நிச்சயமற்ற சூழலில் நம்பிக்கை, உற்சாகத்தை இழக்காத மாணவி வினோஷா

பல­துறை தொழிற்­கல்­லூ­ரிப் படிப்பை முடித்­து­விட்டு தற்­போது பல்­க­லைக்­க­ழ­கம் செல்லக் காத்­தி­ருக்­கும் 19 வயது வினோஷா அன்­ப­ரசன் (படம்) போன்ற மாண­வர்­க­ளுக்கு இந்­தக் கிரு­மிப் ­ப­ர­வல் நேரம் வழக்­க­மான வாழ்க்­கை­ மு­றை­யி­லி­ருந்து மாற்றிவிட்டது. ரிபப்­ளிக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் ஹோட்­டல் மற்­றும் உப­ச­ரிப்­புத் துறை படிப்பை வெற்­றி­க­ர­மாக முடித்த வினோஷா, நண்­பர்­க­ளைச் சந்­திக்­கவோ வெளியே செல்­லவோ முடி­யா­மல், வீட்­டில் இருந்­து­கொண்டே பட்­ட­யம் பெற்­ற­தைக் கொண்­டாட வேண்­டி­யுள்­ளது.

நார்த் வியூ உயர்­நி­லைப் பள்­ளி­யில் சாதா­ரண நிலைத் தேர்வை முடித்த பிறகு அடுத்த நிலை கல்வி பற்றி பல­ரி­டம் கலந்து­ஆலோசித்த வினோஷா, இறு­தி­யில் ஹோட்­டல், உப­ச­ரிப்­புத் துறை­யில் பயில முடிவு செய்­தார். “அனை­வ­ரு­ட­னும் சிரித்­துப் பழ­கும் என் சுபா­வத்­தைக் கண்டு எனக்கு உப­ச­ரிப்­புத் துறை ஏற்­ற­தாக இருக்­கும் என எண்ணி என் பெற்­றோ­ரும் நண்­பர்­களும் அதனை ஊக்­கு­வித்­த­னர்,” என்று அவர் தெரி­வித்­தார். அத்­து­டன், இந்­தத் துறை­யில் வேலை வாய்ப்பு நன்­றாக இருக்­கும் என்று அப்­போது எண்ணி இதில் சேர்ந்­த­தாக வினோஷா கூறி­னார்.

வேலைப் பயிற்­சிக்­காக வியட்­நா­மின் டானாங் நக­ரி­லுள்ள ‘ஹயட் ரீஜன்சி ரிசோர்ட் அன்ட் ஸ்பா’ ஹோட்­ட­லில் பணி­யாற்­றி­ய­போது கொவிட்-19 கிரு­மிப் ­ப­ர­வல் தலை­தூக்­கத் தொடங்­கி­ய­தாக வினோஷா தெரி­வித்­தார். கடந்­தாண்டு ஆகஸ்ட் அங்கு சென்ற அவர், இவ்­வாண்டு பிப்­ர­வரி

சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பி­னார்.

“வெவ்­வேறு நாடு­களில் இருந்த எங்­களை சிங்­கப்­பூ­ருக்கு முன்­கூட்­டியே வர­வ­ழைக்க எங்­க­ளது விரி­வு­ரை­யா­ளர்­கள் முயன்­ற­னர். சீனா­வில் வேலைப் பயிற்சி மேற்­கொண்­டி­ருந்த என் பள்ளி நண்­பர்­கள் உடனே சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்,” என்று அவர் கூறி­னார்.

வினோஷா முன்­கூட்­டியே திரும்ப முடிந்­த­தால் அவ­ருக்கு வீட்­டில் தங்­கும் உத்­த­ரவு கொடுக்­கப்­ப­ட­வில்லை. ரிபப்ளிக் பல­துறை தொழிற்­கல்­லூரி வேலை வாய்ப்­பு­களை மாண­வர்­க­ளுக்­குத் தேடித் ­த­ரு­வ­து­டன் கற்­ற­லைத் தொடர்­வ­தற்­கான வளங்­களை அவர்­க­ளுக்­குப் பரிந்­து­ரைக்­கிறது. இருந்­த­போ­தும் தற்­போது காணப்­படும் வேலை வாய்ப்­பு­க­ளின் கவர்ச்­சித்­தன்மை முன்­னைய ஆண்­டு­க­ளை­விட குறை­வாக இருப்­ப­தா­கக் கூறிய வினோஷா, இதற்கு தற்­போ­தைய கிரு­மித்­தொற்று கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று தாம் நினைப்­ப­தா­க இவர் சொல்கிறார்.

தொடர்ந்து படிப்­பதே தற்­போ­தைய சூழ­லுக்கு உகந்­தது எனத் தெரி­விக்கும் வினோ­ஷா­வுக்கு என்­யு­எஸ், என்­டியு, எஸ்­எம்யு ஆகிய மூன்று கல்­விக் கழ­கங்­க­ளி­லி­ருந்­தும் வர்த்­த­கத் துறையில் கல்வி பயில அனுமதி கிடைத்துள்ளது.

இவற்­றில் ஏதே­னும் ஒன்­றைத் தெரிவு செய்து இரட்டை பட்­டப்­ப­டிப்பை எடுப்­பது பற்றி யோசித்து வரு­வ­தாக அவர் கூறி­னார். எனி­னும், இந்தக் கிரு­மிப்­ ப­ர­வல் சூழ­லி­லும் உப­ச­ரிப்­புத் துறை­யி­ல் திறனாளர்கள் தேவைப்படுவதாக வினோஷா கரு­து­கி­றார்.

பிற­ரின் தேவை­க­ளைத் துல்­லி­ய­மாக அறிந்து அவர்­க­ளைப் பொறு­மை­யு­டன் கவ­னிக்­கக்­கூ­டிய இவர்­கள், வீட்­டில் தங்­கும் உத்­த­ர­வின்­கீழ் இருப்­ப­வர்­கள் ஹோட்­ட­லில் பரா­ம­ரிக்கப்படுவதை இவர் சுட்டுகிறார்.

“ஒரு­வ­கை­யில் இவர்­களை முன்­னிலை ஊழி­யர்­கள் என்றே கரு­த­லாம்,” என்று அந்த இளம்­பெண் பெரு­மை­யு­டன் கூறு­கி­றார்.

கிரு­மிப் ­ப­ர­வலை முறி­ய­டிக்­கும் ­திட்­டத்­தின்­போது வீட்­டில் முடங்­கி­யி­ருந்­தா­லும் மன­தில் நம்­பிக்­கை­யை­யும் உற்­சா­கத்­தை­யும் கட்­டிக்­காக்க வேண்­டும் என்­கி­றார் வினோஷா.

உப­ச­ரிப்­புத் துறை­யில் இருப்­ப­வர்­கள், தங்­க­ளுக்­குள் இருக்­கும் கவ­லை­களை மறைத்து பிறர் முன்­னி­லை­யில் புன்­சி­ரிப்­பு­டன் காட்­சி­ய­ளிக்­கும்­போது அவர்­க­ள் தங்­க­ளை­யும் மற்றவர்களையும் மகிழ்­விக்­கும் பண்பு உன்­ன­த­மா­னது என்று இவர் கரு­து­கி­றார்.

இந்­தப் பண்பை அனை­வ­ரும் இக்­கா­லகட்­டத்­தின்­போது பின்­பற்­றி­னால் கிரு­மிப்­ப­ர­வலை எதிர்­கொள்­ளும் சிர­மம் கணி­ச­மா­கக் குறை­ய­லாம் என்று அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!