சுடச் சுடச் செய்திகள்

சிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்

ஜிசிஇ ‘ஓ’ நிலைத் தேர்­வில் சிறப்­புத் தேர்ச்சி பெற்ற மாண­வர்­களில் சிராங்­கூன் கார்­டன் உயர்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்த ராஜா பத்­ம­நா­த­னும் ஒரு­வர். உயர்­நிலை ஒன்­றி­லி­ருந்தே குடும்­பச் சூழ்­நி­லை­யால் இவ­ருக்­குப் படிப்­பில் பல­முறை கவ­னம் சித­றி­யது. அத்­து­டன், கடந்த ஆண்டு இணை­யம் வழி கற்­றலை மேற்­கொள்­வ­தும் மிகக் கடி­ன­மாக இருந்­தது.

ராஜா நான்கு வய­தாக இருந்­த­போது, அவ­ரது தாயார் மன­நல நோயால் அவ­தி­யுற்­றார். தந்தை இர­வு­நேர வேலை செய்ய வேண்­டி­யி­ருந்­தது. இத­னால் ராஜா, சென் சு லான் மெத்­த­டிஸ்ட் சிறு­வர் இல்­லத்­தில் வளர்ந்­தார். கடந்த ஆண்டு இல்­லத்­தில் இருந்­த­வாறே இணை­யம் வழி பாடம் கற்­றது ராஜா­வுக்­குப் பெரும் சவா­லாக இருந்­தது. படிப்­ப­தற்­குத் தகுந்த சூழல் இல்­லா­த­போ­தும் தேர்­வில் தேர்ச்சி பெற­வேண்­டும் என்ற உந்­து­த­லு­டன் தொடர்ந்து கடி­ன­மாக உழைத்­தார். ஆங்­கில மொழித் தேர்­வில் எதிர்­பார்த்த அள­விற்கு மிகச் சிறப்­பாக செய்­யா­விட்­டா­லும் பிற பாடங்­களில் நல்ல தேர்ச்சி பெற்­றது தனக்கு மன­நி­றைவை அளிப்­ப­தாக கூறிய ராஜா, இப்­போது பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சமூக மேம்­பாட்டு துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­துப் படிக்க ஆர்­வத்­தோடு இருக்­கி­றார்.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே தனக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்து ஆத­ரவு தந்த தன்­னு­டைய சமூக சேவ­க­ரைப் போல் தானும் எதிர்­காலத்­தில் தன்­னைப் போன்ற சூழ்­நி­லை­யில் சிக்கி உதவி தேவைப்­படும் பிள்ளை­களுக்கு வழி­காட்­டி­யாக இருக்­க­வேண்­டும் என்று விரும்­பு­கி­றார்.

பல வரு­டங்­க­ளாக பிற­ரி­டம் பேசு­வ­தற்­குக்­கூட பய­மும் தயக்­க­மும் கொண்­டி­ருந்­தார் இவர். ஆனால், தன்­னைப் போன்ற குடும்­பப் பின்­னணி கொண்ட நண்­பர்­களி­டம் பேசி, தொடர்ந்து அவர்­க­ளுக்கு ஊக்­கம் அளித்து, அவர்­க­ளின் பள்ளி வாழ்க்­கை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னார்.

பொது­வாக தமிழ்­மொழி பாடத்­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கும் இவர், ஆசி­ரி­யர்­கள் தந்த ஊக்­கத்­தோடு சாதா­ரண நிலைத் தேர்­வில் தேர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார். இது தனக்கு அதி­க­ளவு மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தாக தெரி­வித்­தார்.

“நான் ஓர் பரா­ம­ரிப்பு இல்­லச் சூழ­லில் இருந்­த­வாறு பாடம் கற்­ற­போ­து­கூட என்­னு­டைய ஆசி­ரி­யர்­கள் என்­னைத் தொடர்பு­கொண்டு நலம் விசா­ரிப்­பார்­கள். நான் தனி­மை­யில் இருப்­ப­து­போல் ஒரு பொழு­தும் உண­ர­வில்லை. இது என் கல்­விப் பய­ணத்­தில் பெரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது. அமை­தி­யான சுபா­வம் கொண்ட நான், பிற­ரி­டம் தைரி­ய­மா­கப் பேசத் தொடங்­கி­ய­தற்கு இணைப்­பாட நட­வ­டிக்­கை­களில் எனது ஈடு­பாடு, மிகப் பெரிய பங்கு வகித்­தது. இதே உத்­வே­கத்­து­டன் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் நன்­றாக படித்து சமூ­கத்­திற்­குப் பங்­காற்­றும் சமூக சேவ­கன் ஆவேன்,” என்­றார் ராஜா.

ஐந்து அல்­லது அதற்கு அதி­க­மான பாடங்­களில் 85.4% தேர்ச்சி விகி­தம்

கொவிட்-19 கொள்­ளை­நோய்ச் சூழலி­லும் 30 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு 2020ஆம் ஆண்­டில் சாதா­ரண நிலைத் தேர்வு எழு­திய மாண­வர்­கள் சிறந்த தேர்ச்சி பெற்­றுள்­ள­னர். ஐந்து அல்­லது அதற்­கும் அதி­க­மான பாடங்­களில் 85.4% மாண­வர்­கள் தேர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

முடக்­க­நிலை, பள்ளி மூடல் போன்­ற­வற்­றைக் கடந்­து­வந்து தங்­க­ளி­டம் மீள்­திறன் உண்டு என்று நிரூ­பிக்­கும் வகை­யில் இந்த தேசிய நிலைத் தேர்­வில் மிகச் சிறப்­பா­கச் செய்­துள்­ள­னர். கொவிட்-19 சூழல் கருதி, தங்­கள் தேர்வு முடி­வு­களை மாண­வர்­கள் அவ­ர­வர் உயர்­நி­லைப் பள்ளி­களி­லி­ருந்து, பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைக் கடைப்­பி­டித்­த­படி, பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon