மனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி

உயர்­நி­லைப் பள்ளியில் படிக்­கும் பரு­வத்­தி­லேயே மன­க­லக்­கம் (anxiety), உண­வுப் பழக்­கத்­தில் சீரற்ற போக்கு (eating disorder) என மன­நல சவால்­க­ளைச் சந்­தித்­த­வர் பிரி­ய­நிஷா, 28. கடந்த ஆண்டு மருத்­துவ ரீதி­யாக தனக்கு மன­அ­ழுத்­த­மும் மன­க­லக்­க­மும் இருப்­ப­தாக நிஷா கண்­ட­றிந்­தார். தனி­ந­பர் மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்த நிஷா, அதை எதிர்­நோக்­கு­ப­வர்­கள், குறிப்­பாக இளை­யர்­கள், அதற்­கான உத­வியை தக்க தருணத்தில் நாடா­மல், தங்­க­ளைத் தாங்­களே காயப்­ப­டுத்­திக் கொள்ளும் செயல்­களில் ஈடு­ப­டுவ­து குறித்து வருத்­தம் தெரி­வித்­தார்.

“பொது­வா­கவே மன­ந­லம் பற்றி வெளிப்­ப­டை­யாக யாரும் பேசு­வ­தில்லை. அதைப் பல­ரும் சரி­யாக புரிந்­து­கொள்­வ­தும் இல்லை.

“மன­ந­லப் பிரச்­சி­னை­கள், தற்­கொலை போன்­றவை ஒரு நொடியில் எடுக்­கும் முடி­வின் விளைவு அல்ல. அதற்­குப் பின்­னால் நிறைய சிந்­த­னை­யும் செயல்­களும் இருக்­கும்,” என்­றார் நிஷா.

2015ஆம் ஆண்­டில் ‘ரிசெட் ரைட்’ (Reset right) என்ற திட்­டத்­தைத் தொடங்கி அதன் மூலம் மன­ந­லம் தொடர்­பான உரை­கள், தனிப்­பட்ட முறை­யில் பயிற்­சி, குழுப் பணி­கள் ஆகி­ய­வற்றை நடத்தி வரு­கி­றார் நிஷா.

ஆலோ­சனை நிலை­யம் ஒன்­றில் ஆலோ­ச­க­ராக பணி­யாற்றி வரு­கி­றார் நிஷா. அவ­ரின் வாழ்க்­கைத் துணை­யாகவிருக்கும் 28 வயது திரு த.தேவா­னந்­தன், இளை­யர்­க­ளுக்­கான சமூக சேவை­யா­ள­ராக பணி­பு­ரி­கி­றார். தொடக்­கக் ­கல்­லூ­ரி­யில் படிக்­கும் பரு­வத்­தில் தனது நண்­பர் ஒரு­வர் உயிரை மாய்த்துக் கொண்­டதை நினை­வு­கூர்ந்த தேவா­னந்­தன், அன்று முதல் மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்து, பல சமூக அமைப்­பு­க­ளு­டன் இணைந்து மன­ந­லம் பேணும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக பகிர்ந்­து­கொண்­டார். மன­ந­லத்­தில் அனு­ப­வ­மும் ஆர்­வ­மும் கொண்­டுள்ள இந்தத் தம்­பதி ‘மெண்­டல் ஏக்ட்’ (Mental ACT) என்ற மன­நல அமைப்பை 2017ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் தோற்­று­வித்­த­னர். 36 தொண்­டூ­ழி­யர்­க­ளைக் கொண்ட இந்த அமைப்பு, 24 மணி நேர­மும் அவ­சர அழைப்­பு­களை ஏற்­ப­து­டன் ஆலோ­ச­னை­க­ளை­யும் அளித்து வரு­கிறது. மன­நல விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் பல நிகழ்ச்­சி­களை ஏற்­பா­டு செய்தும் வரு­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தடுப்பு நட­வ­டிக்­கை­கள் செயல்­

ப­டத் தொடங்­கிய காலத்­தில் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணிய ஒரு நப­ருக்கு உதவி புரிந்த அண்­மைய சம்­ப­வத்­தைப் பற்றி கூறி­னார் நிஷா.

“நம் அமைப்­பின் இண்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் நேரடி காணொளி செய்­யும் வேளை­யில் தற்­கொ­லை செய்­யப்­போ­வ­தாக அந்த நபர் கருத்­து­கள் தெரி­வித்­தார். அது நமக்கு கவ­லையைத் தந்­தது.

“ஒரு வாரத்­திற்கு தின­மும் தேவா­னந்­தன் அவ­ரு­டன் தொலை­பே­சி­யில் பேசிக்­கொண்­டி­ருந்­தார். அந்­ந­ப­ரின் சூழ்­நி­லையை அறிந்து ஒரு மன­நல மருத்­து­வ­ரை சந்­திக்க முன்­ப­திவு செய்­தி­ருந்­தோம். வழக்­க­மா­கத் தொடர்­பு­கொண்டு பேசிக்­கொண்­டி­ருந்­த­போது, தீடீ­ரென ஒரு நாள் அவ­ர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு இருந்­ததை உணர்ந்­தோம். கவலை மட்­டு­மில்லை, உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்­த­னை­யும் அவ­ரி­டம் இருந்­ததை உணர்ந்­தோம். அவர் ஐந்து நாட்­க­ளுக்கு சாப்­பி­ட­வும் இல்லை. உடனே உதவி தேவை என்று தெரிந்­தது. தொலை­பே­சி­யில் அவ­ருக்கு நான் ஆறு­தல் வழங்­கும் நேரத்­தில், தேவா­னந்­தன் அவ­ரின் வீட்­டிற்­குச் சென்று, அந்த நபரை உடனே மன­நல கழ­கத்­தின் அவ­சர சேவைப் பிரி­வுக்கு அழைத்­துச் சென்­றார்,” என்று விளக்­கி­னார் நிஷா. அந்த நப­ரின் குடும்­பத்­தி­டம் பேசி புரிய வைத்­தது உட்­பட குண­மாகி வரும் அந்த நப­ருக்­குத் தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கிறது ‘மெண்­டல் ஏக்ட்’ குழு.

“நம் இந்­திய சமூ­கத்­தில் சிலரிடம் மன­ந­லம் குறித்து போது­மான விழிப்­பு­ணர்வு இல்லை. உதா­ர­ணத்­திற்கு ஆவி­களை ஏவி­வி­டு­வ­தால் மன­நல நோய் வரு­வது, மருந்து சாப்­பிட்­டால் அதையே வாழ்க்கை முழு­வ­தும் நம்­பி­யி­ருக்­க­ வேண்­டும் என்று நினைத்து மருந்து சாப்­பிட மறுப்­பது போன்ற பல தேவை­யற்ற நம்­பிக்­கை­களும் தவ­றான சிந்­த­னை­களும் இந்­திய சமூ­கத்­தி­ன­ரி­டையே உள்­ளன. எனவே, இந்­தி­யர்­க­ளி­டையே மன­நல விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­பதை நாங்­கள் முக்­கி­ய­மாக கரு­து­கி­றோம்,” என்­றார் திரு தேவா­னந்­தன்.

குடும்ப வன்­முறை, விவா­க­ரத்து, வேலை­யி­ழப்பு போன்ற பல கார­ணங்­க­ளால் உண்­டா­கும் மன­நல பிரச்­சி­னை­க­ளுக்கு உதவி புரிந்து வரும் இந்த அமைப்­பைப் பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு https://linktr.ee/mentalact என்ற இணைப்பை அணு­க­லாம்.

svenga@sph.com.sg