இந்திய எஸ்ஜி அமைப்பு சாக் சலாமின் ஆதரவுடன் சிங்கப்பூரின் இன நல்லிணக்க நாளை கொண்டாடும் விதமாக பாலர் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக இன நல்லிணக்க ஆடை அலங்காரப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியானது ஜூலை 12ஆம் தேதி காலை 11:30 மணிக்கு சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது.
சுமார் 50 மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சிறுவர்களுக்கு இளம் வயதிலேயே இன நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவர்களுக்கு மற்ற இனத்தவரின் கலாசாரங்களை அறியவும் அதன் மீது விருப்பங்களை வளர்க்கவும் உதவும் என்றார் இந்தியன் எஸ்ஜி அமைப்பின் இணை நிறுவனர் திருவாட்டி சுடர்மொழி.
சிறுவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் அன்பளிப்பு பரிசு வழங்கப்பட்டது.
வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பைகளை திருவாட்டி சுடர்மொழி வழங்கி மாணவர்கள் சிறுவர்களைப் பாராட்டினார்.

