உலகமே இவருக்கு வகுப்பறை

வர்த்­தக ஆலோ­ச­க­ரான விக்­ர­மன் ராஜ­ரத்­தி­னம் (படம்), கொவிட்-19 நோய்ப் பர­வலை எதிர்­கொள்­வ­தற்­கான திட்­டத்­தைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி பல்­வேறு திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்­டார். இணைய வச­தி­யால் இப்­போது உல­கமே இவ­ருக்கு வகுப்­பறை.

“நியூ­சி­லாந்­தில் தற்­போது இருக்­கும் பிர­பல பாட­கர் யுகேந்­தி­ர­னி­ட­மி­ருந்து காணொளி உரை­யா­டல் வழி­யா­கப் பாடக் கற்­றுக்­கொள்­கி­றேன். அத்­து­டன், நகைச்­சுவை நடிப்­புக்­கான வகுப்­பு­க­ளி­லும் நான் பங்­கேற்­றேன்,” என்று இவர் தெரி­வித்­தார்.

யோகா, கணி­னித் திறன் மேம்­பாடு ஆகி­ய­வற்­றை­யும் கற்­றுக்­கொண்ட விக்­ர­மன், தமது கண்­ணோட்­டத்தை விரி­வு­ப­டுத்­தவே இந்த வகுப்­பு­களில் சேர்ந்­த­தா­கச் சொன்­னார்.

“அத்­து­டன், வீட்­டி­லி­ருந்தே வேலை பார்க்­கும் நான் வெளியே போக முடி­யா­த­தால் தொற்றிக்கொண்ட மன­ உ­ளைச்­ச­லை­ இத்­த­கைய வகுப்­பு­கள் போக்­கு­கின்­றன,” என்று இவர் கூறி­னார்.

வீட்­டி­லி­ருந்து கற்­றலை மேற்­கொண்­ட­தால் தாம் சுய­மா­கச் செயல்­படும் உணர்­வைப் பெறு­வ­தாக விக்­ர­மன், 30, தெரி­வித்­தார்.

“இந்­தக் கால­கட்­டத்­தில்­தான் என்­னைப் பற்­றி­யும் சமூ­கத்­தைப் பற்­றி­யும் மேலும் தெரிந்­து­கொண்­டேன். குறிக்­கோள் இல்­லா­மல் நேரத்­தை செலவு செய்­வ­தைக் காட்­டி­லும் இணை­யம்­வழி கற்­பது எவ்­வ­ளவோ சிறந்­தது. சமூ­கத்­திற்­குப் பங்­காற்ற இந்­தத் திறன்­களை நான் பயன்­ப­டுத்­து­வேன்,” என்று விக்­ர­மன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!