புதிய நிறுவனங்களுக்கான போட்டியில் வென்ற மனநலச் செயலி

‘ஸ்டார்­ட்டப் வீக்­கெண்ட்’ (Startup Weekend) என்ற வரு­டாந்­திர போட்டி இம்­முறை சற்று வித்­தி­யா­ச­மாக இணை­யம் வழி ஏப்­ரல் 24 முதல் 26ஆம் வரை­யி­லான தேதி­களில் நடத்­தப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று நோய்க்­கான தடுப்பு மருந்தை உரு­வாக்க ஒர் ஆண்டு முதல் 18 மாத­கங்­கள் எடுக்­கும் என்­றும் இந்த நோய் நீண்ட காலத்­திற்கு உல­கில் இருக்­கும் என்­றும் கூறி­னார் நிகழ்ச்­சி­யின் தொடக்க அங்­கத்­தில் சிறப்புப் பேச்­சா­ள­ராக இடம்­பெற்ற வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன்.

“நாம் செய்­யும் அனைத்­தை­யும், அதன் அடிப்­படை அம்­சங்­கள் வரை மறு­ப­ரீ­சி­லனை செய்­ய­வேண்­டும். இது வெறும் ஒரு புது நிறு­வ­னத்­தையோ புது பொரு­ளையோ புது சேவை­யையோ உரு­வாக்­கு­வதற்கு மட்­டு­மில்லை.

ஆக்­கபூர்வ பிளவு (creative disruption) ஏற்­படும் இச்­ச­ம­யத்­தில் நீங்­கள் இருக்­கி­றீர்­கள். இந்த தைரி­ய­மான புதிய உல­கத்தை உரு­மாற்­றும் வாய்ப்பு உங்­க­ளது பொருட்­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கும் உண்டு,” என்­றார் காணொளி மூலம் பேசிய அமைச்­சர் விவி­யன்.

இந்­தப் போட்­டி­யில் 750க்கும் மேல் பங்­கேற்­பா­ளர்­கள் இடம்­பெற்­ற­னர். குழுக்­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட இவர்­கள், 54 மணி நேரத்­திற்­குள் புத்­தாக்­கமிக்க படைப்பை மின்­னி­லக்க முறை­யில் உரு­வாக்­கி­னார்­கள். அதில் 12 குழுக்­கள் இறுதி சுற்­றுக்­குத் தேர்வு செய்­யப்­பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழுக்­கள் பரி­சு­க­ளைப் பெற்­றன.

சமர்­ப்பிக்­கப்­பட்ட விண்­ணப்­பங்­களில் ‘மைண்ட்­ஹைவ்’ (Mindhyve) என்ற குழு, மன­ந­லத்­திற்­கான செய­லியை உரு­வாக்­கி­யதற்கு முதல் பரி­சைத் தட்­டிச் சென்­றது.

மன­ந­லத்­திற்­கான முக்­கி­யத்து வம் அதி­க­ரித்து வரும் இந்­நி­லை­யில் இந்­தச் செயலி பல­ருக்­கும் பய­ன­ளிக்­கும் என்று நம்­பு­கி­றார் செய­லி­யின் பொருள் மேம்­பாட்டுப் பிரி­வுக்குத் தலை­மை தாங்­கும் திரு ராபர்ட் ராஜேஸ்­வ­ரன், 29.

திரு ராபர்ட் உட்­பட பெட்­ரினா கோமெஸ், 27, இலேன் யோ, 27, லிடியா சியோங், 27 ஆகிய நான்கு இளை­யர்­களை உள்­ள­டக்­கிய குழு, ‘மைண்ட்­ஹைவ்’.

“மக்­களின் உள்­ளங்­கை­க­ளுக்­குள் மன­நல சிகிச்­சை­க­ளைப் பெறும் வச­தியை வழங்­கு­கி­றோம். சில விரல் அழுத்­தங்­களில் தேவை­யான அனைத்து வளங்­க­ளை­யும் பெற­லாம்.

“இதற்கு முன் மன­ந­லத் தேவை­க­ளுக்­காக நேர­டி­யாக மருத்­து­வரை அணு­க­வேண்­டும். அவர்­கள் தக்க மன­ந­ல­திற்­கான சிகிச்­சைக்­குப் பரிந்­து­ரைப்­பார்­கள். அல்­லது இணை­யம் வழி உதவி நாட­லாம். அல்­லது மற்­ற­வர்­க­ளி­டம் உதவி கேட்­க­லாம். ஆனால் மன­

ந­லம் குறித்த உத­வியை மற்­ற­வர்­க­ளி­டம் கேட்­பது எல்­லோருக்­கும் பொருத்­த­மாக இருக்­காது,” என்­றார் திரு ராபர்ட்.

மன அழுத்­தம் குறித்த நோய்­க­ளால், ஓர் ஆண்­டுக்கு சிங்­கப்­பூ­ரின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏறத்­தாழ $3.2 பில்­லி­யன் செல­வா­கிறது என்­றும் மன­ந­லத்­திற்கு முத­லீடு செய்­யும் ஒவ்­வொரு $1க்கும் இணை­யாக கிட்­டத்­தட்ட $5.60 முத­லீட்டு ஆதா­யம் (return on investment) கிடைக்­கும் என்­றும் ‘மைண்ட்­ஹைவ்’ குழு, போட்­டி­யின் இறு­திச் சுற்று படைப்­பில் தெரி­வித்­தது.

நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து ஊழி­யர்­க­ளுக்கு மன­நல வச­தி­களை வழங்க திட்­டங்­கள் உள்­ளன என்­றும் மே மாத இறு­திக்­குள் இந்­தச் செயலி தயா­ரா­கும் என்­றும் தெரி­வித்­தார் ராபர்ட்.

இந்தச் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­வ­தும் சில அம்­சங்­க­ளைப் பெறு­வ­தும் இல­வ­ச­மாக இருந்­தா­லும், சிகிச்­சை பெறு­வ­தற்­குக் கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டும்.

கட்­ட­ணம் குறித்த விவ­ரங்­க­ளைக் கூடிய விரை­வில் தீர்­மா­னம் செய்­ய­வுள்­ள­தா­க­வும் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தன் மூலம் ஊழி­யர்­க­ளுக்­குச் சலு­கை­கள் வழங்க வாய்ப்­பு­கள் இருக்­க­லாம் என்­றும் சொன்­னார் ராபர்ட்.

“தற்­போது ஏறக்­கு­றைய ஐந்து மன­நல சிகிச்சை மருத்­து­வர்­களை இந்தச் செய­லி­யின் பயன்­பாட்­டிற்­குத் தேர்வுசெய்­துள்­ளோம். மேலும் பல மருத்­து­வர்­க­ளைப் பேட்டி கண்டு, தேர்வுசெய்­ய­வுள்­ளோம். இந்தச் செய­லிக்­கான தேவை நாள­டை­வில் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கி­றோம்,” என்­றார் ராபர்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!