திருப்புமுனைக்கு வித்தான தொழில்நுட்பம்

ஸ்காட்­லாந்­தில் படித்­துக்­கொண்­டிருந்த கால­கட்­டத்­தில், ‘டிஷும்’ (Dishoom) என்ற இந்­திய உண­வ­கத்­தைப் பற்றி அறிய வந்து, அங்கு வாடிக்­கை­யா­ள­ரா­கச் சென்­றார் மனோஜ் குமார். அது அவ­ருக்­குப் புது­வித அனு­ப­வ­மாக அமைந்­தது.

“இந்­திய உணவை எப்­படி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­ப படைப்­பது, இந்­திய உணவை மற்ற இனத்­த­வர் எவ்­வாறு மதிப்­பி­டு­கிறார்­கள் போன்­ற­வற்­றைப் பற்றி தெரிந்து­கொண்­டேன். இது­போன்ற ஓர் இந்­திய உண­வ­கத்தை சிங்­கப்­பூ­ரில் திறக்க அதுவே என்­னைத் தூண்­டி­யது,” எனக் கூறி­னார் 27 வயது மனோஜ் குமார் அன்­ப­ழ­கன்.

அவர் 2019ஆம் ஆண்டு டக்ஸ்­டன் ஹில் பகு­தி­யில் தம்பி ரி‌ஷி ­கு­மார், உற­வி­னர் டிலிப் குமார் ஆகி­யோ­ரு­டன் இணைந்து ‘கிச்­சன்­கு­மார்ஸ்’ உண­வ­கத்­தைத் தொடங்கி­னார். இங்கு மேற்­கத்­திய, இந்­திய கல­வை­யில் உண­வு­வ­கை­கள் விற்­கப்­ப­டு­கின்­றன.

தொடக்கத்தில் சிக்கல்...

கடந்­தாண்டு ஜன­வரி மாதத்­தில்­தான் வியா­பா­ரம் சூடு­பி­டிக்­கவே ஆரம்­பித்­தது. ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று வந்து, வியா­பாரத்தை அடி­மட்­டத்­திற்­குத் தள்­ளி­யது. நாட்­டில் கிருமி முறி­ய­டிப்­புத் திட்­டம் கடந்த ஏப்­ரல் மாதம் நடப்­புக்கு வந்­த­போது, உண­வ­கங்­க­ளி­லி­ருந்து உணவை வாங்­கிச் செல்­ல­வும் விநி­யோ­கச் சேவை வழி உண­வைப் பெற்­றுக்­கொள்­ள­வும் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­டது.

மாற்றம் தேவைப்பட்டது...

பெரும்­பா­லும் கடை­யில் அமர்ந்து உணவு உண்­ணும் வாடிக்­கை­யாளர்­க­ளையே உண­வக வியா­பாரம் நம்­பி­யி­ருந்­த­தால் உட­ன­டியாக செயல்­மு­றை­களில் மாற்­றம் செய்ய வேண்டி­யி­ருந்­தது.

இணை­யத்­ த­ளத்­தில் உண­வுப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டது. இருப்­பி­னும், நிச்­ச­ய­மற்ற சூழ­லில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­து­விட்­டது.

ஊழி­யர்­கள் சிலரை ஒரு­சில வாரங்­களுக்­குக் கட்­டாய விடுப்பு எடுக்­கச் சொல்­வது, உணவு விநி­யோ­கத்­திற்கு ஊழி­யர்­களைத் தேடு­வது, வாட­கை­யைச் சமாளிப்­பது என ஒரே நேரத்­தில் பல அம்­சங்­களில் கவனம் தேவைப்பட்டது.

மோட்­டர்சைக்­கிள்­களில் வீடு­களுக்கு விநி­யோ­கி­க்கப்­படும் உணவு, வாடிக்­கை­யாளர்­க­ளைச் சென்­ற­டை­யும்­போது கவிழ்ந்து­வி­டு­வ­தால் ‘கம்­ஃபர்ட்­டெல்­குரோ’ டாக்­சி­யின் உணவு விநி­யோ­கச் சேவையை அவர்­கள் நாடி­னர்.

உண­வுத் தரத்தை நிலை­நாட்ட, பிரி­யாணி போன்று எந்த உண­வு ­வகையை நீண்ட நேரத்­திற்­குக் கெடா­மல் வைத்­தி­ருக்க முடி­யுமோ, அந்த உண­வு­வ­கை­கள் மட்­டுமே இணைய உணவு விநி­யோ­கப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டன.

விடாமுயற்சி, மீள்திறன்...

சமூக ஊட­கங்­களில் சந்­தைப்­படுத்­து­வதில் செல்­வாக்கு மிக்­க­வர்­கள் அதா­வது ‘இன்­ஃப்­லு­வன்­சர்ஸ்’ (influencers) வழி தங்­க­ளின் உண­வுப் பொருட்­களை விளம்­பரப்­படுத்­தும் உத்தி, உண­வ­கத்­துக்­குத் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது.

“இந்த உத்­தி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தில் அன்­னை­யர் தினத்தை முன்­னிட்டு எங்­களுக்­குச் சமா­ளிக்க முடி­யாத அள­வுக்கு ‘ஆர்டர்’கள் வந்து குவிந்­தன. விடா­முயற்சி, மீள்­தி­றன் இவ்­வி­ரண்­டு­ட­னும் செயல்­பட்­ட­தில் நல்ல பலன் கிட்­டி­யது,” என்று தெரி­வித்­தார் உரி­மை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான டிலிப்­ கு­மார், 31.

அரசாங்க ஆதரவுத் திட்டங்கள்...

அதோடு உணவு பானத் துறைக்­கான அர­சாங்க ஆத­ர­வுத் திட்­டங்­க­ளை­யும் இவர்­கள் பயன்­ப­டுத்­தி­னர்.

முதல்­கட்­டத் தளர்­வி­லி­ருந்து இன்று வரை­யில் வியா­பா­ரம் படிப்படி­யாக மேம்­பட்டு வரு­கிறது.

தொழில்­நுட்­பப் பயன்­பாடு, துரி­த­மா­கச் செயல்­மு­றை­களை மாற்­றி­ய­மைக்­கும் தன்மை ஆகி­யவை வியா­பா­ரத்­தின் நிலைத்­தன்­மையை உறுதி­செய்­துள்­ளது. உதா­ர­ணத்­திற்கு, அர­சாங்­கத்­தின் மின்­னி­லக்க மீள்­தி­ற­னுக்­கான ஊக்­கத்­தொகைக்கு (Digital Resilience Bonus) தகு­தி­பெற ஐசெஃப் (iCHEF) நிறு­வ­னத்­தின் மின்­வர்த்­த­கச் செயல்­மு­றையை (Point-of-Sales System) அமல்­ப­டுத்­தி­னர்.

எந்த நேரத்­தில் வியா­பா­ரம் உச்­சத்தை எட்­டும், எந்த நேரத்­தில் மந்­த­மாக இருக்­கும் என்பன போன்ற முக்­கி­யத் தக­வல்­களை இதன் வழி சேக­ரிக்க முடி­யும்.

இத­னால், உண­வ­கத்தை எந்­தெந்த நேரங்­களில் திறந்து வைத்­தால் வியா­பா­ரத்­திற்­குச் சாத­க­மாக இருக்­கும் என்பது போன்ற முடி­வு­களை இவர்­களால் எடுக்க முடி­கிறது. செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வதற்­காக ‘கியூ­ஆர்’ குறி­யீட்­டைத் திறன்­பே­சி­யில் ‘ஸ்கேன்’ செய்து உண­வுப் பட்­டி­ய­லைப் பார்­வை­யி­டும் முறையை இவர்­கள் தற்­போது பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

“வியா­பா­ரத்­தில் மெல்ல மெல்ல முன்­னேற்­றத்­தைக் காண முடி­கிறது. கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் மித­மா­ன­தும் வியா­ப­ரத்தை விரி­வுப்­ப­டுத்த நம்­பிக்கை கொண்­டுள்­ளோம்,” என்­றார் நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வர்த்­த­க, சமூக நிறு­வ­னத் துறை­யில் இரண்டாம் ஆண்டு பயிலும் ரி‌ஷி­ கு­மார், 20.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!