கல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம­யத்­தில் தமது ஊழி­யர்­க­ளின் பிள்­ளை­க­ளது கல்­விப் பய­ணம் சுமு­க­மாக தொடர்­வ­தற்கு சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்.பி.எச்.) நிறு­வ­னம் தோள் கொடுத்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை மெய்நி­கர் நிகழ்­வாக நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட வரு­டாந்­திர உப­கா­ரச் சம்­பள விருது நிகழ்ச்­சி­யில், சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்.பி.எச்) நிறு­வ­ன­மும் சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் அறநிறு­வ­ன­மும் இணைந்து 29 விரு­துகளை வழங்­கின. அவற்­றில் 14 விரு­து­கள் தொடக்கக் கல்­லூரி, பல­து­றை தொழிற்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழக நிலை­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

இரண்டு விரு­து­கள் பத்­தி­ரிகைத் துறை­யில் பயில்­வோ­ருக்­கும் 13 விரு­து­கள் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மொழி, மானுட­வி­யல் தொடர்­பான பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வோ­ருக்­கும் ஒதுக்­கப்­பட்­டன.

“இந்த உப­கா­ரச் சம்­ப­ளம், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும்­போது கல்வி ரீதி­யாக சிறப்­பாக செயல்­ப­டு­வ­தற்­கான ஊக்­கத்தை எனக்கு கொடுத்­தது. அதோடு, கடந்த 25 ஆண்­டு­க­ளாக ஒரு செய்­தித்­தாள் விநி­யோகிப்பாளராகப் பணி­பு­ரி­யும் எனது தந்­தை­யின் கடின உழைப்­பை­யும் அங்­கீ­க­ரிக்­கிறது,” என்று கூறி­னார் உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்­ற­வர்­களில் ஒரு­வ­ரான அழ­கன் அசோ­கன், 25.

இவர் வரும் ஆகஸ்ட் மாதம் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் தனது பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

இந்த நிகழ்ச்­சி­யில், கொவிட் -19 கிரு­மித்­தொற்­று சம­யத்­தின்­போது பத்­தி­ரிகை துறை­யின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி எஸ்.பி.எச். தலை­வர் டாக்­டர் லீ பூன் யாங் விளக்­கி­னார்.

“ஊட­கங்­கள் நம்­ப­க­மான செய்­தி­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் சமூ­கத்­தி­ன­ருக்கு வழங்­கு­கின்­றன. இந்த கொவிட்-19 கிரு­மித்­தொற்று நிச்­ச­ய­மற்ற சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில் கூடு­த­லா­னோர் நம்­ப­க­மான தக­வல்­க­ளைப் பெற நம்­பிக்­கை­யான ஊட­கங்­களை நாடு­கின்­ற­னர்,” என்று டாக்­டர் லீ வலி­யு­றுத்­தி­னார்.

“நிச்­ச­ய­மற்ற சூழ­லில் இருந்­தா­லும் நீங்­கள் உங்­கள் படிப்­பில் கவ­னம் செலுத்த வேண்­டும். சிறந்த கல்­வி­யின் மூலம் ஒரு பிர­கா­ச­மான எதிர்­கா­லத்தை உரு­வாக்க முடி­யும்,” என்று விருது பெற்­ற­வர்­க­ளுக்கு அவர் நம்பிக்கை ஊட்டினார்.

இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் பல குடும்­பங்­க­ளின் நிதிச்சுமையைக் குறைத்து வரு­கிறது. மருத்­துவ உற்­பத்தி செயல்­முறை பொறி­யா­ள­ராக (Medical Manufacturing process engineer) பணி­யாற்ற விரும்­பும் அழ­க­னு­டன் பிறந்­தோர் மூன்று பேர். குடும்­பத்தின் சிரமங்களைக் குறைக்க அழ­கன் பல­து­றைத் தொழில்­கல்­லூரி நாட்­க­ளி­லி­ருந்தே பகு­தி­நேர வேலை­களில் ஈடு­பட்டு சொந்தச் செல­வு­களைச் சமா­ளித்து வரு­கி­றார்.

“பட்­டப்­ப­டிப்பு தொடர்­பான செல­வு­கள் பற்றி அதி­கம் கவ­லைப்­ப­டா­மல் படிப்­பில் கவ­னம் செலுத்த தக்கசம­யத்­தில் இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் கைகொ­டுத்­துள்­ளது. இந்த விருது எனது நீண்­ட­கால இலக்கை அடை­யப் பெரி­தும் உத­வும்,” என்று தெரி­வித்­தார் அழ­கன்.

எஸ்.பி.எச் ஊழி­யர்­க­ளின் பிள்­ளை­

க­ளுக்கு வழங்­கப்­பட்ட உப­காரச் சம்­ப­ளம் பெற்­ற­வர்­களில் 20 வயது ஆதித்யா சுரே­ஷும் ஒரு­வர். சிங்­கப்­பூர் தேசிய பல்­

க­லைக்­க­ழ­கத்­தின் மருத்­து­வத் துறை­யில் தனது இரண்­டாம் வரு­டப் படிப்பை மேற்­கொண்டு வரு­கி­றார் இவர்.

“ஒவ்­வோர் ஆண்­டும் சுமார் 28 ஆயி­ரம் வெள்­ளியை மருத்­து­வக் கல்­விக் கட்­ட­ணத்­துக்­காக செலுத்­து­கி­றேன். எஸ்.பி.எச். உப­கா­ரச் சம்­ப­ளம் இந்தச் செலவை சமா­ளிக்­கப் பெருமளவு கைகொடுத்து உத­வும் என நம்­பு­கி­றேன்,” என்­றார் ஆதித்யா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon