வீட்டிலிருந்தவாறு தோள் கொடுக்கும் தோழர்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று மக்­கள் நட­மாட்­டத்தை ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது. சமூ­கத்­தின் வெவ்­வேறு பிரி­வி­னர் இந்­நி­லை­யில் மன­நல பிரச்­சி­னை­களை அனு­ப­விக்­கக்கூடும், குறிப்­பாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்.

பாதிக்கப்பட்டவர்கள் சீரான அமைதியான மனதுடன் இருக்க வேண்டும் என்ற அக்­க­றை­யில் அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­மனை ‘அலெக்ஸ் ஹீல்’ எனும் தொண்­டூ­ழி­யத் தோழமைத் திட்­டத்தை நடத்தி வரு­கிறது.

இதில் தொண்­டூ­ழி­யர்­கள் மெய்­நி­கர் காணொளித் தொடர்பு வழி, அலெக்­சாண்­டிரா மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 நோயா­ளி­க­ளி­டம் உரை­யாடி வரு­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டம் நண்­பர் போல் பேசி, அவர்­க­ளின் பிரச்­சி­னை­களை செவி­ம­டுத்து கேட்­கின்­ற­னர். இத்­தோ­ழ­மைத் திட்­டத்­தில் தொண்­டூ­ழி­ய­ராக சேவை­யாற்றி வரு­கி­றார் தேசிய தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயி­லும் எஸ். வெனி‌‌‌ஷா.

இந்த 17 வயது இளை­யர் அண்­மை­யில் கியென் தெக் தங்­கும் விடு­தி­யில் கொவிட்-19 நோய் தொற்­றிய இந்­திய வெளி­நாட்டு ஊழி­ய­ரி­டம் ‘சூம்’ எனும் மெய்­நி­கர் சந்­திப்பு காணொளி தொடர்பு வழி­யாக உரை­யா­டி­னார்.

அந்த வெளி­நாட்டு ஊழி­யர் கடந்த மாதம் 23ஆம் தேதி அம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

தமது சொந்த ஊருக்­குச் சென்று வந்து ஓராண்­டுக்கு மேலாகிவிட்­டது என்­றும் இது­வ­ரை­யில் தமக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பதை குறித்து தமது குடும்­பத்­தி­ன­ரி­டம் சொல்­ல­வில்லை என்­றும் அவர் வெனி­‌‌‌ஷா­வி­டம் கூறினார்.

“அவ­ரின் பிரச்­சி­னை­களை செவி­ம­டுத்தி கேட்­ட­தன் மூலம் அவ­ருக்கு உத­வி­யுள்­ளேன் என நம்­பு­கி­றேன். தமது குடும்­பத்தை வெகு நாட்­க­ளாக பார்க்­காத ஏக்­கம் அவ­ருக்கு உள்­ளது, அவர் களைப் பற்றி கேட்­ட­போது, அவர் மகிழ்ச்சி அடைந்­தார்,” எனச் சொன்­னார் வெனி‌‌‌ஷா.

கடந்த ஆண்டு தம் தந்தை மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போது,

அங்­குள்ள சூழலை கூர்ந்து கவ­னித்த வெனி‌‌‌ஷா அம்­ம­ருத்­து­வம­னை­யி­லேயே தொண்­டூ­ழி­யம் புரிய எண்­ணி­னார். பெரும்­பா­லும், குடும்ப உறுப்பினர்­கள் நோயா­ளி­யைப் பார்க்க வந்து அவர்­க­ளி­டம் உரை­யா­டும்­போது அதில் அந்த நோயா­ளி­கள் உற்­சா­கம் அடை­வது வெனி­‌‌‌ஷாவை இத்­தொண்­டூ­ழி­யச் சேவை­யில் ஈடுபடத் தூண்­டி­யது.

காணொளி வழி­யாக உரை­யா­டு­வ­தன் தாக்­கம் நேரில் சந்­தித்து பேசு­வ­தற்கு ஈடா­காது என்­றா­லும், அவர்­க­ளின் பிரச்­சி­னை­களைக் கேட்­ப­தும் நோய் பற்றி சிந்­திக்­கா­மல் இருக்க மற்ற வி‌‌ஷ­யங்­க­ளைப் பற்றி பேசு­வ­தும் இந்­நி­லை­யில் முக்­கி­ய­மா­கி­றது என வெனி‌‌‌ஷா குறிப்­பிட்­டார். இத்­த­கைய அர்­த்த­முள்ள தொண்­டூ­ழிய அனு­ப­வங்­கள் எதிர்­கா­லத்­தில் ஒரு நல்ல மருத்­து­வ­ராக ஆக வேண்­டும் என்ற இவ­ரது லட்­சி­யத்­திற்கு அடித்­த­ளத்தை அமைத்­துத் தரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!