குறையுள்ள பிள்ளைகளின் நிறைவான நாடகம்

வில்சன் சைலஸ்

நீண்ட வாக்கியங்களைத் திக்கித் திணறாமல் அழகாகவும் தெளி வாகவும் கூறிய 11 வயது மகள் பிரியாவைக் கண்டு பூரித்துப் போனார் 51 வயது திரு சண்முக ரத்னம் தம்பையா. உச்சரிக்க முடியாத சொற்களை எல்லாம் சுலபமாக உச்சரிக்கப் பழகிக் கொண்ட மகளின் முன்னேற்றம் திரு சண்முகத்துக்குப் புதுத் தெம்பு அளித்துள்ளது. ‘டிஸ்லெக்சியா’ எனும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிரியாவுக்கு ஆங்கில எழுத்து களை உச்சரிப்பதும் எழுத்துக் கூட்டி வாசிப்பதும் தொடக்கத் தில் ஒரு பெருஞ்சவாலாகவே இருந்து வந்தது. ‘டிஸ்லெக்சியா’ குறைபாட்டால் மகள் பாதிக்கப்பட்டிருந்ததை உணராத திரு சண்முகரத்னம், படிப்பில் மகளுக்கு நாட்டம் இல்லை எனத் தவறாகப் புரிந்து கொண்டார்.

“எளிய சொற்கள் கொண்ட புத்தகங்களை வாசிப்பது பாலர் பள்ளியிலேயே பிரியாவுக்குச் சவாலாக இருக்கும். “எழுத்துக் கூட்டி வாசிக்கும் போது ஏற்படும் உளைச்சல் காரணமாக சில சமயத்தில் அவளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படும்,” என விளக்கிய திரு சண்முகரத்னம், கண்டாங் கெர்பாவ் பெண்கள் மற்றும் பிள்ளைகள் மருத்துவமனையின் உதவியை நாடினார்.

சிங்கப்பூர் ‘டிஸ்லெக்சியா’ அமைப்பு ஏற்பாடு செய்த நாடக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியா சண்முகரத்னம், 11, ராமாயணத்தில் மந்தரை வேடத்தில் நடித்து பார்வை யாளர்களைக் கவர்ந்தார். படம்: சிங்கப்பூர் ‘டிஸ்லெக்சியா’ அமைப்பு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!