தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களின் கலைத்திறனுக்கு மேடையாகத் திகழ்ந்த மந்திர தூரிகை

2 mins read
1645aa81-4d27-411d-afdc-89f61f31ddd5
‘மந்திர தூரிகை’ என்னும் பாடலுக்குச் சிறுவர்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர். - படம்: அகம் நாடக குழு
multi-img1 of 2

செப்டம்பர் விடுமுறையை சுவாரசியமாகக் கழிக்க 5 முதல் 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு மந்திர தூரிகை எனும் நான்கு நாள் தமிழ் நாடகப் பயிலரங்குக்கு அகம் நாடகக் குழுவின் பாலர் மேடை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சி செப்டம்பர் 8 - 11ஆம் தேதிவரை தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிக் பார்க்கில் அமைந்துள்ள அகம் நாடகக் குழுவின் ‘பிளேக் பாக்ஸ்’ அரங்கத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.

சிறுவர்களுக்கு நாடகம் மூலம் தமிழ் கற்பித்தலை எளிமையாகப் புகுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

மந்திர தூரிகை (The Magic Paint Brush) என்னும் பிரபலமான சீன நாட்டுப்புற கதையைத் தமிழில் தழுவி அதனைப் பயிலரங்கின் முதல் மூன்று நாட்களில் சிறுவர்களுக்கு நாடக பயிற்சி வழங்கப்பட்டது.

பிறகு, பயிலரங்கின் நான்காம் நாளில் சிறுவர்களின் நாடகத்தைக் காண அவர்களது பெற்றோர்கள் வந்திருந்தனர்.

ஒரு வறுமையான கிராமத்திலிருந்து வந்த திறமையான சிறுவனுக்கு, தனது ஊரின் வறுமை நிலையை மாற்றக்கூடிய ஒரு மந்திர தூரிகை கிடைக்கிறது. அதனைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ஒரு ஆசைக்குரிய அரசனின் சவால்களை அச்சிறுவன் எவ்வாறு சமாளிக்கிறான் என்பதே இந்நாடகத்தின் கதை சுருக்கம்.

நாடகத்தின் முடிவில் சிறுவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மந்திர தூரிகை என்னும் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர்.

அகம் நாடகக் குழுவின் பாடக்கலைத்திட்டம் மேம்பாட்டாளரான ஐஸ்வர்யா சண்முகநாதன், “சிறுவர்களிடையே மொழி ஈடுபாட்டை அதிகரிக்க நாடகக்கலை என்னும் கருவியைப் பயன்படுத்தி, இது போன்ற நிகழ்ச்சிகளைத் தயார் செய்கிறோம்” என்றார்.

“சிறுவர்களுக்கு நாடகக்கலையின் சாராம்சங்களை கற்றுக்கொடுத்து, அவர்களுக்குச் சுலபமான முறையில் தமிழைப் புகுத்த இதுபோன்ற பயிலரங்குகள் ஒரு வாய்ப்பாகத் திகழ்கிறது,” என்றார் இந்நாடகத்தின் பயிற்றுவிப்பாளர் கிருஷ்ணா.

இறுதியாக சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குப் பயிலரங்கை முடித்தற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்