தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோப்புக்கரணம் போட்டால் சூப்பர் பவர் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

2 mins read
31c53dc7-97b9-491a-9209-ee985e2160db
தோப்புக்கரணம் போடும் சிறுவன். - படம்: ஊடகம்

தோப்புக்கரணம் என்பது காது மடல்களைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திரிக்கும் ஓர் எளிய உடற்பயிற்சியாகும். இதைச் செய்வதால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது. இதை ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்றும் அழைப்பார்கள்.

தோப்புக்கரணத்தின் பயன்கள்:

மூளைத்திறனை மேம்படுத்துகிறது:

காது மடல்களைப் பிடித்துச் செய்யும் இந்தப் பயிற்சியால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, அறிவாற்றல், ஞாபக சக்தி மேம்படும்.

உடல் ஆரோக்கியம்: கால்கள், இடுப்பு, முதுகு, கைகளில் உள்ள தசைகள் வலுபெறுவதோடு, உடலின் இரத்த ஓட்டம் சீராகி, அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான பிராண வாயு (ஆக்ஸிஜன்) கிடைக்கிறது.

நுரையீரல் செயல்பாடு: தோப்புக்கரணம் செய்யும்போது ஆழ்ந்து சுவாசிப்பதால் நுரையீரலின் செயல்பாடும் மேம்படுகிறது.

மன அமைதி: மனத்தை ஒருமுகப்படுத்தி செய்வதால், உடல் மற்றும் மனத்திற்கு நல்ல அமைதியை இது தருகிறது.

எப்படி செய்வது?

இரு கால்களுக்கும் சற்று இடைவெளி விட்டு நிமிர்ந்து நிற்கவும்.

இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடிக்கவும்.

மூச்சை ஆழ்ந்து இழுத்தபடி முழங்கால் அளவிற்கு காலை மக்கி உட்கார்ந்து, பின்னர் மூச்சை வெளிவிட்டபடி எழுந்திரிக்கும் இயக்கத்தை செய்யவும்.

கூடுதல் தகவல்கள்:

இந்தியாவில், இந்தப் பயிற்சியானது விநாயகர் வழிபாட்டின் ஒரு அங்கமாகவும், சில சமயங்களில் கல்வி தொடர்பான தவறுகளுக்கு தண்டனையாகவும் வழங்கப்படுகிறது.

அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் இந்தப் பயிற்சியை செய்வது சருமத்திற்கும் கண்களுக்கும் நல்லது என்று கூறப்படுகிறது.

பெற்றோர் முதலில் 5ல் ஆரம்பித்து தினமும் பத்து என்ற எண்ணிக்கையில் செய்தால் பிள்ளைகளும் உங்களைப் பின்தொடர்வார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் இருந்து மாறுபட்டு இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபட வைப்பது பெற்றோர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது.

தோப்புக்கரணத்தை ஆன்மீக நோக்கத்திற்காக போட்டாலும் சரி, உடற்பயிற்சி நோக்கத்திற்காக போட்டாலும் சரி இரண்டு நோக்கங்களும் நம் உடலுக்கு நன்மையைத்தான் தரப்போகிறது.

குறிப்புச் சொற்கள்