You are here

சிங்கப்பூர்=-மலேசியா இருதரப்பு அவசரகால பாவனைப் பயிற்சி

ரசாயன கசிவு ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது, அதில் சம்பந் தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மக்களை எப்படிக் காப்பாற்றுவது போன்றவற்றை பாவனைப் பயிற்சி கள் மூலம் சிங்கப்பூரும் மலேசியா வும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவிருக்கின்றன. சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியமும் மலேசியாவின் சுற்றுப் புறத் துறையும் மற்ற முகவைகளும் இணைந்து இந்தப் பாவனைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த இரு தரப்புப் பயிற்சி, இந்த முறை துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் வரும் புதன்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். பயிற்சிக்கான ஒத்திகை இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் ஒரு காரும் ஒரு கனரக வாகனமும் மோதியது போலவும் ரசாயனங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்திலிருந்து கசிவு ஏற்படுவது போலவும் பயிற்சி மேற்கொள்ளப்படும்.