விளையாட்டுப் பொருள்களின் சிறப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி

1 mins read
b8615e24-0788-4fca-b43f-79c0c0c722d8
‘இமேஜினேர்’ (Imaginaire) விளையாட்டுப் பொருள் கண்காட்சி முகப்பு. - படம்: கி.ஜனார்த்தனன்

விளையாட்டுப் பொருள்களைச் சிறார்கள் பல தலைமுறைகளாக விரும்பிப் புழங்கியுள்ளனர்.

மனிதர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் ஆகியவற்றை விளையாட்டுப் பொருள்கள் காலங்காலமாக வெளிப்படுத்துகின்றன. 

அத்தகைய பொருள்களின் வரலாற்றையும் மரபையும் எடுத்துரைக்கும் வகையில் ‘இமேஜினேர்’ என்ற விளையாட்டுப் பொருள் கண்காட்சி தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

பிரெஞ்சு சங்கமான ‘அலையன்ஸ் ஃபிரான்சைஸ்’(Alliance Francaise) சிங்கப்பூர், மிண்ட் விளையாட்டு அரும்பொருளகத்துடன் இணைந்து குடும்பங்களுக்காக இந்தக் கண்காட்சியை நடத்துகிறது.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருள்
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருள் - படம்: கி.ஜனார்த்தனன்

கற்பனை ஆற்றல், கடமையுணர்வு, பிறர்க்கு உதவியாற்றும் பண்பு ஆகியவற்றைப் பிள்ளைகள் விளையாட்டுவழி கற்பதாகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

நியூட்டனின் சார்க்கிஸ் ரோட்டிலுள்ள பிரெஞ்சு மன்றக் கட்டடத்தில் இக்கண்காட்சி ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும்.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருள்
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருள் - படம்: கி.ஜனார்த்தனன்
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருள்
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருள் - படம்: கி.ஜனார்த்தனன்

இயந்திரங்களைப்போல நுணுக்கமான விளையாட்டுப் பொருள்களாகச் செயல்படும் ஜோஸ்ட்ரா (Joustra) நிறுவனத்தின் விளையாட்டுப் பொருள்களை வருகையாளர்கள் இங்கு காணலாம்.

பிள்ளைகளின் கனவுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப விளையாட்டுப் பொருள்கள் காலங்காலமாக மாறி வருவதாக ‘அலையன்ஸ் ஃபிரான்சைஸ்’ அமைப்பின் பிரதிநிதி மரியென் லா நோ தெரிவித்தார்.

உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும் வருங்கால ஆளுமையை உருவாக்குவதற்கும் விளையாட்டுப் பொருள்கள் கருவிகளாக உள்ளன என்பதை இங்கு வருபவர்கள் கற்றுக்கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்