இளை­யர் தனித்­து­வத்­துக்கு ‘என் அடை­யா­ளம்’

செவி­க­ளுக்­குத் தேனிசை, கண்­க­ளுக்கு விருந்து, மன­துக்கு இதம் எனப் பார்­வை­யா­ளர்­க­ளைப் பெரி­தும் கவர்ந்த நட­னப் படைப்­பாக பிரம்­மாஸ்த்­ரா­வின் ‘என் அடை­யா­ளம்’ அமைந்­தது.

ஐந்து இளை­யர்­க­ளின் தனித்­து­வத்­து­வத்­தைப் பிர­தி­ப­லிப்­ப­தாக நிகழ்ச்சி அமைந்­தது.

இந்த ஐவ­ரும் தங்­கள் திற­மை­க­ளைக் கண்­ட­றி­யும் பய­ணங்க­ளைக் காட்­டும் நட­னங்­களும் படைக்­கப்­பட்­டன.

நிகழ்ச்­சி­யில் வில்­வம் ராமு, தர்­ஷன் குண­சே­க­ரன், வசந்­த­கு­மார் அன்­ப­ழ­கன், பவித்­தி­ரன் கன­க­ரத்­தி­னம், ரபெக்கா சங்­கீதா துரை ஆகி­யோர் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

இசைக் கரு­வி­களை வாசிப்­ப­தி­லும் இசை­ய­மைப்­ப­தி­லும் திறன் படைத்த பவித்­தி­ரன், இளை­யர்­க­ளுக்கு இசை கற்­பித்து வரு­கி­றார். இப்­ப­டைப்­பில் அவ­ரின் ஆற்­ற­லை­யும் இசை­யார்­வத்­தை­யும் அவர் மிரு­தங்­கம் வாசிக்­கும் விதத்­தில் பார்­வை­யா­ளர்­கள் உணர்ந்­த­னர்.

தனி­மை­யி­லி­ருந்து விடு­பட தர்­ஷன் குண­சே­க­ரன் தமிழ் நாட­கங்­க­ளை­யும் திரைப்­ப­டங்­க­ளை­யும் பார்க்­கத் தொடங்­கி­னார்.

அவற்­றில் கதை­சொல்­லும் பாணி­யைக் கவ­னித்த தர்­ஷன், கதை­சொல்­வ­தில் எத்­த­னையோ அம்­சங்­கள் உள்­ளன என்­றும் அப்­ப­ணி­யைத் திற­மை­யா­கக் கையா­ளப் பல உத்­தி­கள் உண்டு என்­றும் உணர்ந்­தார். அவ்­வாறே காணொ­ளித் தொகுப்­பாக்­கம் குறித்­தும் ஊட­கத் துறை­யின் பின்­ன­ணி­யில் நடப்­ப­தைப் பற்­றி­யும் கற்­றுக்­கொண்­டார்.

‘என் அடை­யா­ளம்’ படைப்­பில் இசைக்­க­ரு­வி­களை வாசித்த இளை­யர்­கள் தங்­க­ளின் இசை­யால் மக்­க­ளின் உணர்­வு­க­ளைத் தூண்­டி­னர். ‘இண்டோ-ஜேஸ்’ இசையை நிரஞ்­சன் பாண்­டி­யன் மற்­றும் அவ­ரின் குழு­வி­னர் வழங்­கி­னர்.

இந்­திய பாரம்­ப­ரி­யம் கலந்த அவர்­க­ளின் நவீன இசைக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­தது.

மேலும், நிகழ்ச்­சி­யில் சம­கால (Contemporary) நடன பாணி­யு­டன் பர­த­நாட்­டி­யத்தை இணைத்து ஆடி­யி­ருந்­த­னர் ஐவர்.

நட­னத்­தின் வழி ஒவ்­வொரு கலை­ஞ­ரின் கதையை அவர்­கள் வெளிப்­ப­டுத்­தி­னர்.

தங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட இசைக்கு ஒரே மாதத்­தில் நட­னம் அமைத்­த­து­டன் தீவி­ர­மா­கப் பயிற்சி செய்­த­தா­க­வும் அவர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

நட­னக் கலை­ஞர்­களில் ஒரு­வ­ரான சம்­யுக்தா, “கலை மூலம் நாம் நமது அடை­யா­ளத்தை எவ்­வாறு செதுக்­கு­கி­றோம் என்­ப­தைக் காட்­டி­யுள்­ளோம்.

“நாங்­களும் எங்­கள் பாதை­களில் மேடு­ பள்­ளம் பல­வற்றை அனு­ப­வித்­துள்­ள­தால் மற்­றக் கலை­ஞர்­கள் தங்­கள் வாழ்­வில் அனுப­வித்த சவால்­களை எங்­க­ளால் புரிந்­து­கொண்டு அவற்றை நட­னத்­தின் மூலம் வெளிப்­ப­டுத்த முடிந்­தது,” என்­றார்.

‘என் அடை­யா­ளம்’ நிகழ்ச்­சியை மேடை­யேற்­றிய பிரம்­மாஸ்த்­ரா­வின் நிரஞ்­சன் பாண்­டி­யன், “நான் சிறு­வ­ய­தில் என் இசை ஆர்­வத்தை மக்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­வ­தற்கு எவ்­வ­ளவோ ஆசைப்­பட்­டேன். ஆனால் அதற்­கான வாய்ப்­பு­கள் சரி­யாக அமை­ய­வில்லை,” என்­றார்.

‘என் அடை­யா­ளம்’ நிகழ்ச்­சி­வழி திற­மை­வாய்ந்த இளை­யர்­க­ளைத் தாங்கள் கொண்­டா­டி­ய­தாக இவர் கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!