‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்

கொவிட்-19 கிரு­மிப் ­ப­ர­வ­ல் கார­ணத்­தால் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யின் பட்­ட­ம­ளிப்பு விழா முதன்­மு­றை­யாக மெய்­நி­கர் பாணி­யில் நடை­பெற்­றது. வீட்­டி­லி­ருந்­த­

ப­டியே இதில் கலந்­து­கொண்ட 183 மாண­வர்­களில் கிரி­ஷன் சஞ்­ஜெய் மஹேஷும் ஒரு­வர். liberal arts எனப்படும் பல்­வேறு துறை­களை உள்­ள­டக்­கிய முழு­மை­யான கல்வி அனு­ப­வத்­தைப் பெற்ற இவ­ருக்­கு இம்­மா­தம் 18ஆம் தேதி­யன்று ‘மெய்­நி­கர் மேடை’யில் பட்­டக்­கல்­விச் சான்­றி­தழ்­ வழங்­கப்­பட்­டது.

“இவ்­வி­ழாவை என் பெற்­றோ­ரு­டன் யூடி­யூப் காணொளி இணைப்பு வழி­யா­கப் பார்த்­தேன். நண்­பர்­க­ளு­டன் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்­து­கொள்­ளும் வாய்ப்பு கிட்­டா­மல் போனது வருத்­த­ம­ளித்­தா­லும் கொரோனா கிரு­மிப் ­ப­ர­வ­லின்­போது பட்­டம் பெற்­றது என் வாழ்க்­கை­யின் ஒரு சுவா­ர­சி­ய­மான அனு­ப­வ­மாக என்­றுமே இருக்­கும்,” என்று இவர் கூறுகிறார்.

கல்­வி­ய­மைச்­சின் ஆசி­ரி­யர் கல்­வி­மான் விரு­தைப் பெற்ற கிரி­ஷன், இப்­பள்­ளி­யில் இயற்­பி­யல் அறி­வி­யல் (Physical Science) பாடத்­து­டன் உள­வி­யல் பாடத்­தை­யும் பயின்­றார்.

“நான் ஆசி­ரி­யர் ஆவேன் என இளம் வய­தில் நினைக்­க­வில்லை. விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் படித்­த­போ­து­தான் என் எதிர்­கா­லம் குறித்த தீவிர சிந்­தனை தொடங்­கி­யது,” எனத் தெரி­வித்­தார்.

செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலை­யத்­தி­லும் பயின்ற கிரி­ஷன், “என் உயர்­நி­லைப்­ பள்­ளி­யின் உயி­ரி­யல் பாட ஆசி­ரி­யர் திரு லிம் மெங் சாய்­யின் கற்­றல் அணு­கு­முறை வெகு காலம் ஆகி­யும் என்­னைக் கவர்ந்­துள்­ளது. அவ­ரு­ட­ன் ஏற்பட்ட பழக்­கம் வருங்­கா­லத்­தில் என்னை ஆசி­ரி­யர் ஆகத் தூண்­டி­யி­ருக்­கும் என நினைக்­கி­றேன்,” என்­றார்.

இயற்­பி­யலை முக்­கி­ய­மான துறை­யா­கக் கரு­தும் கிரி­ஷன், யேல்-என்­யு­எ­சின் விரி­வான பாடத்­திட்­டத்­தின் வழி இலக்­கி­யம், வர­லாறு, உள்­ளிட்ட மாறு­பட்ட துறை­களில் பாடம் கற்க முடிந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

“இந்த அனு­ப­வம் மற்ற அறி­வி­யல் பட்­டப்­ப­டிப்­புத் துறை­களில் எனக்­குக் கிடைத்­தி­ருக்­காது. பல்­வேறு துறை­களில் நாட்டம் உள்ள மாண­வர்­க­ளு­டன் பணி­யாற்­றும் எனக்கு இந்­தக் கல்­வி­யின் வழி கிடைத்­துள்ள பல­கோண சிந்­த­னைத் திறன் வருங்­கா­லத்­தில் எனது பணிக்கு நிச்­ச­யம் கைகொ­டுக்­கும் என நம்­பு­கி­றேன்,” என்­றார்.

உன்­னிப்­பா­கக் கவ­னிக்­கும் திற­னும் தன்­மு­னைப்­புமே கிரி­ஷ­னின் வெற்­றிக்­குக் கார­ணம் என்று அவர் தாயார் திரு­மதி ராணி சுப்­பையா, 49, தெரி­வித்­தார்.

சுறு­சு­றுப்­பும் உழைப்­பும் கூடிய கிரி­ஷன், வகுப்­பு­களில் பிற மாண­வர்­க­ளுக்கு உதவி செய்­வ­தாக பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அவ­ருக்­குக் கற்­பித்த இயற்­பி­யல் பேரா­சி­ரி­யர் அலெக்­ஸாண்­டர் ரோடின், 34, தெரி­வித்­தார்.

“வாழ்க்கையில் நாம் எதற்கு மதிப்­ப­ளிக்­கி­றோமோ, அதுவே எதிர்­கா­லத்­தில் நாம் எப்­ப­டிப்­பட்ட ஆசி­ரி­யராக இருப்­போம் என்­பதை உறுதி செய்­யும். எனவே எது முக்­கி­யம் என்­பதை முன்­கூட்­டியே சிந்­தித்து வைத்­துக்­கொள்­வது நல்­லது,” என்று ஆசி­ரி­யர்­ ஆக விரும்­பு­வோ­ருக்கு இவர் அறி­வுரை கூற விரும்­பு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!