என் பெயர் தர்மன். நான் செயிண்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் பள்ளியில் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு பெரிய மீன் தொட்டி இருக்கிறது. அதில் ‘அரோவானா’ என்னும் செல்லப்பிராணியாக ஒரு பெரிய மீனை வளர்க்கிறேன்.
அது வெள்ளை, தங்கம் கலந்த நிறத்தில் இருக்கும். நான் அதற்கு புழுக்களை இரையாக கொடுப்பேன். அந்த மீனை எனக்கு மிகவும் பிடிக்கும்.