மெய்நிகர் உலகில் நிமலனுக்குப் பட்டயமளிப்பு

கி. ஜனார்த்­த­னன்

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின் கார­ண­மாக பல­துறை தொழிற்­கல்­லூரி கல்­வியை நிறை­வு­செய்த மற்ற மாண­வர்­க­ளைப் போல தெமா­செக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த 19 வயது நிம­லன் அன்­ப­ர­ச­னுக்கு பட்­ட­ய­ம­ளிப்பு விழா இல்லை.

‘ஏரோஸ்பேஸ் எலக்ட்ரானிக்ஸ்’ பட்டயப் படிப்பில் மிகச்சிறந்த 4.0 ஜிபிஏ புள்ளிகளுடன் தேர்ச்சிபெற்ற நிமலனும் அவ­ரது நண்­பர்­களும் ‘மைன்­கி­ரா­ஃப்ட்’ என்ற மென்­பொ­ருள் வழி­யாக தங்­க­ளுக்­குப் பட்­ட­ய­ம­ளிப்பு விழா­வைத் தாங்­க­ளா­கவே ஏற்­பாடு செய்­து­கொண்­ட­னர்.

‘மைன்­கி­ரா­ஃப்ட்’ வழி­யாக விழா பெரும் அரங்­கம் ஒன்றை அமைத்து ‘2020ன் வகுப்பு’ என்ற பெரிய பதா­கையை அந்த அரங்­கத்­திற்கு வெளியே இவர்­கள் பொருத்­தி­யி­ருந்­த­னர். இந்த மெய்­நி­கர் உல­கில் ‘அவ­தா­ரங்­கள்’ எனப்­படும் தங்­க­ளைப் போலக் காணப்­படும் மாதிரி மனித உரு­வங்­களை உரு­வாக்­கிய இந்த கெட்­டிக்­கார மாண­வர்­கள், அந்த உரு­வங்­க­ளின் வாயி­லாக அரங்­கத்­திற்­குள்ளே பட்­டயம் அளிப்பு விழா­வுக்­கு­ரிய உடை­க­ளு­டன் ‘நுழைந்­த­னர்’.

“எங்­கள் பட்­ட­ய­ம­ளிப்பு விழாவை மறு உரு­வாக்­கம் செய்­யும் யோச­னையை எங்­க­ளது நண்­பர் டேவ் முன்­வைத்­தார். இந்த விழா­வில்­எங்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கும் ‘அவ­தா­ரங்­கள்’ வழி­யாக பட்­ட­யச் சான்­றி­தழ்­க­ளைப் பெற்­றோம்.

பயிற்­சித் திட்­டத்­தில் பதக்க

விரு­து­க­ளைப் பெற்­ற­வர்­களும் இதன் முலம் பெற்­று­கொண்­டது போல பாவனை செய்­தி­ருந்­தோம். நானும் இரண்டு மாண­வர்­களும் இந்த விழா­வில் உரை­க­ளை­யும் ஆற்­றி­னோம்” என்று வர்த்­த­கத் துறை­யி­லும் கூடுதலான பாடங்களை எடுத்துப் படித்த நிம­லன் கூறி­னார்.

விமா­னப் பொறி­யா­ள­ருக்கு உரிய பயிற்­சியை நிம­லன் இந்­தப் பட்­ட­யப் படிப்­பில் பெற்­றார். 2008ல் சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­த­லாக விமா­னக் கண்­காட்சி நடந்­த­போது எட்டு வயது நிம­லனை அவ­ரது தந்தை அழைத்­துச் சென்­ற­போது விமா­னத்­துறை மீதான ஆசை நிம­ல­னின் மன­தில் தோன்­றி­யது. கிரீன்­வுட் தொடக்­கப்­பள்­ளி­யில் படித்த நிம­லன் கணக்கு, அறி­வி­யல் பாடங்­க­ளின்­மீது அதீத ஆர்­வம் கொண்­டார். ‘மேட்ஸ் ஒலிம்­பி­யட்’, ‘அமே­சிங் சைன்ஸ்-எக்ஸ் சேலஞ்ச்’ உள்­ளிட்ட போட்­டி­களில் கலந்­து­கொண்­டார். பிறகு அவர் அறி­வி­யல், தொழில்­நுட்ப பள்­ளி­யில் (எஸ்­எஸ்டி) உயர்­நி­லைக் கல்­வியை முடித்­தார்.

“தெமா­செக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் ஜெர்­மா­னிய விமா­ன­வி­யல் பயிற்சி அமைப்­பான லுஃப்த்­தான்­சா­வின் பயிற்­சி­யை­யும் பெற்­றது மற்ற பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்து மாறு­பட்ட சிறப்­பம்­சம்,” என்று அவர் தெரி­வித்­தார்.

பள்­ளிப்­பா­டங்­களை நன்கு கற்­ற­து­டன் பிற­ருக்­குத் தொழில்­நுட்­பம் சார்ந்த பயிற்சி வகுப்­பு­க­ளை­யும் அளித்­தி­ருக்­கி­றார் இந்த இளை­யர். ‘லேசர் கட்­டிங்’ எனப்­படும் ஒளிக்­கற்­றை­யால் வெட்­டு­தல், ‘3டி ப்ரின்ட்­டிங்’ எனப்­படும் முப்­ப­ரி­மாண அச்­சி­டு­தல், நிர­லி­டு­தல் உள்­ளிட்­ட­வற்றை அவர் தமது தொழிற்

கல்­லூ­ரிக்­குள்­ளும் பிற­ருக்கும் செய்து வரு­கி­றார். “இத்­த­கைய பயிற்­சி­களை நானும் எனது இணைப்­பாட நட­வ­டிக்­கைக் குழு­வி­ன­ரும் பெரும்­பா­லும் உயர்­நி­லைப் பள்ளி பயி­லும் இளை­யர்­க­ளுக்­காக நடத்­தி­னோம். பொறி­யி­யல் மீதான ஆர்­வம் இளை­யர்­க­ளுக்­குத் தொடக்­கத்­தி­லி­ருந்தே உரு­வா­னால் அவர்­கள் வருங்­கா­லத்­தில் இத்­துறை­யில் சாத­னை­களை நிகழ்த்­தக்­கூ­டும்,” என்று ‘ஏ ஸ்டார்’ அறி­வி­யல், தொழில்­நுட்ப ஆய்­வ­மைப்­பில் வேலைப் பயிற்­சி­யை­ முடித்­துள்ள நிம­லன் கூறி­னார்.

தமது பாடங்­க­ளி­லும் பொழு­து­போக்­கி­லும் கொண்­டுள்ள ஆர்­வமே நேரம் கடத்­தா­மல் அனைத்­தை­யும் சரி­யா­கச் செய்­வ­தற்கு முக்­கிய தூண்­டு­கோ­லாக அமைந்­த­தாக அந்த இளை­யர் கூறி­னார். அத்­து­டன் சொன்­ன­தைச் சொன்­ன­ப­டியே செய்­யும் பொறுப்­பு­ணர்­வால் பாடங்­களில் ஒத்­து­ழைப்பு கொடுக்­கக்­கூ­டிய நல்ல நட்பு

களைச் சம்­பா­திக்க தம்­மால் இயன்­ற­தாக நிம­லன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!