கடின உழைப்பால் என்றுமே பலன்

கடந்­தாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ருக்­காக இரு வெள்­ளிப் பதக்­கங்­க­ளைப் பெற்­றுத் தந்­த­வர் சுவர்ப்­பந்து விளையாட்டு வீராங்­கனை சி. ஸ்நேஹா.

ஆனால் அவர் இதனை சாதித்த விதம் எளி­தல்ல. ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் கடந்­தாண்டு ‘ஜிசிஇ’ மேல் நிலைத் தேர்­வுக்கு தயா­ரா­கும் அதே­வே­ளை­யில் நவம்­பர் மாத இறு­தி­யில் அவர் தென்­கி­ழக்­கா­சிய போட்­டி­களில் பங்­கு­பெ­றுவ தாக இருந்­தது.

பள்­ளிப் பாடங்­கள் இல்­லா­த­போது சுவர்ப்­பந்து பயிற்­சி­க­ளுக்­கென ஆண்டு முழு­வ­தும் முக்­கி­யத்­து­வம் கொடுத்து அவர் செயல்­பட்­டார்.

“சவால்­மிக்க, மன­உ­ளைச்­சல் தரும் கால­கட்­ட­மாக இருந்­தது. ஏனெ­னில் படிப்பு, விளை­யாட்­டுப் பயிற்­சி­யைத் தவிர வேறு எதி­லும் ‌என்­னால் அதி­கம் ஈடு­பட முடி­யா­மல் இருந்­தது,” என நினை­வு­கூர்ந்­தார் 19 வயது ஸ்நே‌‌‌ஹா.

தம் தந்­தை­யி­டம் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி பேசு­வது, இசை கேட்­பது, உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் அக்­கால கட்­டத்­தைக் கடந்து வர உத­வின.

கடின உழைப்­பின் பல­னாக விளை­யாட்­டில் சாதித்­த­து­போல மேல் நிலைத் தேர்­வில் இவர் ஐந்து ‘ஏ’ எனும் சிறப்­பான மதிப்­பெண்­க­ளைப் பெற்­றார்.

உல­கின் முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றான அமெ­ரிக்­கா­வின் ‘யேல்’ பல்­கலைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­ப­டிப்பை ஸ்நேஹா மேற்­கொள்ள கதவு திறந்­தது. கிடைத்த அரிய வாய்ப்பை அவர் ஏற்­றுக்­கொண்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழல் உலகை ஆட்­டிப்­ப­டைக்க, அமெ­ரிக்­கா­வை­யும் அது விட்டு வைக்­க­வில்லை.

அங்கு பெரி­த­ள­வில் கிருமி பாதிப்பு இருக்க, அங்கு சென்று கல்­விப் பய­ணத்­தைத் தொட­ர­லாமா என்ற குழப்­பான நிலை­யில் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் பலர் உள்­ள­னர்.

உள்­ளூர் பத்­தி­ரி­கை­க­ளின் அண்­மைய செய்­தி­க­ளின்­படி, சிலர் வெளி­நாட்­டிற்­குச் சென்று படிக்­கும் திட்­டத்­தைக் கைவிட்டு உள்­ளூ­ரி­லேயே படிக்­க­லாம் என்று முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

வேறு சிலரோ நிலைமை சீரா­கும் வரை­யில் தங்­க­ளின் படிப்பை ஓராண்­டிற்கு தள்­ளி­வைத்­துள்­ள­னர். ஸ்நே­‌‌‌ஹாவோ வரும் ஆகஸ்ட் மாதம் தம் பட்­டப்­ப­டிப்பை ‘யேல்’ பல்­கலைக்­க­ழ­கத்­தில் மேற்­கொள்ள முடிவு எடுத்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் பயில ‘விசா’ விண்­ணப்­பம் குறித்து ஏற்­பா­டு­களும் நடந்து வரு­கின்­றன.

திட்­ட­மிட்­ட­படி அடுத்த மாதம் அமெ­ரிக்கா செல்ல அவர் தம்­மைத் தயார்­ப­டுத்­திக் கொண்­டும் வரு­கி­றார்.

உல­கத் தரம் வாய்ந்த சுவர்ப்­பந்து விளை­யாட்டு வச­தி­க­ளு­டன் திறன்­மிக்க பயிற்­று­விப்­பா­ளர்­கள், விளை­யாட்­டா­ளர்­க­ளு­டன் இணைந்து தம் ஆட்­டத்தை அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­வது இவ­ரது இலக்கு.

“வித்­தி­யா­ச­மான கற்­றல் சூழலை அனு­ப­விக்­க­வும் மீண்­டும் சுவர்ப்­பந்­துப் போட்­டி­களில் பங்­கு­பெ­ற­வும் இன்­னும் சில மாதங்­கள் காத்­தி­ருப்­பேன். அதற்­குள் கொவிட்-19 நில­வ­ரம் அங்கு மேம்­பட்­டு­விட வேண்­டும் என்று நம்­பு­கி­றேன்,” என்று சொன்­னார் ஸ்நேஹா.

கொவிட்-19 நில­வ­ரம் குறித்து, அதன் வளா­கத்­தில் மாண­வர்களின் பாது­காப்பை உறுதி செய்ய ‘யேல்’ பல்­க­லைக்­க­ழ­கம் அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் ஸ்நேஹா தம் அடுத்­த ­கட்­ட­ ப­ய­ணத்துக்கு தயா­ராக உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!