வானில் மட்டுமல்ல, வாழ்விலும் உயரப் பறக்கும் நந்து தினேஷ்

சிறு வயது முதல் விமா­னங்­கள் என்­றால் நந்து தினேஷ் குமா­ருக்கு கொள்ளை ஆசை. விமா­னத்­தில் பறப்­பது மட்­டும் அல்ல, விமா­னி­யாக வேண்­டும் என்ற இலட்­சி­ய­மும் அவ­ருள் எழுந்­தது.

அந்­தக் கனவை நன­வாக்க உயர்­நி­லைப் ­பள்­ளி­யி­லேயே அவர் அடித்தளம் இட்டார். உயர்­நி­லைப்­ பள்­ளி­யில் ‘ஏரோ­மாடலிங்‘ இணைப்­பாட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார்.

அதற்கு பின், சிங்­கப்­பூர் இளை­யர் விமா­னி­கள் சங்­கத்­தில் (Singapore Youth Flying Club) இணைந்­த­போது தமது இலக்கை நெருங்­கு­வ­தாக அவர் உணர்ந்­தார். அண்­மை­யில் சிங்­கப்­பூர் இளை­யர் விமா­னி­கள் சங்­கத்­தின் ‘சிறந்த விமானி’ மற்­றும் ‘எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் எக்­சலன்ஸ்’ விருது­க­ளைப் பெற்ற திரு நந்து, இளம் விமா­னி­கள் பயிற்­சி­யில் சிறப்­புத் தேர்ச்சி பெற்­றார்.

தற்­போது நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மூன்­றாம் ஆண்டு மாணவரான 18 வயது திரு நந்து, சிங்கப்பூர் இளை­யர் விமா­னி­கள் சங்­கத்­தில் வாழ்க்­கைக்­குத் தேவை­யான பல பாடங்­களைக் கற்­றுக்­கொண்­ட­தாக தமிழ் முரசிடம் பகிர்ந்­து­கொண்­டார்.

“சிங்­கப்­பூர் இளை­யர் விமா­னி ­கள் சங்­கத்­தில் எனக்கு அளிக்­கப்­பட்ட பயிற்­சி­கள் என்னை நல்­ல­தொரு விமா­னி­யாக உருவாக்­கி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது, என்னை ஒரு நல்ல மனி­த­னா­க­வும் மாற்­றி­யுள்­ளது,” என்று அவர் கூறி­னார்.

தமது பெற்­றோர், நண்­பர்­கள் ஆகி­யோர் தந்த ஊக்­கம், இலக்கை நோக்கி வெற்றி நடை போட முக்­கிய உந்­து­த­லாக இருந்தது என்­றும் திரு நந்து குறிப்­பிட்­டார். இப்­ப­யிற்­சி­யில் மன­உ­ளைச்­சலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­ப­தைக் கற்­றுக்­கொண்­ட­தாக அவர் கூறி­னார்.

கல்வி பயில்­வது மட்­டு­மின்றி, விமா­னிப் பயிற்­சி­யி­லும் ஈடு­பட்­டேன். அத்துடன், குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் நேரத்­தைச் செல­வ­ழிக்க வேண்­டும். ஒரே நேரத்­தில் இவை அனைத்­தை­யும் செய்ய வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது. இதுவே நான் எதிர்­கொண்ட மிகப் பெரிய சவால்,” என்­றார் திரு நந்து.

கடந்த இரண்டு ஆண்­டு­களா­க கொவிட்-19 நெருக்­க­டி ­நி­லை­யால் வேறு பல சவால்­

க­ளை­யும் அவர் சந்­தித்­தார். வானில் விமா­னத்தைச் செலுத்தும் பயிற்சியில் ஈடுபட முடியாதநிலை ஏற்பட்டுள்ள போதிலும் நவீன மாதிரி கரு­வி­க­ளின் உத­வி­யு­டன் நிலத்­தில் இருந்­த­வாறே பயிற்சி செய்து வருவதாக அவர் கூறி­னார். சிங்­கப்­பூர் குடியரசு ஆகாயப் ­ப­டை­யில் சேருவதே திரு நந்துவின் அடுத்த இலக்கு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!