எதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்

ஒரு போட்­டி­யில் பல நாடு­க­ளைச் சேர்ந்த 50 குழுக்­க­ளு­டன் மோத­வேண்­டும் என்­றால் சில­ருக்கு அச்­சம் ஏற்­ப­ட­லாம். ஆனால் பயத்தை ஒரு பொருட்­டாக எண்­ணா­மல், போட்­டி­யில் பங்­கேற்­றோ­ரின் முயற்­சி­யால் எதிர்­கா­லம் மேம்­ப­டு­வதை எண்ணி மகிழ்­வ­தா­கக் கூறு­கி­றார், மாற்றி யோசிக்­கும் இந்த இளை­யர்!

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தொழில்­நுட்­பத்­திற்­கான எதிர்­கா­லத்தை இன்றே விதைக்­கும் இளை­யர்­களில் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த பரத் கிருஷ்­ண­னும் ஒரு­வர். சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்ற வாகன வடி­வ­மைப்­புப் போட்­டி­யில் அவ­ரும் அவ­ரது குழு­வி­ன­ரும் ஐம்­பது குழுக்­க­ளு­டன் மோதி சிறந்த வாகன வடி­வ­மைப்­புக்­கான விருதை வென்­ற­னர்.

இப்­போட்­டியை 35வது முறை­யாக ஷெல் நிறு­வ­னம் நடத்­தி­யது. 1939ஆம் ஆண்டு ஷெல் எரி­பொ­ருள் நிறு­வ­னத்­தால் தொடங்­கப்­பட்ட இந்­தப் போட்டி, ஆண்­டு­தோ­றும் அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்­றும் ஆசி­யா­வில் நடை­பெற்­றது.

இந்­தப் போட்­டிக்­காக இவர்­கள் உரு­வாக்­கிய கார் ‘நன்­யாங் வென்சர் XI (என்வி-11)’. இதற்கு நீண்ட நாள் திட்­ட­மும் தயா­ரிப்­பும் தேவைப்­பட்­ட­தாக 25 வயது பரத் தெரி­வித்­தார்.

“கடந்­தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நானும் என் குழு­வும் இதற்­காக செயல்­ப­டத் தொடங்­கி­னோம். காரின் திசை­மாற்­றும் (steering) கட்­ட­மைப்­புக்­குப் பொறுப்­பேற்­ற­து­டன் வாக­னத்­தின் இரைச்­சல் மற்­றும் அதிர்­வு­க­ளைக் குறைக்­கும் பணி­யில் நான் ஈடு­பட்­டேன்,” என்று அவர் கூறி­னார்.

‘என்வி-11’ வாக­னத்­தின் வடி­வ­மைப்பு ‘கில்லர் வேல்’ என்ற திமிங்­கல இனத்­தைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு அமைந்­தி­ருப்­ப­தாக பரத் கூறி­னார்.

இந்­தக் கார் பார்ப்­ப­தற்­குக் கவர்ச்­சி­யாக இருப்­ப­து­டன் காற்றின் திசைக்கு எதிர்த்திசையில் செல்­லத் தேவைப்படும் உந்து சக்தியை இந்த வடி­வம் குறைப்­ப­தா­க­வும் பரத் கூறி­னார்.

கார்­பன் இழை மட்­டு­மின்றி குண்டு துளையாத சட்­டை­க­ளை (bulletproof vest) தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­படும் ‘கெவ்­லர்’ (Kevlar) என்ற மூலப்­பொ­ரு­ளும் இதன் மையப்­ப­கு­தியை உரு­வாக்கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. எரி­பொ­ரு­ளைக் காட்­டி­லும் தூய்­மை­யான மின்­க­லன்­க­ளால் இயங்­கக்­கூ­டிய இந்த கா­ரில் ஓட்­டு­ந­ரும் ஒரு பய­ணி­யும் அமர்ந்து செல்­ல­லாம்.

“ இந்­த காருக்­குத் தேவை­யான மின்­சா­ரத்தை மீண்­டும் புதுப்­பிக்­கக்­கூ­டிய மூலங்­க­ளி­லி­ருந்து பெற­லாம்,” என்று அவர் கூறி­னார்.

இந்­த காரைத் தடங்­களில் செலுத்த வேண்­டும் என்ற பரத் குழு­வின் ஆசைக்கு, கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வல் குறுக்கே நின்­றது.

“கிரு­மிப்­ ப­ர­வ­லின் ஆரம்­பக்­கட்­டத்­தில் போட்டி தொட­ருமா இல்­லையா என்ற நிச்­ச­ய­மற்ற நிலை ஏற்­பட்­டது. ஆனா­லும், அந்த விவ­கா­ரத்­தால் எங்­க­ளது கவ­னத்தை நாங்­கள் சிதறவிட­வில்லை,” என்கிறார் இவர்.

கிரு­மிப்­ ப­ர­வல் முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தின்­போது ஆய்­வுக்­கூ­டங்­கள் மூடப்­பட்­ட­தா­லும் காருக்­கான சில சோத­னை­களை அவர்­க­ளால் செய்ய முடி­ய­வில்லை. இறு­தி­யில் கார்­க­ளைத் தடங்­களில் போட்­டிக்­கா­கச் செலுத்த எந்­தக் குழு­வுக்­கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்த அங்­கம் நீக்­கப்­பட்­டது தங்­க­ளுக்கு வருத்­தம் அளித்­தா­லும் தங்­க­ளது உழைப்பு அடுத்த ஆண்டு போட்­டி­யில் கலந்­து­கொள்­ளும் என்­டியு குழு­வுக்கு உத­வும் என்­ப­தில் ஆறு­தல் அடைந்­த­தாக கூறுகிறார் பரத்.

சிறு வயது முதல் கார் மீதும் பொறி­யி­யல் மீதும் ஆர்­வம் கொண்­டி­ருந்­த இவர், அடிக்­கடி அவற்­றின் தொடர்­பான காணொ­ளி­க­ளைப் பார்த்து கற்­றுக்­கொள்­வ­தா­கத் தெரி­வித்­தார்.

“கார்­களை எனக்கு அறி­மு­கம் செய்து­ வைத்­த­வர் என் தந்­தை­தான். சிறு வய­தில் நான் விளை­யாட்­டுப் பொருட்­க­ளைப் பல பாகங்­க­ளா­கப் பிரித்­துப் பார்ப்­பேன். இதனை என் பெற்­றோர் இரு­வ­ரும் பொறு­மை­யு­டன் சகித்­துக்­கொண்­ட­னர்,” என்கி­றார் இவர். எதிர்­கா­லத்­தில் வாக­னம் தொடர்­பான பொறி­யா­ளர் வேலை­யில் சேர விருப்­பம் என்று தெரி­வித்­தார் பரத்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon