என்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு

சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு, சாதனா, சங்கே முழங்கு போன்ற தயாரிப்புகளின்வழி இளையர்களிடையே சமூக விழிப்புணர்வு, கல்வித் திறன், தமிழ் மற்றும் கலை ஆர்வம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) தமிழ்ப் பேரவை தனது 45வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

1975ஆம் ஆண்டு நிறுவப்பட்ட என்யுஎஸ் தமிழ்ப் பேரவை, சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் ஆதரவோடு மாணவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புதுமையான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் செயல்படுத்திவரும் பேரவைக்குத் தூணாக செயற்குழுக்கள், ஆலோசனைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளனர்.

“தமிழ்ப் பேரவை மாணவர்கள் பலருக்கும் சமூக நலன் மீதான ஆர்வத்தையும் தமிழ் மொழி, காலாசாரம் மீதான பற்றையும் அதிகரித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிய முயற்சிகளின் வழி சிங்கப்பூர்வாழ் இந்தியர்களுடன் இணைய பேரவை முயல்கிறது. இன்றுவரை முன்னாள் மாணவர்கள் பலர் மீண்டும் வந்து தங்களால் முடிந்த வழிகளில் செயற்குழுக்களுக்கு உதவி புரிவது பேரவையின் மகத்துவத்தைக் காட்டுகிறது.” என்றார் 38ஆம் செயற்குழுவின் துணைத் தலைவரும் முன்னாள் மாணவருமான வினித்குமார் பாண்டியன், 25.

தமிழ்ப் பேரவையின் முயற்சிகளை சமூகத்திற்கேற்ப மறுசீரமைப்பதை நோக்கமாக கொண்டிருந்த சிறப்பு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவிருந்த செயற்குழு, கொவிட்-19 காரணத்தால் தமிழ்ப் பேரவையைச் சார்ந்த தொகுப்பு ஒன்றைப் படைத்தது. 45வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தத் தொகுப்பை மெய்நிகர் பாணியில் நடத்தி பேரவையின் வரலாற்றிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்தத் தொகுப்பில் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. மின்னூல் வெளியீடு, தமிழ்ப் பேரவை வரலாற்றைப் போற்றும் ஆவணப்படத் தொடர், முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல், இணையப்பக்கப் புதுப்பிப்பு, கலைப் படைப்புகள் என மாதம் முழுவதும் தமிழ்ப் பேரவையின் கொண்டாட்ட முழக்கம் சமூக ஊடகங்களில் ஒலித்தது.

“தலைமைத்துவம், கல்வி, கலை, கலாசாரம், சமூக சேவை, அரசியல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக தமிழ் என ஆறு தூண்களைச் சார்ந்த கருத்துகளைக் கொண்டிருக்கும் மின்னூல், சிங்கப்பூர் இந்திய சமூகத்தைப் பற்றியும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வளமாக அமையும்.” என்று பேரவையின் 41வது செயற்குழுத் துணைத் தலைவர் ஹமிது மரைக்காயர் கூறினார்.

தமிழ்ப் பேரவையின் இணையப்பக்கத்தில் இம்மின்னூலைக் காணலாம்.

மேலும், “Gala” கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெவ்வேறு சுவாரசியமான கலைப் படைப்புகள் இணையத்தில் வாராந்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. நடன நிகழ்ச்சி, இசைக் கச்சேரி, நகைச்சுவை நாடகம் என பார்வையாளர்களின் கவனங்களை ஈர்க்கும் வண்ணம் கொண்டாட்டங்கள் அமைந்தன. பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர்.

“இந்திய சமூகத்திற்கு சேவை புரியும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தமிழ்ப் பேரவை எனக்கு தந்தது. பல வாய்ப்புகளையும் நெருங்கிய நண்பர்களையும் அது கொடுத்துள்ளது.” என்றார் பேரவையின் 41வது செயற்குழுத் தலைவர் காவ்யா தீனன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!