வேலைவாய்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய மெய்நிகர் கலந்துரையாடல்

கொவிட்-19 கிருமி ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கத்­தால் நாட்டு பொரு­ளா­தா­ரம் ஆட்­டம் கண்­டுள்­ளது. வேலை தேடும் சூழல், புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்­குப் பெரும் சவால் விடுத்து வரு­கிறது. நிறு­வ­னங்­களும் இக்­கட்­டான நிலை­யில் சிக்­கி­யுள்­ளன. இதனை எதிர்­கொள்ள அர­சாங்­கம் பல்­வேறு வேலைப் பயிற்­சித் திட்­டங்­க­ளை­யும் வேலை­வாய்ப்­புத் திட்­டங்­க­ளை­யும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது.

இது குறித்து ‘தமிழா’ மற்­றும் சிண்­டா­வின் இளை­யர் மன்­றம் இணைந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி­யன்று இணை­யக் கலந்­து­ரை­யா­டல் ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. இந்­திய இளை­ஞர்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட ‘இக்­நைட் தீ யூத் நெட்­வொர்க்­கிங் நைட்’ (Ignite the Youth Networking Night) என்ற நிகழ்வு, பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக குறிப்­பாக இளங்­கலை பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அமைந்­தி­ருந்­தது.

முழு­நேர வேலை­யைத் தொடங்­கு­வ­தற்கு முன்பு தெரிந்­து­கொள்ள வேண்­டிய முக்­கிய அம்­சங்­கள் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தது இந்த மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­டல். பொது மற்­றும் தனி­யார் துறை­களில் பணி­பு­ரி­யும் தொழில் வல்­லு­நர்­கள் மற்­றும் பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் உரை­யா­டு­வ­தற்­கான வாய்ப்­பை­யும் இந்­நி­கழ்வு பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது.

“வேலை வாழ்க்­கை­யின் எதார்த்­தத்தை வெளிப்­ப­டுத்­த­வும் வேலை தேட­லுக்­காக தங்­க­ளைத் தயார்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் இக்­க­லந்­து­ரை­யா­டல் உத­வு­கிறது. அத்­து­டன் தொழில் வல்­லு­நர்­க­ளு­டன் பட்­டம் பெறு­வோர் இணை­வ­தற்கு ஒரு தளத்தை உரு­வாக்க நினைத்­தோம். அவர்­கள் வேலை தேடும்­போது பயன்­மிக்­க­தாக இருக்­கும் என நம்­பு­கி­றோம்,” என்று தெரி­வித்­தார் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வின் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான மணி­கண்­டன்.

இந்த கலந்­து­ரை­யா­ட­லில் கணக்­கி­யல், வணி­கம், தரவு அறி­வி­யல் / பகுப்­பாய்வு, பொறி­யி­யல், சுகா­தா­ரம், சமூக சேவை, பொது நிர்­வா­கம், சமூக அறி­வி­யல் போன்ற தொழில்­து­றை­க­ளைச் சேர்ந்த 15 தொழில் வல்­லு­நர்­களும் 32 இளை­ஞர்­களும் கலந்­து­கொண்­ட­னர். நிபு­ணர்­கள் தங்­க­ளின் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­தோடு கிடைக்­கும் வாய்ப்­பு­களை எவ்­வாறு சாமர்த்­தி­ய­மாக பயன்­ப­டுத்­து­வது என்­ப­தைப் பற்­றி­யும் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு எடுத்­து­ரைத்­த­னர். தற்­போ­தைய சூழ­லில் வேலை­வாய்ப்­பு­கள் எவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ளன, எதிர்­கால மாற்­றங்­க­ளுக்­கும் சவால்­க­ளுக்­கும் எவ்­வாறு தயார் செய்து கொள்­ள­லாம் போன்­ற­வற்­றின் தொடர்­பில் பங்­கேற்­பா­ளர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு நிபு­ணர்­கள் பதி­ல­ளித்­த­னர்.

அத்­த­கைய நிபு­ணர்­களில் ஒரு­வ­ரான தரவு ஆய்­வுத் துறையை சேர்ந்த குமாரி பெலி­ஸியா, “அடிப்­படை தொழில்­நுட்­பத் திறன்­க­ளைத் தவிர தரவு ஆய்­வா­ள­ருக்கு நல்ல தக­வல்­தொ­டர்­புத் திறன் இருக்க வேண்­டும்,” என்று குறிப்­பிட்­டார்.

வெவ்­வேறு துறை­களை சேர்ந்­த­வர்­க­ளு­டன் பணி­யாற்றி தர­வு­க­ளைப் பய­னுள்ள தக­வல்­க­ளாக புரிந்­து­கொள்ள உத­வு­வ­தா­க­வும் கூறி­னார். தரவு பகுப்­பாய்வு பெரும்­பா­லான துறை­க­ளுக்­குப் பொருந்­தும் என்­ப­தால் இத்­து­றை­யில் ஆற்­றலை வளர்த்­துக்­கொள்­வது நன்மை தரும் என்று பங்­கேற்­பா­ளர்­க­ளி­டம் அவர் விளக்­கி­னார்.

“வேலை அனு­பவ வாய்ப்­பு­களோ பயிற்சி வாய்ப்­பு­களோ கிடைத்­தால் ஏற்­றுக்­கொள்­வது நல்­லது என்­பதை தெரிந்­து­கொண்­டேன். இது போன்ற வாய்ப்­பு­க­ளின் வழி பல்­வேறு தொழில் பாதை­களை ஆராய்ந்து, அவற்­றில் அனு­ப­வம் பெற்று, ஏற்ற தொழி­லைத் தேர்வு செய்­ய­லாம்,” என்று கூறி­னார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக மாணவி விஷ்­வாலா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!