மலையாளச் சமூகம் பற்றிய நூல் வெளியீடு

இந்தியாவின் கேரள மாநிலத்திலி- ருந்து சிங்கப்பூருக்குப் புலம் பெயர்ந்த மலையாளச் சமூகத்தின ரின் கதைகளைப் பற்றிய நூல் ஒன்று எழுதப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. டாக்டர் அனிதா தேவி பிள்ளை, டாக்டர் புவா ஆறுமுகம் ஆகியோ ரின் படைப்பான இந்த நூலின் தலைப்பு "From Kerala to Singapore: Voices from the Singapore Malayalee Community". தாய் நாட்டைவிட்டு சிங்கப்பூ- ரில் குடியேறிய அனுபவத்தையும் சமூக மாக ஒன்றிணைந்து அவர்- கள் புரிந்த சாதனைகளையும் மலரும் நினைவுகளாக இந்த நூல் சித்திரிக்கிறது. இம்மாதம் 11ஆம் தேதி அன்று 'தி ஆர்ட்ஸ் ஹவுஸில்' இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற் றது. விழாவில் பேராசிரியர் டோமி கோ, சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தின் தலைவர் திரு கேசவபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்துகொண்டனர்.

இடமிருந்து நூலாசிரியர் டாக்டர் அனிதா தேவி பிள்ளை, திரு கேசவபாணி, பொதுத் தூதர்கள் பேராசிரியர் டாமி கோ; திரு கோபிநாத் பிள்ளை, சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத்தின் தலைவர் திரு ஜெயக்குமார் உன்னிதன். படம்: ‌ஷியாம் சுகுமாரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!