சுடச் சுடச் செய்திகள்

வலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை

வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் வலியும் வேதனையும் ஏற்படும். அவ்வாறு தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீண்டு, துயரில் ஆழ்த்திய அந்த அனுபவங்களை வாழ்க்கைப் பாடங்களாக்கி, முன்னேறும் பெண்கள் இவர்கள்.

படிப்பில் சிறந்து விளங்கியதுடன் எப்­போ­துமே கல­க­லப்­பாக இருந்த மாணவி ரோஷான் கிருஷ்­ணன், தமது பெற்­றோ­ரின் விவா­க­ரத்­தா­லும் நெருங்­கிய நண்­பர் ஒரு­வ­ரின் இறப்­பா­லும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டார். நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வர்த்­தக, பொறி­யி­யல் பட்­ட­யக் கல்வி பயின்ற அவர், முதல் தவ­ணை­யில் பாடங்­க­ளில் சிறந்து விளங்கா­த­தால் ஒரு கட்­டத்­தில் சக மாண­வர்­க­ளா­லேயே புறக்­க­ணிக்­கப்­பட்­டார்.

அவ்­வாறு தொடக்­கத்­தில் 1.6 ஜிபிஏ புள்­ளி­கள் பெற்ற இந்த 20 வயது மாணவி, ஒட்­டு­மொத்­த­மாக 3.0 ஜிபிஏ புள்­ளி­க­ளு­டன் பட்­ட­யக் கல்­வியை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­தி­ருக்­கி­றார்.

குவீன்ஸ்­ட­வுன் தொடக்­கப்­பள்­ளி­யி­லும் நன்­யாங் பெண்­கள் உயர்­நி­லைப்­பள்­ளி­யி­லும் படித்த ரோஷான், ஒருங்­கி­ணைந்த திட்­டத்­திற்கு பதி­லாக ‘ஓ’ நிலைத் தேர்வை எழுத முடிவு செய்­தார்.

“என் தந்தை ஒரு வர்த்­த­கர். எனவே வர்த்­த­கத் துறை­யில் படிக்க விரும்­பிய என்­னைத் தொழில்­நுட்­பம் சார்ந்த பாடத்­தைக் கற்­றுக்­கொள்ள என் தந்தை அறி­வு­றுத்­தி­ய­தால் பொறி­யி­ய­லைப் படிக்க முடிவு செய்­தேன்,” என்று அவர் கூறி­னார்.

பெற்­றோ­ரி­டையே அடிக்­கடி நிகழ்ந்த வாக்­கு­வா­தம் தனக்­குத் தொடர்ந்து கவ­லை­யைத் தந்­த­தாக ரோஷான் பகிர்ந்­து­கொண்­டார். இறு­தி­யில் அவர்­க­ளது விவா­க­ரத்­தால் மன­மு­டைந்து போன­தா­க­வும் கூறி­னார். 2017ல் நடந்து முடிந்த அந்த விவா­க­ரத்­தின்­போது பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் முத­லாம் ஆண்டு முதல் தவணை படித்­துக்­கொண்­டி­ருந்­தார் ரோஷான். படிப்­பில் ஆர்­வம் காட்­டா­த­தால் அவ­ருக்கு 1.6 ஜிபிஏ புள்­ளி­கள் மட்­டுமே கிடைத்­தன.

“என் குடும்­பமே என் கண் முன்­னால் சிதை­வ­தைக் காணும்­போது படிப்பு எனக்கு முக்­கி­ய­மா­கத் தெரி­ய­வில்லை,” என்று கூறி­னார். படிப்­பில் ரோஷான் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­தது இதுவே முதல் முறை. திட்­டப்­ப­ணி­க­ளுக்­காக மாண­வர்­கள் குழுக்­களை அமைக்­கும் நேரங்­களில் தமது மதிப்­பெண்­க­ளால் பல­முறை மற்ற மாண­வர்­க­ளால் ஒதுக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார். ஒரு தவ­ணை­யில் பெறும் குறைந்த மதிப்­பெண்­கள், பட்­ட­யக் கல்­விக்­கான ஒட்­டு­மொத்த மதிப்­பெண்­க­ளைப் பாதிப்­ப­தால் அதி­லி­ருந்து மீண்டு வரு­வது கடி­னம் எனத் தெரி­வித்­தார்.

“ஒதுக்­கப்­பட்ட நிலை­யில் குறைந்­த­பட்ச தேர்ச்சி பெற்­றாலே போதும் என்ற மனப்­போக்­கு­டைய மாண­வர்­க­ளு­டன்­தான் இணைந்து பணி­யாற்ற வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது. என் திட்­டப்­ப­ணி­களில் நல்ல மதிப்­பெண்­க­ளைப் பெறு­வ­தற்­காக இவர்­க­ளது பங்­கை­யும் சேர்த்து செய்ய வேண்­டிய கட்­டா­யத்­திற்­குத் தள்­ளப்­பட்­டேன்,” என்று அவர் கூறி­னார்.

இரண்­டா­வது தவ­ணை­யில் ஓர­ளவு படிப்­பில் கவ­னம் செலுத்தி வந்த ரோஷா­னுக்கு மூன்­றா­வது தவ­ணை­யில் இன்­னொரு இடி. தமது உயர்­நி­லைப் பள்ளி நண்­பர் ஒரு­வ­ரின் மர­ணம்.

“என் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி எப்­போ­தும் அந்த நண்­ப­ரி­டம் தான் கூறு­வேன். என் பிறந்­த­நா­ளுக்கு மறு­நாள் அவர் இறந்­தார். மிகவும் வேத­னை­யாக இருந்­தது. ஒரு பாடத்­தில் தோல்­வி­யும் அடைந்­தேன்,” என்­றார்.

தனி­மை­யில் வாடிய ரோஷா­னுக்கு கைகொ­டுத்­தது அவ­ரது பேச்­சுத் திற­மையே. பள்­ளி­யின் விவா­தக்­கு­ழு­வில் சேர்ந்து தமது திறன்­களை வெளிப்­படுத்­தி­னார். தேசிய அள­வி­லும் அனைத்­து­லக அள­வி­லும் பல்­வேறு பரி­சு­களைப் பெற்ற ரோஷான் மீது சக மாண­வர்­க­ளின் மதிப்­பும் மரி­யா­தை­யும் கூடின. அதுவே படிப்பில் சிறக்க அவ­ருக்கு ஊக்­கம் கொடுத்­தது.

“என் மீது பிறர் வைக்­கும் நம்­பிக்­கையே என்னை நன்­றா­கச் செயல்பட வைக்­கிறது,” என்று ரோஷான் கூறி­னார். இறு­தித் தவ­ணை­யில் 4.0 ஜிபிஏ புள்­ளி­க­ளைப் பெற்ற ரோஷான், வர்த்­த­கத் துறை­யில் தொடர்ந்து படிக்க விரும்­பு­கி­றார்.

“பிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும்,” என்­றார் ரோஷான்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon