செய்தியாளர்களாக பரிணமிக்க இருக்கும் தமிழ் மாணவர்கள்

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­களின் எழுத்­துத் திற­னை­யும் திருத்­து­தல் திற­னை­யும் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பயி­ல­ரங்கை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது மார்­சி­லிங் உயர்­நிலைப் பள்ளி.

தமிழ் முரசு செய்­தி­யா­ளரை அந்­தப் பயி­ல­ரங்­கின் சிறப்­புப் பேச்­சா­ள­ராக அழைத்து மாண­வர்­களுக்கு நேரடி அனு­ப­வங்­க­ளைக் கொண்டு சேர்த்­த­னர் பள்ளி ஆசி­ரி­யர்­கள்.

மாண­வர்­க­ளின் தமிழ் ஆர்­வத்தை வளர்க்­க­வும் அவர்­க­ளின் எழுத்­துத் திறனை மேம்­ப­டுத்­த­வும் மார்­சி­லிங் உயர்­நி­லைப் பள்ளி கடந்த ஈராண்­டு­க­ளாக மின்­னி­த­ழைத் தயா­ரித்து வரு­கிறது.

அந்த மின்­னி­த­ழில் மாண­வர்­கள் மேலும் சிறப்­பாக எழு­த­வும் படைப்­பு­க­ளைச் சீரிய முறை­யில் திருத்தி வெளி­யி­ட­வும் நோக்­கம் கொண்­டது அந்­தப் பள்ளி.

செய்­தி­யா­ளர்­க­ளின் தின­சரி பணி­க­ளைப் பற்­றி­யும் அவர்­கள் கற்ற பாடங்­க­ளை­யும் மாண­வர்­கள் அறிந்­து­கொள்ள நல்ல வாய்ப்­பாக அமைந்­தது இந்­தப் பயி­ல­ரங்கு.

சிங்­கப்­பூ­ரில் தமிழ் முரசு நாளி­தழ் ஆற்றி வரும் சமூக, இலக்­கியப் பணி­க­ளைப் பற்றி மாண­வர்­கள் ஏற்­கெ­னவே நன்கு அறிந்து இருந்­த­னர்.

தமிழ் முரசை நிறு­விய தமி­ழ­வேள் கோ சாரங்­க­பாணி குறித்­தும் தமிழ் முர­சின் வர­லா­றும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் அத்­துப்­படி.

மார்­சி­லிங் உயர்­நி­லைப் பள்ளி உயர்­த­மிழ் பாடத்தை வழங்­கும் தமிழ்­மொழி நிலை­ய­மா­க­வும் விளங்கு­கிறது.

கடந்த மாதம் 8ஆம் தேதி நடை­பெற்ற இந்­தப் பயி­ல­ரங்­கில் ஏறத்­தாழ 15 பள்­ளி­களில் உயர்­நிலை 1, 2 வகுப்­பு­களில் பயி­லும் கிட்­டத்­தட்ட 50 மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர். ஒன்­றரை மணி நேரம் நடை­பெற்ற பயி­ல­ரங்கை மார்­சி­லிங் உயர்­நி­லைப் பள்ளி தாய்­மொ­ழித் துறை தலை­வர் திரு­வாட்டி ர‌ஷிடா தொடங்­கி­வைத்­தார்.

பாடத் தலை­வர் திரு கோவிந்­த­ரா­ஜலு கிரு­‌ஷ்­ண­மூர்த்தி, தமிழ்­மொழி ஆசி­ரி­யர்­கள் டாக்­டர் ஆண்­டாள், திரு­மதி ராஜ­கு­மாரி தங்­க­ராஜ், திரு­மதி சுமதி திரு­மா­றன் ஆகி­யோர் இணைந்து இந்­தப் பயி­ல­ரங்­கிற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

அரை­யாண்­டுக்கு ஒரு­முறை வெளி­யீடு காணும் ‘மார்­சி­லிங் முரசு’ மின்­னி­த­ழில் மாண­வர்­க­ளின் வெவ்­வேறு படைப்­பு­கள் சேக­ரிக்­கப்­பட்டு தொகுத்து வழங்­கப்­ப­டு­கிறது.

மாண­வர்­க­ளுக்கு வகுப்­ப­றை­யிலும் அதை­யும் தாண்டி தமிழ்­மொழி­யைக் கொண்­டு­சேர்க்­கும் பல முயற்­சி­களில் ஒன்­றாக ‘மகிழ்­வூட்டும் கற்­றல்’ என்ற திட்­டத்­தின்­கீழ் இந்த ‘மார்­சி­லிங் முரசு’ மின்­னி­தழை மார்­சி­லிங் உயர்­நிலைப் பள்ளி தயா­ரித்து வரு­கிறது.

கதை, கட்­டுரை, கவிதை, நடப்பு விவ­கா­ரம், விடு­க­தை­கள், ஓவி­யம், நேர்­கா­ணல்­கள், புகைப்­ப­டத் தொகுப்பு, நூல் ஆய்வு எனப் பல­ வ­கை­யான மாண­வர் படைப்­பு­கள் இந்த மின்­னி­த­ழில் ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­கின்­றன.

“சில மாண­வர்­க­ளுக்கு எழு­து­வது இயல்­பாக வரும். ஆனால் வேறு சில­ரால் தமிழ்­மொ­ழி­யில் கதையோ கவி­தையோ எழு­து­வது சவா­லாக இருக்­கும். அவர்­களுக்குப் படிப்­ப­டி­யாக ஊக்­கம் கொடுக்கும் வண்­ணம் அவர்­களுக்கு மகிழ்ச்­சி தரும் அல்­லது அவர்­களுக்கு மிகுந்த திறன் இருக்­கும் ஓவி­யம் தீட்­டு­வது போன்ற வேறு அம்­சங்­களில் அவர்­க­ளின் படைப்பை இந்த மின்­னி­த­ழில் இணைப்­போம்.

“அவர்­களும் பங்­க­ளிக்க முடி­யும் என்ற ஆர்­வத்­தில் மொழி­யு­ட­னான தொடர்பை அவர்­கள் தொடர்ந்து பேணு­வார்­கள் என்று நம்­பிக்கை கொள்­கி­றோம்,” என்­றார் மார்­சி­லிங் உயர்­நி­லைப் பள்ளி­யில் கடந்த பத்­தாண்­டு­க­ளா­கத் தமிழ் கற்­பிக்­கும் திரு­மதி சுமதி திரு­மா­றன்.

“செய்தி எழு­து­வது எப்­படி என்றும் கதை, கட்­டு­ரை­யோடு ஒப்­பிட்டு இதன் வித்­தி­யா­சத்தை அறிந்து எழு­தும் நம்­பிக்கை கிடைத்­துள்­ளது,” என்று கூறி­னார் மார்­சி­லிங் உயர்­நி­லைப் பள்ளி மாணவர் ஆரா­தனா ரமே‌ஷ்.

“இன்­னும் கூடு­தல் நேரம் இந்­தப் பயி­ல­ரங்கு நடத்­தப்­பட்­டால் எங்­க­ளுக்கு மேலும் பய­னுள்­ள­தாக இருக்­கும். நேரம் போனதே தெரி­ய­வில்லை,” என்­றார் உயர்­நிலை 2ல் பயி­லும் ஜவ­ஹர் அ‌ஷ்­விதா.

“பயி­ல­ரங்­கின்­போது குழுக்­களாகப் பிரித்து கொடுக்­கப்­பட்ட சிறிது நேரத்­திற்­குள் செய்­திக்­குத் தலைப்பை உரு­வாக்க வைத்­தது எங்­க­ளுக்­குத் தொடக்­கத்­தில் சவா­லா­கத் தெரிந்­தது. ஆனால் அதை முடித்­த­வு­டன் நம்­பிக்கை மேலும் வலு­வா­னது,” என்­றார் சுரே­‌ஷ்­குமார் சர­வ­ண­ராம்­கு­மார்.

மாண­வர்­கள் தொடர்ந்து தங்­களின் திறன்­களை வளர்த்து கூடிய விரை­வில் தமிழ் முர­சின் இளை­யர் முரசு பக்­கத்­திற்­குத் தங்­கள் படைப்­பு­களை வழங்­கு­வ­தில் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!