இசையை வாழ்க்கைத்தொழிலாக்கிய ஜனனி

‘கிளா­சிக்­கல் வோக்கல்’ (classical vocal) எனப்­படும் செவ்விசை வாய்ப்­பாட்டு துறை­யில் தேறு­வது எளி­தான ஒன்­றல்ல. அதி­லும் இத்­து­றை­யில் உல­க­ள­வில் கொடி­கட்­டிப் பறப்­ப­வர்­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் வெகு சிலரே. அதை முப்­பது வயது ஜனனி ஸ்ரீதர் சாதித்­துள்­ளார்.

பதி­னான்கு வய­தி­லேயே இசைத்­து­றைக்­கு­ரிய ஒலிம்­பிக் எனக் கரு­தப்­படும் ‘லெங்­கோ­லென் ஐஸ்­டெட்­ஃபோர்ட்’ போட்­டி­யில் 6,000க்கும் மேற்­பட்ட போட்­டி­யா­ளர்­க­ளி­டையே ‘சொப்­ரானோ’ (soprano) பாடகி ஜனனி ­வாகை சூடி­னார். பத்து வயது முதல் பாட்டு கற்­றுக்­கொள்ள ஆரம்­பித்து, ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ‘இசை­ஞா­னம் மிக்க பாட­கர்’ என்ற பாராட்டை அந்த பிரம்­மாண்ட மேடை­யில் பெற்­றார்.

தற்­போது அமெ­ரிக்­கா­வின் வெர்­ஜி­னியா மாநிலத்திலுள்ள டாக்­டர் ஜனனி, கொவிட்-19 நெருக்­க­டி­யால் தமது பணி­களை வீட்­டி­லி­ருந்தே செய்து வரு­வ­தாக தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

“மேடை நிகழ்ச்­சி­களில் பாட­வும் இசை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு விரி­வு­ரை­யா­ள­ரா­கப் பணி­யாற்றவும் இங்கு வந்­தேன். ஆனால் கொவிட்-19 கிரு­மி­யால் இங்கு ஊர­டங்கு நிலை உள்­ளது,” என்று தெரி­வித்­தார்.

Property field_caption_text
அமெரிக்காவின் ஸ்டோனிங்டன் நகரில், களங்கரை விளக்கத்திற்கு அருகில் கூடியிருந்த மக்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தும் டாக்டர் ஜனனி. (படம்: ஜனனி ஸ்ரீதர்)

தற்போதைய நிலையில் நோய் அபா­ய­மும் கெடு­பி­டி­யான சட்­டங்­களும் நில­வி­ய­போ­தும் இவ­ரது இசைப்­பணி மும்­மு­ர­மா­கத் தொடர்­கிறது. வாய்ப்­பாட்­டுக் கலை­யில் ஆர்­வ­முள்ள தமது தந்­தை­யும் தாயா­ரும் இதற்­கான பள்­ளி­யில் தம்­மைச் சேர்த்­த­தாக டாக்­டர் ஜனனி தெரி­வித்­தார்.

”அறி­முக வகுப்பு ஒன்­றில்­தான் நான் சேர்ந்­தேன். அப்­போது நான் கடு­மை­யாக பயிற்சி செய்­ய­வில்லை,” என்­றார் அவர்.

“ஆரம்­ப­கட்­டத்­தில் ஸ்வ­ரங்­க­ளைப் பல்­வேறு கூட்­ட­மைப்­பில் பாடி ஓர­ளவு தேர்ச்சி பெற்ற பிறகு இல­கு­வான சில பாடல்க­ளைப் பாடத் தொடங்­கி­னேன். பியா­னோவை பக்க இசைக்­ க­ரு­வி­யா­கக் கொண்டு பாடக்­கூ­டிய ஒரு குரல் கீதத்­தைப் பாடத் தொடங்­கி­னேன். அதன் பிறகு இசை நாட­கங்­க­ளுக்­கான பொற்­கா­ல­மா­கக் கரு­தப்­படும் 1930, 1940களில் படைக்­கப்­பட்ட மேடைப் பாடல்­க­ளைப் பாடி என் குரல்­வ­ளத்தை வளர்த்­துக்­கொண்­டேன்,” என்று இவர் கூறுகிறார்.

செயிண்ட் மார்­க­ரட்ஸ் தொடக்­கப்­ பள்­ளி­யி­லும் உயர்­நி­லைப் பள்­ளி­யி­லும் பயின்ற இவர், 2004ஆம் ஆண்­டில் நடை­பெற்ற லெங்­கோ­லென் ஐஸ்­டெட்­ஃபோர்ட் போட்டி திருப்­பு­மு­னை­யாக அமைந்­த­தா­கக் கூறி­னார்.

“ஆரம்­பத்­தில் எனக்கு உயிர்­ம­ருத்­துவ அறி­வி­யல் துறை மீது­தான் ஈடு­பாடு இருந்­தது. நீ ஆன் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் இதற்­கான கல்வியையும் கற்றேன்,” என்று கூறி­னார். தமது பாட்­டுத் திற­னுக்­காக அவர் 2005ல் ‘ஹெச்­எஸ்­பிசி இளை­யர் உன்­னத விருதை’ அப்­போ­தைய அதி­பர் திரு எஸ்.ஆர் நாத­னி­ட­மி­ருந்து பெற்ற பிற­கு­தான் இசையை வாழ்க்­கைத் தொழி­லாக மேற்கொள்ளத் தொடங்­கி­னார்.

Property field_caption_text
'அரமீடு' (Aramide) இசை நாடகத்தில் டாக்டர் ஜனனி. (படம்: ஜனனி ஸ்ரீதர்)

பல மேடை­க­ளைக் கண்டு மேலும் பிர­ப­ல­ம­டை­யத் தொடங்­கிய டாக்­டர் ஜனனி, 2007ன் தேசிய தின அணி­வ­குப்­பில் ‘வில் யூ’ (Will you) என்ற பாட­லைப் பாடி­னார். 2008ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் ‘எஃப்1 கிராண்ட் பிரீ’ கார் பந்தயப் போட்டி முதன்­மு­றை­யாக நடந்­த­போது அதன் தொடக்க விழா­வில் டாக்­டர் ஜனனி நம் தேசிய கீதத்­தைப் பாடி­னார். அனைத்­து­லக அரங்­கில் அப்­போது அவ­ரது கம்­பீ­ரக் குரல் ஒலித்­தது.

இசை­யில் பட்­டம்­ பெற வேண்­டும் என பல­துறை தொழிற்­கல்­லூரி படிப்பை முடித்த பிறகு அவர் முடி­வெ­டுத்­தார். ‘ஓபர்­லின் கான்­சர்­வேட்­டரி ஆஃப் மியூ­சிக்’­கில் இள­நி­லைப்­பட்­டம், மேன்ஹேட்டன் இசைப்­பள்­ளி­யில் முது­க­லைப்­பட்­டம், ஸ்டோனி ப்ரூக் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முனை­வர் பட்­டம் ஆகி­ய­வற்றை இவர் பெற்றுள்ளார்.

“வாய்ப்­பாட்­டைத் தொழி­லாக எடுக்க விரும்­பு­வோ­ருக்கு முறை­யான அடிப்­ப­டைக் கல்வி அவ­சி­யம். அதன் பிறகு, எந்த பாணி­யைத் தேர்ந்­தெ­டுப்­பது என்பது குறித்து அவர்­கள் முடி­வு ­செய்­ய­வேண்­டும். பல்­வேறு பாணி­யிலான பாடல்­க­ளைக் கேட்டு இசைக் ­க­லை­ஞர்­க­ளைப் பற்­றி­யும் அவர்­க­ளது படைப்­பு­க­ளைப் பற்­றி­யும் நன்கு ஆராய்ச்சி செய்­ய­வேண்­டும்,” என்று அவர் தெரி­வித்­தார்.

பாட்டு உல­கில் ஐரோப்­பிய பண்டைய கால பாணியே உன்­ன­த­மா­னது எனக் கூறும் இந்த இளை­யர், அதில் தேர்ச்சி பெறு­வ­தற்கு கடின உழைப்­பும் நிபு­ணத்­து­வத் திற­னும் தேவை என்­கி­றார்.

“கலா­சா­ரங்­க­ளைக் கடந்து அனை­வ­ரும் ரசிக்கக்­கூ­டிய இந்த வகை இசை­யின் சிறப்பே தனி,” என்று தெரி­வித்­தார். ‘ஜாஸ்’ பாடல்­க­ளை­யும் பாடும் திறன் பெற்­ற­வர் ஜனனி. பாட­க­ருக்­குக் குரல் பயிற்சி என்­பது நாள்­தோ­றும் செய்ய வேண்­டிய கடமை என்று கூறு­கி­றார் டாக்­டர் ஜனனி.

“கற்­ற­லுக்கு முடிவே கிடை­யாது. கிட்­டத்­தட்ட இரு­பது ஆண்­டு­க­ளாக பயிற்சி பெற்ற நான், நாள்­தோ­றும் பல மணி நேரம் பயிற்சி செய்­கி­றேன். அத்­து­டன், பாடல் ஒலிப்­ப­தி­வு­க­ளைக் கேட்­பது, இசை­யைப் பற்றி ஆராய்ச்சி செய்­வது ஆகிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கி­றேன். பயிற்­சி­யும் முயற்­சி­யும் இதற்கு கண்­டிப்­பாக அவ­சி­யம்,” என்று அவர் கூறுகிறார்.

முப்­ப­துக்­கும் மேற்­பட்ட மேற்­கத்­திய இசை நாட­கங்­களில் பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்ள டாக்­டர் ஜனனி, பாடல் கலை­ஞர் மட்­டு­மின்றி நடி­க­ரும் கூட. இத்­தா­லிய மொழி, பிரஞ்சு உள்­ளிட்ட ஐரோப்­பிய மொழி­க­ளைக் கற்­ப­து­டன் நட­னம், வசன உச்­ச­ரிப்பு, நடிப்பு, உடல் அசைவு மற்­றும் வர­லாறு பற்றியும் கற்க வேண்­டி­யுள்­ள­தா­கக் கூறு­கி­றார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் இசைக்­க­லை­ஞர்­கள் பலர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் கலைக்­கான தேவை வலு­பெற்­றி­ருப்­ப­தாக ஜனனி சொல்கிறார்.

“ஆன்­மா­வுக்கு மருந்து போன்­ற­வர்­கள், கலை­ஞர்­கள் என்று எனது நண்­பர் கூறி­யதை முழு­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­கி­றேன். பிற­ருக்கு நிம்­மதி, ஆறு­தல், மீள்­தி­றன் ஆகி­ய­வற்றை அளிக்­கும் இந்த கலைப்­பணி விலை­ம­திப்­பில்­லா­தது,” என்று அவர் தெரி­வித்­தார்.

தமிழ்ப்­ பா­டல்­க­ளைப் பற்றிக் கேட்­ட­போது, 1960களில் உள்ள பாடல்­கள் தம்­மைக் கவர்ந்­துள்­ள­தா­கக் கூறி­னார். முழு­நே­ரக் கலை­ஞர்­க­ளின் பாதை கடி­ன­மா­னது என்­றா­லும் அதில் மகிழ்ச்­சி­யு­டன் பய­ணம் செய்­வ­தாக டாக்­டர் ஜனனி தெரி­வித்­தார்.

“உங்­க­ளது அடி­ம­ன­தில் உள்ள ஆசை­கள் என்ன என்­பதை உணர முயற்சி செய்­யுங்­கள். அதற்கு குறுக்கே நிற்­கும் வகை­யில் உள்ள பேச்­சுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டாம். உங்­க­ளுக்­காக நீங்­களே குரல்­கொ­டுங்­கள்,” என்­றார்.

 janark@sph.com.sg