ப­டு­வ­தைத் தங்­கள் சேவை­யின்­வழி உணர்­வ­தா­கக் கூறும் இந்த இளை­யர்­கள், இத­னைப் பற்றி பிற இளை­யர்­களும் யோசிக்க வேண்­டும் எனத் தெரி­வித்­த­னர்.

“பிற்­கா­லத்­தில் நாமும் இவர்­க­ளைப் போல மூப்­ப­டை­வோம் என்­பதை நினை­வில் கொள்­வது அவ­சி­யம்,” என்று திரு­மதி ஜமுனா கூறி­னார்.

நோய்ப்­ ப­ர­வல் நில­வும் நேரத்­தில் நேர­டித் தொடர்பு குறைந்­தா­லும் அதற்கு ஈடாக மற்ற வழிகள் மூலம் அக்­க­றைக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­பது முக்­கி­யம் என்று அவர் தெரி­வித்­தார்.

“சமூக இடை­வெ­ளி­யைக் கட்­டிக்­காக்­க­ வேண்­டும் என்­ப­தற்­காக இவர்­க­ளு­டன் உற­வா­டு­வதை அறவே கைவி­ட­வேண்­டும் என்­ப­தில்லை. உங்­க­ளுக்­குத் தெரி­யா­த­வர்­க­ளாக இருந்­தா­லும் அக்­கம்­பக்­கத்­தில் வசிக்­கும் முதி­யோ­ரைக் காணும்­போது தூரத்­தி­லி­ருந்து இவர்­க­ளுக்­குக் கை­காட்டி சிரித்­தாலே அவர்­கள் மகிழ்ச்சி அடை­வர்,” என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!