சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு 1935 முதல் வெளிவருகிறது. தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் கொள்கை ஏடாக, 6 ஜூலை 1935 அன்று தமிழ் முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. அதன் செயலாளராக இருந்த திரு கோ. சாரங்கபாணி பின்னர் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
Tamil Murasu is Singapore’s only official Tamil-language daily newspaper, published since its founding on July 6, 1935. Established by the Tamil Reform Association (TRA) management committee, the publication was guided by G. Sarangapany, then secretary of the TRA, who also served as its first editor.
தமிழ் முரசின் நிறுவனரும் வெளியீட்டாளருமான தமிழவேள் கோ. சாரங்கபாணி.
Founder and publisher of Tamil Murasu, Thamizhavel G Sarangapany.
இளைய, முதிய வாசகர்களுக்காக அச்சு வடிவிலும் மின்னிலக்கத் தளத்திலும் பலதரப்பட்டவற்றைத் தமிழ் முரசு வழங்குகிறது.
Tamil Murasu offers a diverse range of products, catering to audiences both young and old, across print and digital platforms.
தொடக்க காலத்திலிருந்தும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பின்னரும், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் அறிந்த, அதிகாரமுள்ள, ஒற்றுமையான சமூகமாகத் திகழ தமிழ் முரசு துணைபுரிந்து வருகிறது. இப்போது அதன் 90வது ஆண்டு நிறைவை நெருங்கும் தமிழ் முரசு, அச்சு, மின்னிலக்க வடிவங்களில் செழித்து வளர்கிறது. ‘சமூகத்தின் குரல்’ என்ற அதன் முழக்க வரிக்கு உண்மையாக இருந்து வருகிறது.
From its early roots there to becoming part of Singapore Press Holdings decades later, Tamil Murasu has informed, empowered, and united the community over the years.Now approaching its 90th anniversary, Tamil Murasu thrives in print and digital formats, staying true to its tagline, “Voice of the Community.”
தமிழ் முரசு வரலாறு
Tamil Murasu History
தமிழ் முரசு நிறுவப்பட்டது. வார இதழாகத் தொடங்கப்பட்ட முரசு மூன்று மாதங்களில் வாரம் மும்முறை வெளிவரத் தொடங்கியது.
Tamil Murasu is founded. Initially launched as a weekly, Tamil Murasu quickly gained traction, expanding to a thrice-weekly schedule within three months
Jul 6, 1935
அது எட்டுப் பக்கங்களாக வளர்ந்து, 3 காசு என்ற விலையில் விற்கப்பட்டு, 1937 டிசம்பர் 1 அன்று நாளிதழாக உருமாறியது.
By this time, Tamil Murasu has grown to eight pages, is sold at 3 cents per copy, and became a daily on December 1, 1937.
May 2, 1936
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமது தலைமைத்துவத்தில் நாளிதழை நடத்திய திரு சாரங்கபாணி 1974இல் காலமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இதழை நடத்தினர்.
Mr Sarangapany led Tamil Murasu for nearly 40 years until his passing in 1974, after which his family took over the publication.
1974
படவிளக்கம்: வி.டி. அரசு என அழைக்கப்பட்ட வைத்தியநாதன் திருநாவுக்கரசு 1989 முதல் 2000 வரை தமிழ் முரசு நாளிதழின் தலைமை ஆசிரியராகச் செயல்பட்டார்.
Vaidyanathan Thirunavukkarasu, popularly known as V. T. Arasu, was Tamil Murasu's chief editor from 1989 to 2000.
1989
சாரங்கபாணியின் மகள் ராஜமும் திருநாவுக்கரசும் பங்குதாரர்களாக இருந்த ‘ஹைப்ரோ பிரிண்டிங்’ நிறுவனத்தின் உரிமையானது தமிழ் முரசு.
Shareholders of HiPro Printing, Rajam Sarangapany and V.T. Arasu, owned the rights to Tamil Murasu.
1993
'சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் நாளிதழ்களுள் ஒன்றாக முதல் தமிழ் முரசு வெளிவரத் தொடங்கியது.
Singapore Press Holdings (SPH) acquired HiPro Printing, officially bringing Tamil Murasu into its stable of publications.
Nov 1, 1995
தமிழ் முரசு இப்போது எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
Tamil Murasu is now operated by SPH Media.
Dec 1, 2021
தமிழ் முரசு செயலி வெற்றிகரமாக அறிமுகம் கண்டுள்ளது.