வாக்களிப்பு தினம்: என் முதல் அனுபவம்

சிங்­கப்­பூர் இது­வரை கண்­டி­ராத புது­வித பொதுத் தேர்­தல் நிகழ்­வு­களை இவ்­வாண்டு நாம் கண்­டோம். பாலின சமத்­து­வம், சிறு­பான்மை உரி­மை­கள், புதிய அர­சாங்க கட்­ட­மைப்­பு­கள் போன்ற விவ­கா­ரங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் எனது தலை­மு­றை­யி­னர், இந்­தத் தேர்­த­லின்­போது கருத்து­க­ளைத் தைரி­ய­மாக முன்­வைத்­தும் வெளிப்­ப­டுத்­தி­யும் வந்­து உள்­ள­னர். பல சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­க­ளை­யும் விவா­தங்­க­ளை­யும் ‘பேஸ்­புக்’, ‘இன்ஸ்ட­கி­ராம்’ சமூக ஊட­கத் தளங்­களில் பலர் பதி­வு­செய்­தி­ருந்­த­னர்.

தொற்­று­நோய் கால வாக்­கெ­டுப்­பில், 2.65 மில்­லி­யன் வாக்­கா­ளர்­க­ளின் ஆத­ரவை வெல்ல, சமூக ஊட­கங்­களும் இணைய வாசல்­களும் சக்தி வாய்ந்­த­வை­யாக உள்­ளன என்­ப­தைக் கட்­சி­களும் வேட்­பா­ளர்­களும் நன்கு அறிந்­தி­ருந்­த­னர். இது­போன்ற கருத்து பரி­மாற்­றங்­கள் பல பிரச்­சி­னை­களை முன்­வைத்து மக்­க­ளின் சிந்­த­னை­யைத் தூண்­டும்­ வ­கை­யில் அமைந்­தன.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லின் சவால்­க­ளுக்கு மத்­தி­யில் ஒன்­பது நாட்­கள் தேர்தல் பிர­சா­ரத்­திற்­குப் பிறகு, வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது.

மரின் பரேட் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் நான், மதி­யம் இரண்டு மணிக்­கெல்­லாம் கிளம்பி குடு­ம்பத்­தி­ன­ரு­டன் வீட்­டிற்கு அரு­கி­லுள்ள வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்­குச் சென்­றேன். காலை­யி­லேயே எனது நண்­பர்­கள் பலர் அவர்­க­ளது வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் நெரி­ச­லா­க­வும் நீண்ட வரி­சை­க­ளு­ட­னும் இருந்­த­தாக என்­னி­டம் கூறி­னர்.

எனவே நீண்ட நேரம் வரி­சை­யில் காத்­தி­ருக்க என்னை மன­த­ள­வில் தயார் செய்­து­கொண்­டேன். ஆனால், எனது வாக்­க­ளிப்பு நிலை­யத்­தில் கூட்­டம் அதி­கம் இல்லை. மொத்­த­மாக அந்­நி­லை­யத்­தில் 15 நிமி­டங்­க­ளுக்­கும் குறை­வா­கவே செல­விட்­டேன். உடல் வெப்­ப­நிலை பரி­சோ­த­னைக்­குப் பிறகு, அதி­காரி ­கள் எனது அடை­யாள அட்­டையை ‘ஸ்கேன்’ செய்து, வாக்­க­ளிப்பு அட்­டை­யைக் கொடுத்­த­னர்.

கைக­ளைச் சுத்­தி­க­ரிப்­பான் கொண்டு சுத்­தப்­ப­டுத்­து­தல், கையு­றை­களை அணி­தல் என பல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிறகு என் வாக்கை பதிவு செய்­தேன். இது ஒரு வித்தியாசமான அனு­ப­வ­மாக இருந்­தது. ஒன்­பது நாட்­க­ளாக கட்சி பிர­சா­ரங்­கள், மக்­க­ளின் கருத்­து­கள் என அனைத்­தை­யும் கண்டு, கேட்­ட­தற்­குப் பிறகு எந்த கட்­சிக்கு வாக்­க­ளிப்­பது என்ற தெளி­வான முடிவை எடுத்­தேன்.

இருப்­பி­னும் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தில் முத்­தி­ரை­யி­டும் பேனா­வைக் கையில் எடுத்­த­வு­டன் ஒரு வித­மான பதற்­றம் ஏற்­பட்­டது.

ஒரு­வ­ரு­டைய வாக்கு நாட்­டின் நல்­லாட்­சியை முடி­வு­செய்­வ­தில் எந்த அள­வுக்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று இதற்­கு­முன் என்­னையே நான் கேட்­டுக்­கொண்­ட­துண்டு. ஆனால் இந்­தத் தேர்­தல், வாக்­க­ளிப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை எனக்கு உணர்த்­தி­யது. வாக்­கா­ளர் விழிப்­பு­ணர்­வு­டன் சிந்­தித்­துச் செயல்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் எனக்­குப் புரிய வைத்­தது. ஒவ்­வொரு வாக்­கா­ள­ரின் வாக்­கும் முக்­கி­ய­மா­னது. முடி­வு­க­ளைக் கணிக்க முடிந்­தா­லும் மாற்­றங்­களை செயல்­ப­டுத்த, நமது எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்க, ஒவ்­வொரு வாக்­கும் அவ­சி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!