இணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா

வருங்காலத்தில் விஞ்ஞானியாக விரும்புவோர் கனவு காணவும் கேள்வித் திறனை வளர்க்கவும் சிங்கப்பூர் அறிவியல் விழா இருபதாவது முறையாக நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி முழுவதும் இணையத்தில்  நடைபெற உள்ளது. சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த அறிவியல் விழாவில் முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இருவழித் தொடர்பு நடவடிக்கைகளாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

டேவிட் பிரைஸ், பிரிட்டனின் ராயல் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் விஞ்ஞான அமைப்புகளும் இணைய நேரலைச் சேவை வழியாக இந்த விழாவில் இணைவர்.
புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பேசும் வாய்ப்பு, கேள்வி பதில் அங்கங்கள், கதை நேரம், கைவினைப் பொருள் செய்யும் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டு மகிழலாம்.  அதிகமானோர் இணையம் வழியாக ஒன்றிணைந்து அறிவியல் ஆய்வில் ஈடுபடவும் சாதனையைப் படைக்கவும் இந்நிகழ்ச்சியின்போது முயற்சி செய்யப்படும்.

வகுப்பறைகளுக்கு அப்பால் மாணவர்களுக்கு அறிவியலைக் கொண்டு சேர்க்கும் இந்த அறிவியல் விழா, வீட்டில் இருக்கும் மாணவர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும் என்கிறார் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் லிம் டிட் மேங்.

“அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை தற்போதைய கொவிட்-19 கிருமிப்பரவலைப் போல வேறு எதுவும் உணர்த்தியதில்லை,” என்று இந்த விழாவின் இணை ஏற்பாட்டாளரான ஏ-ஸ்டார் அமைப்பின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் லிசா இங் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!