பாடப்புத்தகங்கள் முதல் மின்னிலக்கக் கருவிகள் வரை: இன்று பள்ளிகள் எப்படி மாணவர்களை மாற்றியுள்ளன

2 mins read
2e584e79-989d-4300-bd5b-21475bbc4628
பள்ளியில் மாணவர்களின் மின்னிலக்கக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. - படம்: ஊடகம்

முன்பெல்லாம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாவர்கள் பாடப் புத்தகங்களிலிருந்து மனப்பாடம் செய்து, தேர்வுகளை எழுதுவதிலேயே தங்கள் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிட்டது வழக்கம். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற உதவுவதில் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தினர்.

ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. குழுக்களாக எவ்வாறு வேலை செய்வது, நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது, தங்கள் சொந்த நலனைக் கவனித்துக்கொள்வது போன்ற பயனுள்ள வாழ்க்கைத் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள பள்ளிகள் இப்போது உதவுகின்றன.

புத்தகங்களிலிருந்து மட்டும் கற்றுக்கொள்வதற்கு மாறாக, மாணவர்கள் இன்று மடிக்கணினிகள், கணினிகள், திறன்பேசிகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

தற்போது அவர்களுக்கென சுவாரசியமான பாடத்திட்டங்கள் உள்ளன. அதோடு, அவர்கள் நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குத் தயாராகிறார்கள். இனி, கற்றல் என்பது மதிப்பெண்களைப் பற்றியது மட்டுமன்று - ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையான, திறமையான, எதிர்காலத்திற்குத் தயாரான நபராக வளர உதவுவதைப் பற்றியது.

உதாரணத்திற்கு, இப்போதெல்லாம் மாணவர்கள் இளம் வயதிலேயே பல புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். பணி இணைப்புத் திட்டங்களில் தொடங்கி வெளிநாட்டுப் பயணங்கள் வரை பள்ளிகள் நிறைய வாய்ப்புகளை மாணவர்களுக்குத் தருகின்றன.

பள்ளிகள் இந்த வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிக்கக் காரணம், மாணவர்களுக்கு இளம் வயதிலேயே பொறுப்பு, சுய அடையாளம் போன்ற பண்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே. அதுமட்டுமல்லாமல் இந்தப் புதிய அனுபவங்கள், உயர்நிலைப் பள்ளி முடிவில் அவர்களின் ஒட்டுமொத்த கல்விப் பயணத்திற்கு உதவும்.

வேலை இணைப்புத் திட்டங்கள் மாணவர்களுக்கு நிஜ வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. அதோடு குழுப்பணி, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல், தகவல் தொடர்பு போன்ற முக்கியத் திறன்களைக் கற்பிக்கின்றன.

அதே நேரத்தில், வெளிநாட்டுப் பயணங்கள் புதிய கலாசாரங்கள், உலகளாவிய முன்னேற்றத்துக்கும் இளையர்களைத் தயார்ப்படுத்துகின்றன. அத்துடன், இந்த வாய்ப்புகள் சுதந்திரம், நம்பிக்கை, திறந்த மனம் ஆகியவற்றையும் ஊக்குவிக்கின்றன.

தனிப்பட்ட வளர்ச்சிக்கும் எதிர்கால வெற்றிக்கும் இவை முக்கியமானவை. முன்கூட்டியே தொடங்குவதன் மூலம், நவீன உலகின் தேவைகளைக் கையாளவும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி தகவலறிந்து தேர்வுகளைச் செய்யவும் மாணவர்கள் சிறந்த முறையில் தயாராக இருப்பார்கள்.

குறிப்புச் சொற்கள்