தமிழ்ப் பெண்ணாகிறேன் - ரித்திகா சிங்

தமது வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே கழிந்துவிடும் என்று நினைத்ததாக ரித்திகா சிங் தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டியில், சுதா கொங் காரா மூலம் தாம் தமிழ்ப் பெண்ணாக மாறி வருவதாகக் கூறியுள்ளார். 'இறுதிச் சுற்று' படத்தில் அறிமுகமான ரித்திகா சிங் நடித்துள்ள 'சிவலிங்கா' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். "என் வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே கழிந்துவிடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கடவுள், 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா என்ற தேவதையை அனுப்பி என் வாழ்க்கையை மாற்றிவிட்டார். "நான் இப்போது என்னைத் தமிழ்ப்பெண்ணாக மாற்றிக் கொண்டி ருக்கிறேன். இதற்காக, தமிழ் கற்று மற்றவர்களிடம் முடிந்த அளவு தமிழில் பேசி வருகிறேன். "இப்போது, தமிழை நன்றாக புரிந்து கொள்கிறேன். நான் திக்கித் திணறி பேசுகிறேன். விரைவில் தமிழை முழுமையாக பேச கற்றுக் கொள்வேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!