எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்துள்ள கொவிட்-19 நெருக்கடி

அலு­வல­கத்­தில் வேலை செய்­யும்­போது கேள்வி எழுந்­தால் உடனே அரு­கில் உள்­ள­வர்­க­ளி­டம் அறி­வுரை கேட்­டு­வி­ட­லாம். ஒரு சிறு கலந்­து­ரை­யா­டல் நிக­ழும். அறி­வு­ரை­யு­டன் கொஞ்­சம் நகைச்­சு­வை­யும் வரும். அனைத்­தும் கலந்த தெளி­வான சிந்­தனை பிறக்­கும்.

தேநீர் அருந்­தி­கொண்டே நடக்­கும் ஒரு சிறு கலந்­து­ரை­யா­டல்­கூட வேலை பளு­வைக் குறைத்­து­வி­டும்.

மன உளைச்­சல் ஏற்­ப­டும்­போது வாட்ஸ்­அப் குறுஞ்­செய்தி அனுப்பி அன்றே நண்­பர்­க­ளைச் சந்­திக்க ஏற்­பாடு செய்­ய­லாம். திரைப்­ப­டம் பார்க்­கச் செல்­வது, உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குப் போவது, ஒன்­றாக உட்­கார்ந்து சாப்­பி­டு­வது போன்ற நட­வ­டிக்­கை­களே மனச்­சு­மை­யைக் குறைத்­து­வி­டும். இவை­யெல்­லாம் இயல்­பான வாழ்க்­கை­முறையாக இருந்த காலத்­தில். என்­னைப் போலவே பல­ரின் வாழ்க்­கையை கொவிட்-19 அப்­ப­டியே திருப்பி போட்­டுள்­ளது.

இப்­போ­தெல்­லாம் என் வீட்டு வர­வேற்பு அறை­தான் எனது அலு­வ­ல­கம். மடிக்­க­ணி­னி­தான் என் உல­கம் என்­றா­கி­விட்­டது.

கடந்த நான்கு மாத­கங்­க­ளாக வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் எனக்கு இது பழ­கி­விட்­டது என்­றா­லும் மனித தொடர்­பு­க­ளுக்­காக மனம் ஏங்­கவே செய்­கிறது.

என்­னைப் போலவே பல இளை­யர்­கள் இந்­தத் தனிமை உணர்வை அனு­ப­விக்­கி­றார்­கள். எனி­னும், ஒரு பரந்த கண்­ணோட்­டத்­தி­லி­ருந்து பார்க்­கும்­போது இது ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக தோன்­றாது. கொரோனா கிரு­மி­யால் பாதிப்­ப­டைந்­தோர் நம்­மை­விட அதிக வேத­னையை அனு­ப­விக்­கி­றார்­கள். வசதி குறைந்த மாண­வர்­கள் கற்­ற­லுக்­குத் தேவை­யான வச­தி­க­ளைப் பெற பல தடை­களை எதிர்­நோக்­கு­கி­றார்­கள். நிறு­வ­னத்­தின் கீழ் பணி­பு­ரி­யா­மல் பல தன்­னு­ரி­மைத் தொழி­லா­ளர்­கள் (freelancers) மற்­றும் சுய தொழில் நடத்­து­ப­வர்­கள் வரு­மா­னம் இல்­லாத பட்­சத்­தில் நிதி நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

முதல்­நிலை ஊழி­யர்­கள், குறிப்­பாக சுகா­தார துறை­யி­ன­ரின் சவால்­கள் பல மடங்கு அதி­க­ரித்­துள்ளன. இவர்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது என் கவலை பெரி­தாக தெரி­ய­வில்லை. தீங்கை மட்­டும் பார்ப்­ப­தும் ஞானத்­திற்­கான வழி அல்ல.

இவ்­வ­ளவு பிரச்­சி­னை­க­ளி­லும் உல­கத்­திற்­குச் சில நன்­மை­கள் ஏற்­பட்­டுள்­ளன என்­ப­தை­யும் நினை­வில் கொள்­ள­வேண்­டும். தெருக்­களில் வாக­னங்­கள் குறைந்­துள்­ளன, காற்று சுத்­த­மா­கி­யுள்­ளது, விலங்­கு­கள் வெளியே வர தொடங்­கி­யுள்­ளன. மனி­தன் நோய்­வாய்ப்­படும் இந்த நேரத்­தில், உல­கம் குண­ம­டைந்து வரு­வ­தாக தெரி­கிறது. மனி­தர்­களும் உடல் ரீதி­யா­க­வும் மன ரீதி­யா­க­வும் மேம்­பட்டு வரு­கி­றோம். குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் அணுக்­க­மாகி உள்­ளோம். உடற்­ப­யிற்சி, தியா­னம், யோகா­ச­னம் செய்ய அதிக நேரம் கிடைத்­துள்­ளது.

வெளியே செல்ல முடி­ய­வில்லை என்­றா­லும் உள்­ளத்து உணர்­வு­களை ஆராய்ந்து பார்க்­கும் வாய்ப்பை கொவிட் நமக்­குத் தந்­துள்­ளது. நாம் வாழும் குறு­கிய காலத்­தில் முக்­கி­ய­மா­ன­வற்­றுக்கு நேரத்­தைச் செல­விட வேண்­டும்.

அன்பு, ஆரோக்­கி­யம், நற்­பண்புகள் படைத்த மனி­த­னாக உரு­மாற கொவிட் நமக்கு வாய்ப்­ப­ளித்­துள்­ளது.

அதே நேரத்­தில் சமூ­கத்­தில் புதைந்து கிடக்­கும் பிரச்­சி­னை­க­ளை­யும் வெளிப்­ப­டை­யாக நம் பார்­வைக்கு எடுத்து காட்­டி­யுள்­ளது.

அடுத்து வரும் ஆண்­டு­களில் அதைத் தீர்க்க அர­சாங்­கங்­களும் மக்­களும் கடும் முயற்சி எடுக்க உறுதி செய்­ய­வேண்­டும். அதோடு உல­குக்­கும் மனி­த­னுக்­கும் உகந்த பாதை­யில் செல்ல நாம் சரி­யான தீர்மானம் எடுக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!