பத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்

கொவிட்-19 நோய்ப்­ ப­ர­வல் சமூக நிகழ்­வு­கள் நடந்­தே­று­வ­தைத் தடுத்­தா­லும் அனை­வ­ரும் ஒன்­று­சேர்ந்து கொண்­டா­டும் உணர்வை அது ஒழிக்­க­வில்லை. அதற்கு சான்­றாக நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­க (என்­டியு) தமிழ் இலக்­கிய மன்­ற­மும் முன்­னாள் மாண­வர்­கள் சங்­க­மும் விளங்குகின்றன. ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை, மொத்­தம் 10 நாட்­க­ளுக்கு இணை­யம்­வழி மன்­றத்­தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை அவர்­கள் கொண்­டா­டி­னர்.

மன்­றத்­தின் 10 செயற்­கு­ழுக்­க­ளைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள், ஒரு நிமி­டக் காணொ­ளி­கள் மூலம் தங்­க­ளது வாழ்த்­து­க­ளைச் சமூக ஊட­கங்­களில் தெரி­வித்­த­னர். 2010ஆம் ஆண்­டில் மன்­றத்­தைத் தொடங்­கும்­போது பல தடை­கள் வந்­தன என்­றும் அந்­நே­ரத்­தில் தமிழ் மாண­வர்­களை ஒன்­று­கூ­டச் செய்­வதே ஒரு பெரிய சவா­லாக இருந்தது என்­றும் குறிப்­பிட்­டார் முத­லாம் செயற்­கு­ழு­வின் துணைத் தலை­வ­ரா­க­வும் இரண்­டாம் செயற்­கு­ழு­வின் தலை­வ­ரா­க­வும் இருந்த திரு இள­மா­றன் தியா­க­ரா­ஜன், 32.

“ஆரம்­பத்­தில் மொழி, இலக்­கி­யம், கலை சார்ந்த நிகழ்ச்­சி­க­ளைச் சிறிய அள­வில் நடத்­தி­னோம். அந்த நேரத்­தில் நிதி திரட்­டு­வது, தமிழ் தெரிந்த மாண­வர்­களை ஆர்­வத்­து­டன் ஈடு­ப­டுத்­து­வது போன்ற அம்­சங்­களில் பல சவால்­களை எதிர்­நோக்­கி­னோம். முத­லாம் ஆண்­டின் தொடக்­கத்­தில் பொங்­கல் விழா­வைக் கொண்­டா­டி­னோம். பொங்­கல் நேரத்­தில் ‘உத்ரா’ என்ற நாட­கப் படைப்பை சிறிய அள­வில் படைத்­தோம். அதற்கு கிடைத்த வர­வேற்பு மூலம் மேலும் பல மாண­வர்­கள் நம் மன்­றத்­தைப் பற்றி அறிந்­த­னர். இப்­போது இந்த மன்­றம் பன்­ம­டங்கு வளர்ச்சி கண்­டுள்­ளது. பிரம்மாண்டமான அளவில் நிகழ்ச்­சி­களை நடத்தி வரு­கி­றார்­கள்,” என்­றார் இள­மா­றன்.

உத்ரா என்ற மேடைப் படைப்­பின் முதல் நிகழ்ச்சி என்­டியு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஒரு தங்­கு­ம் வி­டு­தி­யில் மேடை­யேற்­றி­ய­தில் கிட்­டத்­தட்ட 500 பார்­வை­யா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர். 2018ஆம் ஆண்­டில் நன்­யாங் அரங்­கத்­தில் 1,000க்கும் மேற்­பட்ட பார்­வை­யா­ளர்­க­ளின் முன்­னி­லை­யில் அது அரங்­கே­றி­யது.

ஈராண்­டுக்கு ஒரு முறை நடத்­தப்­படும் உத்ரா உட்­பட இளை­யர்­களி­டையே தமிழ்ப் புழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் ‘பார்வை’ நிகழ்ச்­சி­யை­யும் ஒவ்­வோர் ஆண்­டும் நடத்தி வரு­கிறது இந்த மன்­றம்.

“தமிழ் இலக்­கிய மன்­றத்­தில் நான் செல­வ­ழித்த எல்லா தரு­ணங்­களும் மறக்­க­மு­டி­யா­த­வை­யாக எனக்கு இருந்­தன. முக்­கி­ய­மாக தலை­யங்­கப் பிரி­வோடு செல­வ­ழித்த நேரங்­கள். மன்­றத்­தின் நான்­கா­வது செயற்­கு­ழு­வில் இருந்­த­போது தீபா­வ­ளிக்கு ஒரு நாட­கம் படைத்­தோம். தீபா­வ­ளியை ஏன் கொண்­டா­டு­கி­றோம் என்­பது குறித்த ஒரு சின்ன நாட­கம். கடைசி நிமி­டத்­தில் தயா­ரித்­தா­லும் எல்­லோ­ரும் நிறைய ஈடு­பாட்­டு­டன் கலந்­து­கொண்­ட­தால் நாட­கம் மிகச் சிறப்­பா­கவே அரங்­கே­றி­யது,” என்­றார் மூன்­றாம் செயற்­கு­ழு­வில் உறுப்­பி­ன­ரா­க­வும் நான்­காம் செயற்­கு­ழு­வில் தலை­யங்­கப் பிரி­வின் தலைமை ஆசி­ரி­யராக­வும் இருந்த குமாரி வெள்­ளி­நிலா குணா­ளன்.

இணை­யம்­வழி நடத்­தப்­பட்ட கொண்­டாட்­டங்­களில் இவ்­வாண்­டிற்­கான சஞ்­சி­கை­யும் கடந்த சனிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.

இதற்­கி­டையே வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் வண்­ணம் நிதி திரட்டு முயற்சி ஒன்­றை­யும் மன்­றம் நடத்தி வரு­கிறது. திரட்­டப்­படும் ஒவ்­வொரு 10 வெள்­ளிக்கும் இணை­யாக என்­டியு தமிழ் இலக்­கிய மன்­றம் 5 வெள்­ளி­யைச் சேர்க்­கிறது. இந்த நிதி­யைக் கொண்டு ஊழி­யர்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கக்­கூ­டிய ஏறத்­தாழ 350 பரா­ம­ரிப்­புப் பைக­ளைத் தயா­ரிக்க மன்­றம் திட்­ட­மிட்­டுள்­ளது என்­று மன்­றத்­தின் தலை­வர் திரு வெ.தணி­கா­ச­லம் கூறி­னார்.

இந்த பைகளை, ‘எஸ்­டிஐ அகாடமி’ (SDI Academy) என்ற சமூக நல அமைப்பு, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யும்.

“நமக்­காக மட்­டும் கொண்­டா­டா­மல் சமு­தா­யத்­திற்கு உத­வும் முயற்­சி­யை­யும் கையாள நினைத்­தோம். சமு­தா­யத்­திற்கு நன்மை செய்­வ­தும் நம் மன்­றத்­தின் ஓர் இலக்கு,” என்று பகிர்ந்­து­கொண்­டார் தணி­கா­ச­லம்.

நிதி திரட்டு முயற்சி நாளை­யு­டன் நிறை­வ­டை­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!