இளம் நாடகவாதிகளை உருவாக்கிய ‘இஸம்ஸ்’

பொது­வாக ஒரு மேடை நாட­கம் என்று எடுத்­துக்­கொண்­டால், நாடக வச­னங்­களை எழு­தும் கதா­சி­ரி­யர், கதா­சி­ரி­யர் எழு­தும் வச­னங்­களுக்கு உயிர்­கொ­டுக்­கும் நடி­கர்­கள், நாட­கத்துக்கு மெரு­கூட்­டும் ஒலி, ஒளி வடி­வ­மைப்­பா­ளர், படைப்­பின் அனைத்து அம்­சங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து வழி­ந­டத்­தும் இயக்­கு­னர் என பல­ரின் உழைப்பு அதில் அடங்கி இருக்­கும்.

இப்­படி ஒரு மேடை நாட­கத்தை அரங்­கேற்ற தேவைப்­படும் திறன்­களைக் கற்று, மேடை நாட­கம் மீதான ஆர்­வத்­தை­யும் அறி­வை­யும் வளர்த்­துக்­கொள்ள புத்­தாக்­க­மிக்க ஒரு வாய்ப்பை ஐந்து இளை­யர்­களுக்கு வழங்­கி­யது ‘அகம்’ மேடை­நா­டக அமைப்பு.

‘இஸம்ஸ்’ என்ற இந்­தத் தயா­ரிப்பு, ஐந்து இளை­யர்­களை முதல்­மு­றை­யாக நாட­கத் துறை­யில் ஈடு­படுத்தி, அவர்­க­ளின் படைப்­பு­களை மேடை­யேற்­றும் வாய்ப்­பை­யும் வழங்­கி­யது.

இவர்­க­ளின் படைப்­பு­கள் கடந்த மாதம் 18 முதல் 20ஆம் தேதி வரை ஸ்டாம்­ஃபர்ட் கலை நிலை­யத்­தில் மேடை­யேற்­றப்­பட்­டன.

இவர்­க­ளது படைப்­பு­கள் அரங்­கேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்பு கடந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் டிசம்­பர் மாதம் வரை இவர்­கள் மேற்­கொண்ட மேடை நாடகக் கற்­றல் பய­ணமே இந்­தத் தயா­ரிப்­பின் சிறப்­பம்­சம்.

சிங்­கப்­பூ­ரில் மேடை நாட­கங்­களைத் தயா­ரித்து படைக்­கும் பல குழுக்­களும் பள்­ளி­களும் உள்­ளன. ஆனால் நாட­கத்­து­றை­யில் அனு­பவம் இல்­லா­விட்­டா­லும் ஆர்­வம் இருந்­தால் போதும். இளை­ஞர்­கள் சுய­மாக வச­னங்­கள் எழுதி, இயக்கி, மேடைக்கு ஒளி வடி­வ­மைத்து அவர்­களை நடிக்­க­வும் வைக்க வழி­ வகுத்­துள்­ளது ‘இஸம்ஸ்’.

நூற்றுக்­கும் மேற்­பட்ட நாட­கங்­களை எழு­திய பிர­பல சிங்­கப்­பூர் மேடை நாடக எழுத்­தா­ள­ரும் கலா­சா­ரப் பதக்­க­ம் பெற்றவருமான திரு ஹரேஷ் ஷர்மா, மேடை நாட­கத்­தில் 20 ஆண்­டு­கால அனு­ப­வம் பெற்ற இயக்­கு­நர் திரு நூர் அஃபெண்டி இப்­ரா­ஹிம் போன்ற ஆறு மேடை நாடக வல்­லு­நர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­கீழ் மேடை நாட­கத் தயா­ரிப்­பின் நுணுக்­கங்­களை இளை­யர்­கள் கற்­ற­னர்.

‘இஸம்ஸ்’ என்­றால் ஆங்­கில வார்த்­தை­க­ளுக்கு பின் சேர்க்­கப்­படும் ஒரு பின்­னொட்டு. இது பொது­வாக சில கருத்­து­க­ளின் தொகுப்­பு­கள், நம்­பிக்கை போன்­ற­வற்றை குறிக்­கப் பயன்­ப­டு­கிறது.

சுய நியதி, தோல் நிறத்­தால் பாகு­பாடு, பெண்­ணி­யம் போன்ற தலைப்­பு­களில் ஐந்து இளை­யர்­களும் தனிப்­பட்ட முறை­யில் தங்­க­ளைப் பாதிக்­கும் அல்­லது உறுத்­தும் ஒரு சமூ­கப் பிரச்­சினை­யைத் தேர்வு­செய்து 10 நிமிட நாட­கப் படைப்பை அரங்­கேற்­றி­னர்.

இளை­யர்­கள் மேடை­யில் வெளிப்­ப­டுத்­திய உணர்வு­களும் நாட­கம் மீதான அவர்­க­ளின் வேட்­கை­யும் தயா­ரிப்­பின் குறை­பா­டு­களை மறைத்­தது.

மேலோட்­ட­மான நடிப்பு, ஆழ­மில்லா கதைக் கரு என சில பார்­வை­யா­ளர்­கள் குறை­கூ­றி­னா­லும் படைப்­பு­க­ளின் நிறை­க­ளைச் சீர் தூக்கிப் பார்த்து, வளர்ந்­து­வ­ரும் இந்­தப் புதிய நாட­க­வா­தி­க­ளைப் பாராட்­டி­ய­வர்­கள் பலர்.

“கலை­ஞர்­க­ளின் படைப்­பு­கள் முழுக்க முழுக்க அவர்­க­ளின் எழுத்து. படைப்­பாற்­றல் திற­னை­யும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­க­ வேண்­டும் என்­ப­தில் அகம் குழு உறு­தி­யாக இருந்­தது.

“இளை­யர்­களுக்கு வழி­காட்­டு­தல்­களை வழங்­கி­னா­லும் இறு­தி­யில் அவர்­க­ளது படைப்­பு­கள் அவர்­க­ளின் சிந்­த­னை­யின் வெளிப்­பா­டாக இருக்க வேண்­டும் என்­பதே நோக்­கம்.

“கிரு­மித்­தொற்று காலத்­தில் அனை­வ­ரும் நேர­டி­யாக சந்­திக்க முடி­யா­த­தால் இணை­யம்­வழி எழுத்­துப் பயி­ல­ரங்­கில் இருந்து தொடங்­கி­யது ‘இஸம்ஸ்’. இந்­தப் பய­ணத்­தில் பல சவால்­கள் இருந்­தா­லும் பங்­கேற்­ற­வர்­க­ளின் உற்­சா­க­மும் ஆர்­வ­மும் புத்­து­ணர்ச்­சி­யைத் தந்­தன,” என்று ‘இஸம்ஸ்’ தயா­ரிப்­பாளர் திரு பொன்­கு­ம­ரன் செல்­வம் கூறி­னார்.

இளை­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட “Dramaturgy” என்று அழைக்­கப்­படும் நாட­க­வி­யல் துறை­யைப் பற்­றிய பயிற்சி, ‘இஸம்ஸ்’ தயா­ரிப்­பில் புது­மை­யான அம்­சம்.

ஆங்­கில மேடை நாட­கத் துறை­யில் இது ஒரு முக்­கி­ய­மான பகுதி. நாடக பயிற்­சி­க­ளின்­போ­தும் ஒத்­தி­கை­க­ளின்­போ­தும் இருந்து படைப்­பின் பல அம்­சங்­களை ஆராய்ந்து அவற்­றின் குறை­க­ளைச் சுட்­டிக்­காட்டி, மேம்­பாட்­டிற்­கான ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்­கும் ஒரு பணி இது.

கலை­ஞர்­க­ளுக்கு இதை அறி­மு­கப்­ப­டுத்தி அவர்­க­ளின் மேடை நாட­கத் திறனை பெருக்கி உள்ளது ‘அகம்’.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!