ராவணனின் நாடித்துடிப்பாக ‘நாடி’ நாட்டிய நாடகம்

இந்து இளங்­கோ­வன்

 

அரக்­கர் குல அழகி சூர்ப்­ப­னகை, சீதையை தன்­வ­சம் ஈர்த்த அழ­கிய பொன் மான் மாரீ­சன், ராவ­ணனை எதிர்த்துப் போரிட்ட வீரக் கழுகு ஜடாயு, கண­வனை இழந்து

பரி­த­விக்­கும் மண்­டோ­தரி.

இவர்­களே ‘நாடி’ என்­னும் நாட்டிய நாடகப் படைப்­பில் இடம்பெற்ற முக்­கிய கதா­பாத்­தி­ரங்­கள்.

போர்க்­க­ளத்­தில் காய­முற்று, தமது மனைவி மண்­டோ­த­ரி­யின் மடி­யில் கிடக்­கும் ராவ­ண­னின் பார்­வை­யில் ராமா­ய­ணத்­தின் சுவா­ர­சி­ய­மான தரு­ணங்­களை நாட்டிய நாடக பாணி­யில் நினை­வு­கூர்ந்­தது சிங்­கப்­பூர் இளம் கலை­ஞர்­களை மைய­மாக கொண்ட ‘தத்வா’ என்­னும் கலைக் குழு.

‘நாடி’ என அழைக்­கப்­படும் இப்­ப­டைப்பு, இவ்­வாண்டு தமிழ் மொழி விழா­வின் ஓர் அங்­க­மாக இடம்­பெற்­றது.

ராவ­ண­னின் இறுதித் தரு­ணங்­களில் ‘நாடி’ துடிப்­பாக துடிக்­கும் அவ­ரது நினை­வு­களை கலை­

ர­ச­னை­யு­டன் பார்­வை­யா­ளர்­களை ஈர்க்­கும் வகை­யில் காணொளி வடி­வில் ஃபேஸ்­புக்­கில் வெளி­யிட்­டது தத்­வா.

ராமா­ய­ணத்­தில், ஒவ்­வொரு கதா­பாத்­தி­ர­மும் மற்­றோரு கதா­பாத்­தி­ரத்தை ‘நாடி’ச் செல்­வது முக்­கிய திருப்­பு­மு­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­லும் இப்­ப­டைப்­புக்கு ‘நாடி’ என்ற பெயர் வந்­த­தாக கூறி­னார் தத்­வா­வின் கலை இயக்­கு­னர் திரு லோகேந்­திரா.

பத்து இளம் பர­த­நாட்­டிய கலை­ஞர்­கள் படைத்த ஒவ்­வொரு நடன, நாடக காட்­சிக்கு முன்­பும், தோல் பவாய் கூத்து, வாயாங் குலிட் ஆகி­ய­வற்றை தழு­விய நிழல் பொம்­ம­லாட்ட காட்சி அறி­மு­க­மும் இதில் இடம்­பெற்­றது.

“கலை உல­கில் கதை சொல்­வது என்­பது ஒரு முக்­கி­ய­மான அம்­சம். ஒரு கதையை பல வகை­களில், பல கதா­பாத்­தி­ரங்­க­ளின் கண்­ணோட்­டங்­களில் சொல்­ல­லாம்.

“ஒரு கதையைப் பல்­வேறு கோணங்களில் படைத்­தா­லும் அதன் உண்­மை­யான சாரத்தை இழக்­கா­மல் அதை கலை­ந­யத்­து­டன் படைப்­பது மிகவும் சுவா­ர­சி­ய­மான அனு­ப­வம்.

“இதைத்­தான் நாங்­கள் ‘நாடி’­யில் புகுத்த முயற்சி செய்துள்ளோம். தமிழ்மொழி மாதத்தை முன்­னிட்டு இந்த நடன நாட­கத்தைத் தமி­ழில் படைத்­தது பெரு­மைக்­கு­ரிய ஒன்­றாகக் கரு­து­கி­றோம்.

“இந்த நாட்டிய நாடகத்தை இதற்கு முன்­ன­ால் நாங்கள் ஆங்­கி­லத்­தில் படைத்­துள்­ளோம். ஆனால் இந்த நடன நாடகத்தை தமிழில் மேடையேற்றியபோது

தமிழ்ச் சொற்களுக்கு இருக்கும் ஆழ­மும் அழுத்­த­மும் எங்­க­ளது இப்படைப்பை மேலும் மெரு­கூட்­டி­யது.” என்­றார் திரு லோகேந்­திரா.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!