பரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்

சவால்மிக்க இசைத்தொகுப்பு. அதில் பரதநாட்டியத்தின் முக்கிய அம்சங்களான சப்தம், வர்ணம், பதம், ஜாவளி, தில்லானா ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியமாக, அரங்கேற்றத்தின்போது இறைவன் மீதுள்ள அன்பை நாட்டியக் கலைஞர் நயமாக வெளிப்படுத்த வேண்டும். இதை வளர்ந்து வரும் நடனத் தாரகை சூ மெய் ஃபெய், சென்ற செவ்வாய்க் கிழமையன்று அரங்கேற்றிய தமது ‘மோகமனம்’ படைப்பில் மிக அழகாகவே செய்தார். தனது இரண்டு மணி நேர மேடைப் படைப்பில், பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த முதல் சிங்கப்பூர் சீனப் பெண் என்ற பெருமைக்குரியவர் 23 வயது மெய் ஃபெய்.

“தயாராக இருந்தும், மேடை ஏறுவதற்கு முன் படபடப்பாக இருந்தது. சீனரோ இந்தியரோ அரங்கேற்றம் என்பது ஒருவரின் நாட்டியப் பயணத்தின் மிக உன்னத படைப்புகளில் ஒன்று.

“என் படைப்பை நான் இன்புற்று படைக்க வேண்டும் என்று நினைத்தேன். நடனம் என்பது அனைவருக்குமானது. அதனால் அதைப் பிறரும் கண்டு இன்புற வேண்டும் என்ற எண்ணத்துடன் நடனமாடினேன்,” என்றார் அவர்.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் அரங்கேற்றம் இடம்பெற்ற குட்மேன் ஆர்ட்ஸ் சென்டருக்கு 50க்கும் குறைவானவர்களே வருகை அளித்திருந்தனர்.

அவர்களுள் அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தைச் சேர்ந்தவரும் மெய் ஃபெயின் நடன ஆசிரியருமான மோகனபிரியன் தவராஜாவும் ஒருவர்.

“பரதநாட்டியத்தின் மீது மெய் ஃபெய் காட்டிய ஈடுபாடு அதிகம். அதனால் கலையின் நுணுக்கங்களை அவருக்குக் கற்றுத் தருவதை நான் சவாலாக எடுத்துக்கொண்டேன். அவர் சீனர் என்பது முக்கியமல்ல. நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள திடமான உடலும் நல்ல ஆன்மாவுமே முக்கியம்.

“அவர் கடுமையாக உழைப்பவர். கடப்பாடு, உறுதி இரண்டும் அவரிடம் உண்டு. ஒருவர் திறமைசாலி ஆக, அவரிடம் இவை இருப்பது மிக அவசியம்,” என்றார் திரு மோகனபிரியன். அப்சராசில் மெய் ஃபெய் 2015ல் சேர்ந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக திரு மோகனபிரியனிடம் பரதம் பயின்று வருகிறார் அவர்.

தமக்கு 17 வயதாக இருந்தபோது அப்சராசில் நாட்டியம் பயிலும் எண்ணம் மெய் ஃபெய்க்கு ஏற்பட்டது. ஆனால் தமது வயது தடையாக இருக்குமோ என்ற கவலையும் அவருக்கு இருந்தது.

இருப்பினும், தனது தொடக்கக் கல்லூரி நடனப் பயிற்றுவிப்பாளர் விஜயாவின் ஆலோசனையில் மெய் ஃபெய் அப்சராசில் சேர்ந்தார்.

அதன் பின்னர், மெய் ஃபெய் திரும்பிப் பார்க்கவே இல்லை. வகுப்புகளுக்குச் சென்றார், முடிந்த பின்னர் மற்ற வகுப்புகளில் நடப்பதையும் இருந்து பார்த்தார். பாடல் வரிகள், எழுத்துகள் இவற்றால் தொடக்கக் காலத்தில் பரதப் பயணம் இவருக்குச் சவாலாகவே இருந்தது.

தமிழ், தெலுங்குச் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவற்றின் பொருளை அறிந்திட அவர் இணையத்தை நாடினார். ஆனால் பலன் அளிக்கவில்லை.

“எளிய சைகைகளைக் கொண்டு நடனப் பயிற்றுவிப்பாளர் விளக்கியபோது என்னால் மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிந்ததை நான் உணர்ந்தேன். என் புரிதலுக்கு முடிந்தவரை பாடுபடும் ஆசான்கள் எனக்குக் கிடைத்தது பெரும் வரமே,” என்றார் மெய் ஃபெய்.

சிறுவர்களுக்கான வளமூட்டு மையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் மெய் ஃபெய், வாரத்தில் நான்கு நாட்களில் குறைந்தது 11 மணி நேரத்திற்கு நடனம் பயில்கிறார்.

“பரதநாட்டியத்தைப் பயில்வது நான் பெற்ற வரப்பிரசாதம். மிக அற்புதமான கலை இது. என் பயணம் சற்று கரடுமுரடு என்றாலும், அது எனக்கு அளித்துள்ள மனநிறைவு எல்லையற்றது. நான் மேன்மேலும் பயிற்சி செய்ய விரும்புகிறேன்,” என்கிறார் மெய் ஃபெய்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!