ரவி கீதா திவிஜா
பாலர் பள்ளி சிறுவர்களுடன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழியை தயக்கம் இல்லாமல் சரளமாக பேசுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஒரு கலந்துரையாடல் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சிறுவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, அவர்களை தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாட வைத்தனர்.
அத்துடன் சிறுவர்களுக்கு கதைகள் சொல்வது, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுவது போன்ற நடவடிக்கைகள் செயின்ட் மார்கரெட் உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர் குழுவால் போட்டிகைள் நடத்தப்பட்டன. சிறுவர்களும் ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சித்தனர்.
அந்தக் கலந்துரையாடலில் தன் மகனுடன் வந்திருந்த அவரின் தாயார் திருமதி கல்பனா, “என் மகன் இங்கு நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் மிகவும் ஆர்வமுடன் கலந்துகொண்டார். பூங்கா, பள்ளி போன்ற படங்கள் கொண்ட அட்டைகளைக் கொடுத்து அதைப் பற்றி ஆங்கிலம் கலக்காமல் பேசச் சொன்னது அருமையாக இருந்தது. மேலும் ஏற்பாட்டுக் குழுவால் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது என் மகனுக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது,” என்று சொன்னார்.
பெற்றோர் திருமதி இளம்பிறை கூறும்போது,”என் மகனுக்கும் கதைகள் சொல்வது மிகவும் பிடித்திருந்தது. அதாவது அந்த கதைகளை சிறுவர்களுக்கு ஏற்றவாறு சொன்ன விதம், தமிழ் உச்சரிப்பு போன்றவற்றை நான் மிகவும் ரசித்தேன். வீட்டிலும் நான் அதுபோன்று என் மகனிடம் பேசி பழக இருக்கிறேன்,” என்று கூறினார்.
மேலும் ‘பிள்ளைகளின் தமிழ்மொழி கற்றலில் பெற்றோர்களின் பங்கு’ என்ற தலைப்பில் பெற்றோருக்கு கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும் செய்திகள் பக்கம் 6-7ல் பார்க்க.